For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

புதிதாக திருமணமான வீட்டில் மறந்தும் இந்த தவறுகளை செய்து விடாதீர்கள் - வறுமையை வரவேற்காதீர்கள்

திருமணமான வீட்டில் உடனடியாக சில விசயங்களை செய்தால் வீட்டில், இழப்புகள் அதிகமாக இருக்கும் என்று சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது.

Google Oneindia Tamil News

சென்னை: சாஸ்திர சம்பிரதாயங்களை நம்முடைய முன்னோர்கள் காரண காரியம் இன்றி சொல்லி வைத்திருக்க மாட்டர்கள். நாம் அறியாமல் செய்யும் சில தவறுகள் நம்மை மீள முடியாத துன்பத்தில் தள்ளிவிடும். புதிதாக திருமணம் நடந்த வீட்டில் என்ன விசயங்கள் செய்யலாம் என்ன விசயங்கள் செய்யக்கூடாது என்று பார்க்கலாம்.

புதிதாக திருமணம் நடந்த வீட்டில் ஆறு மாதத்திற்குள் சில விஷேசங்களை செய்யக்கூடாது என்று நம்முடைய முன்னோர்கள் கூறி வைத்துள்ளனர். அந்த சாஸ்திரங்களை மீறி நாம் அந்த விஷேசங்களை செய்தால் குடும்பத்தில் சில பிரச்சினைகளை சந்திக்க வேண்டியிருக்கும்.

எனவே சாஸ்திர சம்பிரதாயங்களை மீறி மறந்தும் இந்த தவறுகளை செய்யக்கூடாது என்பதற்காகவே இந்த பதிவு.
அப்படி மீறி செய்து விட்டு கஷ்டங்களை அனுபவிப்பவர்களுக்கு சில பரிகாரங்களும் கூறப்பட்டுள்ளது மேற்கொண்டு படியுங்கள்.

பெண்களுக்கு மூன்று முறை திருமணம் செய்யும் ஆந்திர கிராமம்பெண்களுக்கு மூன்று முறை திருமணம் செய்யும் ஆந்திர கிராமம்

புனித தலங்களுக்கு யாத்திரை

புனித தலங்களுக்கு யாத்திரை

பிள்ளைகளுக்கு திருமணம் நடந்த பின்னர் வீட்டில் உள்ள பெரியவர்கள் புனித யாத்திரை கிளம்புவார்கள். அப்படி செல்லக்கூடாது. அதுபோல திருமணமான தம்பதியர்கள் ஆறு மாதத்திற்குள், காசி ராமேஸ்வரம் என்று புண்ணிய ஸ்தலங்களுக்கு யாத்திரை செல்லக்கூடாதாம். அந்த வீட்டில் உள்ள மற்ற பெரியவர்களும் இப்படிப்பட்ட இடங்களுக்கு புனித யாத்திரை செல்லக்கூடாது என்று சொல்லப்பட்டுள்ளது.

மொட்டை அடிக்கக் கூடாது

மொட்டை அடிக்கக் கூடாது

புதிதாக திருமணம் நடந்த வீட்டில், உங்கள் வீட்டில் இருக்கக்கூடிய, மற்ற குழந்தைகளுக்கு மொட்டை அடித்து காது குத்தும் விழா நடத்தக்கூடாது என்று சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது. அப்படி மொட்டை அடித்து காது குத்தினால் பாதிப்பு அந்த குழந்தைக்குத்தான் ஏற்படுமாம். தீராத உடல் நல பாதிப்பில் சிக்கி துயரப்பட நேரிடுமாம்.

புதுமனைப்புகுவிழா

புதுமனைப்புகுவிழா

வீட்டைக்கட்டிப்பார்... கல்யாணம் பண்ணிப்பார் என்று சொல்வார்கள். நாம் புது வீடு கட்டி கிரகப்பிரவேசம் செய்து விட்டு மகனுக்கோ மகளுக்கோ திருமணம் நடத்தலாம். ஆனால் புதிதாக திருமண நடந்த ஆறு மாதத்திற்குள் புது வீட்டிற்கு கிரகப்பிரவேசம் நடத்தி குடி போகக்கூடாது என்று சாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ளது.

