எடிட் பட்டன் டூ ப்ளூ டிக்.. ட்விட்டரில் எலான் மஸ்க் நிகழ்த்தப் போகும் 5 முக்கிய மாற்றங்கள் என்னென்ன?

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: எலான் மஸ்க் டிவிட்டரில் செய்ய போகும் டாப் 5 மாற்றங்கள் என்னென்ன தெரியுமா. இவற்றை எலான் மஸ்க் ஏற்கெனவே பட்டியலிட்டுள்ளார்.

ட்விட்டர் நிறுவனத்தின் பங்குகளை முழுவதுமாக நேற்று இரவு எலான் மஸ்க் வாங்கியுள்ளார். ஒரு பங்கு 54 டாலர் வீதம் மொத்த பங்குகளையும் 43 பில்லியன் டாலருக்கு வாங்கியுள்ளார்.

இந்த ட்விட்டரை மேம்படுத்தி புதிய மாற்றங்களை கொண்டு வரப்போவதாக ட்விட்டரை வாங்கியவுடன் தனது முதல் ட்வீட்டில் எலான் மஸ்க் பதிவிட்டிருந்தார். அந்த வகையில் அவர் மாற்றம் செய்யப்படும் முக்கிய அம்சங்கள் என்னென்ன என்பதை பார்ப்போம்.

 1. கருத்து சுதந்திரம்

1. கருத்து சுதந்திரம்

முதலாவது கருத்து சுதந்திரம்- ட்விட்டரில் கருத்து சுதந்திரம் வேண்டும் என்பதில் மஸ்க் தெளிவாக உள்ளார். நேற்று போட்ட ட்வீட்டிலும் ஜனநாயகத்தின் அடிதளமே கருத்து சுதந்திரம் என பதிவிட்டிருந்தார். மனித குலத்தின் எதிர்காலம் பற்றிய விஷயங்கள் விவாதிக்கப்படுவது இந்த ட்விட்டரில்தான். என்னை விமர்சனம் செய்தவர்களும் இந்த ட்விட்டர் தளத்தில் இருக்க வேண்டும். அதுதான் கருத்து சுதந்திரத்தின் அர்த்தமாகும் என எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். கருத்து சுதந்திரத்தை நோக்கி சென்றால், வெறுப்பு பேச்சுகளும் பகிரப்படுமே என மனித உரிமை குழுவினர் கவலை தெரிவித்துள்ளார்கள்.

 2. எடிட் பட்டன்

2. எடிட் பட்டன்

இரண்டாவது- எடிட் பட்டன்- ட்விட்டரில் எடிட் பட்டனை அனுமதிக்க வேண்டும் என மஸ்க் ஏற்கெனவே கேட்டிருந்தார். கடந்த ஏப்ரல் மாதம் ட்விட்டரில் எடிட் பட்டன் வேண்டுமா என தனது ட்விட்டர் பக்கம் மூலம் ஒரு கருத்து கணிப்பை மஸ்க் நடத்தினார். இதில் 4 மில்லியன் பேர் வாக்களித்தனர். 70 சதவீதம் பேர் எடிட் பட்டன் வேண்டும் என்றனர். இந்த எடிட் பட்டன் மூலம் ட்விட்டரில் ஏதேனும் தவறுதலாக அனுப்பிவிட்டாலும் அதில் மாற்றங்களை கொண்டு வர முடியும்.

 3. வெளிப்படைத்தன்மை

3. வெளிப்படைத்தன்மை

மூன்றாவது- வெளிப்படைதன்மை- ட்விட்டரில் அதிக வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும் என மஸ்க் விரும்புகிறார். ஸ்பாமை குறைத்துக் கொண்டு ட்விட்டர் அல்காரிதத்தை ஓபன் சோர்ஸாக மாற்றுவதை எலான் மஸ்க் ஏற்கெனவே தெரிவித்துள்ளார். இதுகுறித்து எலான் மஸ்க் கடந்த மாதம் கருத்து கணிப்பு நடத்தியுள்ளார். அதில் 11 லட்சம் பேர் வாக்களித்துள்ளனர். 82.7 சதவீதம் பேர் ஓபன் சோர்ஸ் வேண்டும் என தெரிவித்துள்ளனர். ட்விட்டர் அல்காரிதம் ஓபன் சோர்ஸ் என்றால் ட்வீட்டுகளுக்கு எதன் அடிப்படையில் முன்னுரிமை அளிக்கப்படுகிறது. விதியை மீறும் போது மற்றவர்கள் எவ்வாறு தண்டிக்கப்படுகிறார்கள், மற்றவர்களின் ட்வீட் எந்தெந்த காரணிகளை அடிப்படையாகக் கொண்டு வைரலாகிறது என்பதை பொதுமக்கள் பார்க்க முடியும்.

 4. அனைவருக்கும் ப்ளூடிக்

4. அனைவருக்கும் ப்ளூடிக்

நான்காவதாக அனைவருக்கும் ப்ளூடிக்- எலான் மஸ்க் விலைக்கு வாங்கும் வரை ட்விட்டரில் அரசியல்வாதிகள், பத்திரிகையாளர்கள், பிரபலங்களின் கணக்குகளுக்கு ப்ளூ டிக் கொடுப்பதன் மூலம் அங்கீகாரத்தை வழங்குகிறது. இவர்களில் யாரேனும் ஒருவர் போலி கணக்கை உருவாக்கினால் அவர்கள் ப்ளூ டிக்கை இழக்க நேரிடும். ஆனால் ப்ளூ டிக் வாங்கும் செயல்முறையானது மிகவும் கடினமானதாக இருக்கிறது. பலருக்கு இது எரிச்சலை ஏற்படுத்துகிறது. கடந்த 2009 ஆம் ஆண்டு முதல் ப்ளூ டிக்குகளை டிவிட்டர் கொடுத்து வருகிறது. பின்னாளில் இந்த ப்ளூ டிக் கேட்டு நிறைய பேர் அப்ளை செய்ததால் அதற்கான விதிகளை கடுமையாக்கியது. அனைவருக்கும் ப்ளூ டிக் கொடுக்கப்பட வேண்டும் என எலான் மஸ்க் கூறியுள்ளார்.

Recommended Video

    Elon Musk Buys Twitter Officially For 44 Billion Dollar
     5. பிரபலங்கள் ட்விட்டரை விட்டு விலகுவர்

    5. பிரபலங்கள் ட்விட்டரை விட்டு விலகுவர்

    5ஆவதாக சில பிரபலங்கள் ட்விட்டரை விட்டு விலகுவர்- ட்விட்டரை எலான் மஸ்க் வாங்கிவிட்டதால் சில பிரபலங்கள் டிவிட்டர் தளத்தை விட்டு விலகக் கூடும் என தெரிகிறது. பிரிட்டிஷ் நடிகை ஜமீலா ஜமீல் ட்விட்டரை விட்டு விலகுவதாக தெரிவித்துள்ளார். இனி ட்விட்டர் தளம், சட்டமே இல்லாத வெறுக்கத்தக்க, இனவெறி மதவெறி , பெண் வெறுப்பு கொண்ட இடமாக மாறும் என எதிர்பார்ப்பதாக ஜமீலா கூறியுள்ளார். அது போல் கருத்து சுதந்திரத்தை கண்டும் அவர் அஞ்சியுள்ளார்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+