கடன் பிரச்சினை தீர.. பயம் அகல.. பைரவருக்கு 12 ராசிக்காரர்களும் இப்படி விளக்கேற்றுங்கள்
சென்னை: வறுமை நீங்கி வளம் பெருக கால பைரவருக்கு விளக்கேற்றி வழிபட வேண்டும். அஷ்டமி நாளில் 11 தீபங்கள் ஏற்றி வழிபட கடன் பிரச்சினை நீங்கும். பயம் அகலும் எதிரிகள் தொல்லை நீங்கும். பைரவருக்கு வில்வம் மற்றும் வாசனை மலர்களால் அர்ச்சனை செய்து வணங்கினால் கடன் பிரச்சினைகள் நீங்கும். மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களும் கால பைரவரை எந்த நாளில் விளக்கேற்றி வழிபட வேண்டும் என்று பார்க்கலாம்.
கார்த்திகை மாதம் தேய்பிறை அஷ்டமி பைரவருக்கு ஜென்ம அஷ்டமி ஆகும். இந்த தினத்தில் அடிப்படையாகக் கொண்டு ஒவ்வொரு மாதமும் தேய்பிறை அஷ்டமி அன்று பைரவர் வழிபாடு நடத்தப்படுகிறது. சித்திரை பரணி, ஐப்பசி பரணி போன்ற மாதங்களில் வரக்கூடிய பரணி நட்சத்திரம் கால பைரவருக்கு விசேஷ நாட்கள் ஆகும். ஏனெனில் பரணி நட்சத்திரத்தில்தான் பைரவர் அவதரித்தார். எனவே பரணி நட்சத்திரக்காரர்கள் பைரவரை வழிபட்டால் புண்ணியமும், பலனும் அதிகம் கிடைக்கும்.
தை மாதம் செவ்வாய்க் கிழமைகளில் பைரவரை வழிபட்டு விரதம் இருப்பது மிகுந்த பலன்களை கொடுக்கும். எல்லா அஷ்டமிகளிலும் பைரவர் விரதம் இருக்கலாம். ஆனால் செவ்வாய்க் கிழமைகளில் அஷ்டமி இணைந்து வந்தால் அதைவிடச் சிறப்பான நாள் ஏதுமில்லை. குறைந்தபட்சம் 21 அஷ்டமிகள் தொடர்ந்து விரதம் இருக்க வேண்டும்.

பைரவர் வழிபாடு
பைரவ விரதத்தின் நோக்கமே கேடுகளை அழிப்பதுதான். அதிகாலையில் நீராடி, பைரவரை மனதில் நினைத்து வணங்க வேண்டும். பகலில் ஏதாவது ஒரு பொழுது மட்டும் எளிய உணவு சாப்பிடலாம். இரவில் கண்டிப்பாக சாப்பிடக்கூடாது. அன்று மாலை பைரவருக்கு வடை மாலை சாற்றி வழிபட வேண்டும். வடைமாலை சாற்ற முடியாதவர்கள் விளக்கேற்றி வழிபடலாம். மறுநாள் நவமியன்று காலை மீண்டும் கோவிலுக்கு சென்று விநாயகர், சிவன், அம்பாள், பைரவரை வணங்கி, ஏழைகளுக்கு அன்னதானம் அளிக்க வேண்டும்.

பஞ்ச தீப எண்ணெய்
பைரவருக்கு பௌர்ணமிக்கு பின்வரும் தேய்பிறை அஷ்டமியில் பஞ்ச தீபம் ஏற்றி வழிபட்டால் காலத்தினால் தீர்க்க முடியாத கடன் தொல்லைகள் நீங்கும். இலுப்பை எண்ணெய், விளக்கெண்ணெய், தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய், பசு நெய் பஞ்ச தீப எண்ணெய் ஆகும். இவற்றை தனித்தனி தீபமாக அகல் விளக்கில் தீபம் ஏற்ற வேண்டும். பைரவருக்கு இந்த பஞ்ச தீபம் ஏற்றி வழிபட்டால் நினைத்த காரியம் நிறைவேறும் என்பது ஐதீகம்.

இழந்த சொத்துக்கள் திரும்ப வரும்
ஏதோ ஒரு சூழ்நிலையில் நாம் சொத்துக்களையோ நகை, பணத்தையோ இழந்திருப்போம். பைரவரின் சன்னதி முன்னால் 27 மிளகை வெள்ளை துணியில் சிறு மூட்டையாக கட்டி அகல் விளக்கில் வைத்து நல்லெண்ணெய் ஊற்றி தீபமேற்றி 27 நாட்கள் வழிபட்டால் இழந்த பொருட்களும், சொத்துக்களும் திரும்ப கிடைக்கும்.

