உக்ரைன் மீது ‛பயோ வெப்பன் அட்டாக்’? ரஷ்யாவின் பிளானே வேறு.. ஜாக்கிரதை! அமெரிக்கா பரபர வார்னிங்
வாஷிங்டன்: உக்ரைனில் உயிரி ஆயுதம் (பயோவெப்பன்) திட்டம் செயல்படுத்தப்படுவதாக கூறும் ரஷ்யாவின் குற்றச்சாட்டுக்கு அமெரிக்கா மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும் உக்ரைன் மீது விரைவில் உயிரி ஆயுதத்தை ரஷ்யா பயன்படுத்துவதற்கான அறிகுறி இதுவாகும் என அமெரிக்கா எச்சரித்துள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளது. இன்று 15வது நாளாக போர் தொடர்கிறது. உக்ரைனுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன. இதனால் ரஷ்யா மீது அந்நாடுகள் கடும் பொருளாதார தடைகளை விதித்து வருகின்றன.
இதனால் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் கடும் கோபத்தில் உள்ளார். பிற நாடுகளிடம் இருந்து உதவி பெற்றால் மோசமான விளைவுகளை சந்திக்கும் என உக்ரைனுக்கும், அதற்கு உதவும் நாடுகளுக்கும் அவர் கடும் எச்சரிக்கை விடுத்தார்.

உயிரி ஆயுத குற்றச்சாட்டு
இதனால் உக்ரைன் மீதான போர் ரஷ்யா உள்ளிட்ட பிற வல்லரசு நாடுகளுக்கு இடையேயும் மோதலை ஏற்படுத்தி உள்ளது. இதனால் அமெரிக்கா, பிரிட்டன் ஆகியவை ரஷ்யா மீதும், ரஷ்யா இந்த 2 நாடுகள் மீதும் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது. இந்நிலையில், மார்ச் 6ல் ரஷ்யாவின் வெளியுறவுத்துறை அமைச்சகம் ஒரு ட்வீ ட் வெளியிட்டது. அதில், ‛‛ அமெரிக்கா நிதி உதவியுடன் உக்ரைன் கீவ் நகரில் உயிரி ஆயுத திட்டங்களுக்கான தடயங்கள் அழிக்கப்படுவதை ரஷ்ய படைகள் கண்டுபிடித்தன'' என கூறியது.

விளஇதுதொடர்பாக ரஷ்ய வெளியுறவுத் துறை செய்தி தொடர்பாளர் மரியா ஜாகரோவா கூறும்போது, "ரஷ்யா - உக்ரைன் இடையே பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. உக்ரைன் அரசை கவிழ்க்கும் எண்ணம் இல்லை. உக்ரைன் மீதான ரஷ்யாவின் சிறப்பு ராணுவ நடவடிக்கையின்போது, கீவ் பகுதியில் அமெரிக்க நிதி ஆதாரத்துடன் செயல்படுத்தப்பட்ட ராணுவ உயிரி ஆயுதத் திட்டத்திற்கான தடயங்கள் கண்டறியப்பட்டுள்ளது. இதற்கான ஆவணங்கள் உள்ளன. அமெரிக்கா இதுதொடர்பாக விளக்கம் அளிக்க வேண்டும்’’ என கூறியிருந்தார். க்கம் கோரிய ரஷ்யா
இதுதொடர்பாக ரஷ்ய வெளியுறவுத் துறை செய்தி தொடர்பாளர் மரியா ஜாகரோவா கூறும்போது, "ரஷ்யா - உக்ரைன் இடையே பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. உக்ரைன் அரசை கவிழ்க்கும் எண்ணம் இல்லை. உக்ரைன் மீதான ரஷ்யாவின் சிறப்பு ராணுவ நடவடிக்கையின்போது, கீவ் பகுதியில் அமெரிக்க நிதி ஆதாரத்துடன் செயல்படுத்தப்பட்ட ராணுவ உயிரி ஆயுதத் திட்டத்திற்கான தடயங்கள் கண்டறியப்பட்டுள்ளது. இதற்கான ஆவணங்கள் உள்ளன. அமெரிக்கா இதுதொடர்பாக விளக்கம் அளிக்க வேண்டும்'' என கூறியிருந்தார்.

முட்டாள்தனமானது
இதற்கு அமெரிக்கா தரப்பில் விளக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் நெட் பிரைஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர், ‛‛அமெரிக்கா உக்ரைனுடன் இணைந்துள்ளது. இருநாடுகளும் உக்ரைனில் ரசாயனம், உயிரி ஆயுத தாக்குதல் நடவடிக்கை மேற்கொள்ள உள்ளது என ரஷ்யா தரப்பில் அப்பட்டமான பொய்கள் பரப்பப்பட்டு வருகிறது. ரஷ்யா தனது போர் நடவடிக்கையை நியாயப்படுத்தும் நோக்கில் தவறான குற்றச்சாட்டுகளை கூறி வருகிறது. ரஷ்யாவின் இந்த குற்றச்சாட்டு முட்டாள்தனமானது. மேலும் ரஷ்யாவின் தவறுகளை மறைக்க மேற்கத்திய நாடுகளை குற்றம்சாட்டுவதை வாடிக்கையாக கொண்டுள்ளது. '' என கூறியுள்ளார்.
Recommended Video

ரஷ்யாவின் அறிகுறி
இதேபோல், அமெரிக்க வெள்ளை மாளிகையின் செய்தி தொடர்பாளர் ஜென் ப்சாகி கூறுகையில், ‛‛ரஷ்யாவின் குற்றச்சாட்டு மோசமானது. சீன அதிகாரிகள் கூறுவது போன்று ரஷ்யா சதித்திட்டத்துடன் குற்றச்சாட்டை கூறியுள்ளது. உக்ரைனில் ரசாயனம் அல்லது உயிரி ஆயுதங்களை பயன்படுத்த ரஷ்யா முயற்சிக்கும் அறிகுறியாக தான் இதை பார்க்க வேண்டியுள்ளது. இதனால் நாம் அனைவரும் ரஷ்யாவை கவனிக்க வேண்டும்'' என டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார். முன்னதாக உக்ரைனின் உயிரி ஆயுத ஆராய்ச்சிகளை ரஷ்ய படைகள் கைப்பற்றினால் உக்ரைனுடன் சேர்ந்து செயல்படுவோம் என அமெரிக்க கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
-
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு












Click it and Unblock the Notifications