பண விரையம் அதிகரிக்கும்

பண விரையம் அதிகரிக்கும்

சாஸ்திர சம்பிரதாயங்களை மீறி இந்த தவறுகளை செய்பவர்களுக்கு மனக்கஷ்டமும், ஈடு செய்ய முடியாத இழப்புகளும் ஏற்படுமாம். பண விரையமும் அதிகரிக்கும். எனவே இந்த தவறுகளை செய்யாமல் தப்பித்துக்கொள்வது நல்லது. தவிர்க்கமுடியாமல் அல்லது தெரியாமல் தவறு செய்தவர்களுக்கு அதற்கான பரிகாரமும் கூறப்பட்டுள்ளது.

புதன்கிழமை பரிகாரம்

புதன்கிழமை பரிகாரம்

திருமணமான வீட்டிலுள்ளவர்கள் 6 மாதத்திற்கு முன்பாகவே, புனித யாத்திரை சென்று வரும் சூழல் ஏற்பட்டால், புதன் கிழமைகளில் உங்கள் வீட்டு அருகில் இருக்கும் ஏதாவது ஒரு கோவிலுக்கு சென்று 5 மண் அகல் விளக்கு வாங்கி அதில் நல்லெண்ணெய் ஊற்றி தீபம் ஏற்றி வைத்துவிட்டு, வெண்பொங்கலை பிரசாதமாகக் செய்து வைத்து, பக்தர்களுக்கு வினியோகம் செய்து வரவேண்டும் என்றும் நம்முடைய சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது. 5 வாரங்கள் இப்படி செய்ய வேண்டும்.

குழந்தைக்கு தோஷம் நீங்க பரிகாரம்

குழந்தைக்கு தோஷம் நீங்க பரிகாரம்

திருமணமான பின்பு 6 மாதங்கள் முடிவதற்குள் வீட்டில் உள்ள குழந்தைக்கு மொட்டை அடித்து காது குத்தும் விழா நடத்தியிருந்தால் அந்த விசேஷம் நடத்தப்பட்ட அந்த குழந்தைக்கு எந்த ஒரு தோஷமும் தாக்காமல் இருக்க தொடர்ந்து 11 நாட்கள் ஏதாவது ஒரு கோவிலுக்கு அழைத்துச் சென்று, அந்த கோவிலில் கிடைக்கும் அபிஷேக தீர்த்தத்தை வாங்கி அந்த குழந்தையின் தலையில் தெளிக்கவேண்டும்.

முருகன் வழிபாடு

முருகன் வழிபாடு

திருமணமான 6 மாதத்திற்குள் புதுமனை புகுவிழா நடத்தியிருந்தால் ஏற்படும் கஷ்டங்கள் நீங்க முருகப் பெருமானை வணங்குவது நல்லது. செவ்வாய்க்கிழமை அன்று 9 நெய் தீபத்தை, 9 வாரங்கள், வீட்டில் ஏற்றி, முருகப் பெருமானை நினைத்து வழிபாடு செய்ய வேண்டும். உங்களால் முடிந்த பிரசாதத்தை செய்து செவ்வாய்க்கிழமை அன்று, கோவிலுக்கு எடுத்து சென்று, நைய்வேத்தியம் செய்து, அங்கு உள்ள பக்தர்களுக்கு அந்த பிரசாதத்தை விநியோகம் செய்ய வேண்டும். 9 வாரங்கள் இப்படி செய்தால் பாதிப்புகள் படிப்படியாகக் குறையும்.

English summary
Spiritual News in Tamil : Don't do these mistakes on newly married home (புதிதாக திருமணமான வீட்டில் செய்யக்கூடாத சில காரியங்கள்) Some mistakes we make unknowingly will push us into irreversible suffering. Let’s look at what can and cannot be done in a newly married home.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X