செய்வினை கோளாறு அகலும்
தடைபட்ட திருமணம் நடக்கவும், எதிரிகள் தொல்லை நீங்கவும் ஞாயிற்றுக்கிழமைகளில் ராகுகால நேரத்தில் பைரவரை வணங்க வேண்டும். அதனால் உடனே நன்மை உண்டாகும். பில்லி, சூனியம் மற்றும் ஏவல் போன்ற செய்வினை கோளாறுகள் அகலும்.

புத்திரபாக்கியம் தரும் பைரவர்
குழந்தை செல்வம் பெற, திருமணமாகி பல வருடங்களாகியும் குழந்தைப்பேறு இல்லாதவர்கள் ஆறு தேய்பிறை அஷ்டமி நாட்களில் சிவப்பு அரளி பூக்களால் பைரவரை அர்ச்சனை செய்து, ஏழை குழந்தைகளுக்கு அன்னதானம் வழங்கி வழிபட விரைவில் அவர்களுக்கு குழந்தைப்பேறு கிடைக்கும்.

சனியால் ஏற்படும் தோஷங்கள் நீங்கும்
சனீஸ்வரரின் குரு பைரவர் என்பதால், பைரவரை வணங்கினால், சனிபகவான் மகிழ்ச்சியடைவார். ஏழரை சனி, அஷ்டமத்து சனி, அதிக துன்பங்களை தரமாட்டார். எனவே, பைரவரை வணங்கினால் சனி பகவானால் உண்டாகும் இன்னல்கள் மற்றும் தோஷங்கள் யாவும் நீங்கும்.

கால பைரவர் ஆலயங்கள்
காலபைரவர் அவதரித்த கால பைரவாஷ்டமி நாளில் சிறப்பு பூஜைகளில் கலந்து கொண்டால் எல்லாவித கஷ்டங்களும் நீங்கி சகல சௌபாக்கியங்களும் பெறுவார்கள் என்பது நம்பிக்கை. இன்றைய தினம் அனைத்து சிவாலயங்களிலும் கால பைரவாஷ்டமி வெகு விமர்சையாகக் கொண்டாடப்பட்டது. காசி பைரவர் ஆலயம், இலுப்பைக்குடி சொர்ணாகர்ஷண பைரவர் ஆலயம், சீர்காழி சட்டைநாதர் ஆலயம், வாஞ்சியத்தில் யோக பைரவர் சந்நிதி, புதுவை இடையார் பாளையம் சொர்ணாகர்ஷண பைரவர் ஆலயம், தன்வந்திரி ஆரோக்கிய பீடத்தில் உள்ள சொர்ணாகர்ஷண பைரவர், அஷ்ட பைரவருக்கு ஸ்ரீ ருத்ர ஹோமம், ஸ்ரீ பைரவர் ஹோமம் போன்றவை நடைபெற்றது.

அதியமான் கோட்டை பைரவர்
நினைத்த காரியம் விரைவில் நிறைவேற தருமபுரி அதியமான்கோட்டை காலபைரவரை வணங்கலாம்.
காலபைரவர் கோவில் இந்தியாவில் இரண்டு இடங்களில் மட்டுமே உள்ளது. முதல் இடம் காசியில், இரண்டாம் இடம் தர்மபுரி அதியமான் கோட்டை. மொத்தம் 64 பைரவர்கள் உள்ளனர். இந்த 64 பைரவர்களில் முதன்மை வாய்ந்த பைரவர் உன்மந்திர பைரவர். உன்மந்திர பைரவர் இக்கோவிலில் வீற்றிருக்கிறார். ஆதியமான் மன்னரால் 9ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது.

ஞாயிற்றுக்கிழமை ராகு காலம்
ஞாயிற்றுக்கிழமை நாளில் சிம்ம ராசிக்காரர்கள் வழிபடுவது சிறப்பு. திருமணம் தள்ளிப்போனால் ஞாயிற்றுக்கிழமை ராகு காலத்தில் பைரவருக்கு வடைமாலை சாற்றி வழிபடலாம். தடைகள் நீங்கித் திருமணம் கைகூடும். கடன் வாங்கி வட்டியும், அசலும் கட்ட முடியாமல் தவிப்பவர்கள் ராகு காலத்தில் காலபைரவருக்கு முந்திரிப்பருப்பு மாலை கட்டி, புனுகு சாற்றி, வெண் பொங்கல் நைவேத்தியம் வைத்து வழிபடலாம்.

கண் நோய் தீர வழிபாடு
திங்கட்கிழமை நாளில் கடக ராசிக்காரர்கள் வழிப்படுவது சிறப்பு. வில்வார்ச்சனை செய்திட சிவனருள் கிட்டும். திங்கட்கிழமை அல்லது சங்கடஹர சதுர்த்தியன்று பைரவருக்கு பன்னீர் அபிஷேகம் செய்து சந்தனக் காப்பிட்டு புனுகு பூசி நந்தியாவட்டை மலர் மாலை அணிவித்து வழிபட்டு வந்தால் கண் சம்பந்தப்பட்ட நோய்கள் விலகும்.
பைரவ விரதத்தின் நோக்கமே கேடுகளை அழிப்பதுதான். மேஷம் விருச்சிக ராசிக்காரர்கள் செவ்வாய்க்கிழமை விளக்கேற்றி வழிபடுவது சிறப்பு மாலையில் மிளகு தீபம் ஏற்றி வழிபட்டு வந்தால் இழந்த பொருளைத் திரும்பப் பெறலாம். எல்லா அஷ்டமிகளிலும் பைரவர் விரதம் இருக்கலாம்.

விளக்கேற்றி வழிபடுங்கள்
புதன்கிழமையன்று மிதுனம், கன்னி ராசிக்காரர்கள் இந்த கிழமையில் வழிபடுவது சிறப்பு. நெய் தீபம் ஏற்றி வழிபட்டால் பூமி லாபம் கிடைக்கும். வியாழக்கிழமையன்று தனுசு, மீனம் ராசிக்காரர்கள் இந்த கிழமையில் வழிபடுவது சிறப்பு. விளக்கேற்றி வந்தால் ஏவல், பில்லி சூன்யம் விலகும். வெள்ளிக்கிழமையன்று ரிஷபம், துலாம் ராசிக்காரர்கள் இந்த கிழமையில் வழிபடுவது சிறப்பு மாலையில் வில்வ இலைகளாலும், வாசனை மலர்களாலும் சகஸ்ரநாம அர்ச்சனை செய்து வந்தால் வறுமை நீங்கி, செல்வப் பேறு கிட்டும்.

சனிக்கிழமை
சனிக்கிழமை மகரம், கும்ப ராசிக்காரர்கள் வழிபடுவது சிறப்பு. சனி பகவானுக்கு குரு பைரவர். ஆகவே சனிக்கிழமை அன்று இவரை பிரத்யேகமாக வழிபடுவதால் அஷ்டமச்சனி, ஏழரைச்சனி, அர்த்தாஷ்டமச் சனி விலகி நல்லவை நடக்கும். கால பைரவர் உடலில் பூமியைத் தாங்கும் எட்டு நாகங்களும் மாலையாக இருந்து அலங்கரிப்பதால் இவரை வழிபட்டால் சர்ப்ப தோஷங்களும் நீங்கும்.

பதவி உயர்வு கிடைக்கும்
சனி பிரதோஷத்தன்று பைரவருக்கு சகஸ்ரநாம அர்ச்சனை செய்து அவரவர் வசதிக்கேற்ப தேங்காய், தேன், தயிர் அன்னம் படைத்து வழிபட்டு பிரசாதமாகப் பக்தர்களுக்கு விநியோகிக்க வழக்குகளில் வெற்றி, வியாபாரத்தில் லாபம் கிட்டும். எதிரிகளால் ஏற்படும் தொல்லை மற்றும் பில்லி, சூனியம் போன்ற மந்திரத் தொல்லைகளும் அடியோடு அகலும். அஷ்டமி திதியில் ஆயில்யம், சுவாதி, மிருகசீரிஷம் நட்சத்திர தினங்களிலும் பைரவரை வழிபட்டால் உத்தியோகத்தில் மதிப்பும், பதவி உயர்வும் கிட்டும். தொழிலில் லாபம் கிட்டும்.

எம பயம் விலகும்
தை மாதம் முதல் செவ்வாய்க்கிழமை தொடங்கி ஒவ்வொரு செவ்வாய் தோறும் பைரவரை வணங்கி கால பைரவ அஷ்டகம் படித்து வந்தால் எதிரிகளை அழித்து, கடன்கள் தீர்ந்து, யம பயம் மட்டுமில்லாது எவர் பயமுமின்றி நீண்ட நாள் . தேய்பிறை அஷ்டமியில் பஞ்ச தீபம் ஏற்றி வழிபட்டால் காலத்தினால் தீர்க்க முடியாத தொல்லைகள் நீங்கும். நல்லருள் கிட்டும். பஞ்ச தீபம் என்பது இலுப்பை எண்ணெய், விளக்கெண்ணெய், தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய், பசு நெய் ஆகும். இவற்றை தனித்தனி தீபமாக ஏற்ற வேண்டும். அகல் விளக்கில் ஏற்றலாம். பைரவருக்கு இந்த பஞ்ச தீபம் ஏற்றி வழிபட்டால் நினைத்த காரியம் நிறைவேறும் என்பது ஐதீகம்.
-
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
"இனி அவர்கள் முகத்தையே பார்க்க விரும்பல".. திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி GR சுவாமிநாதன் காட்டம் -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை?












Click it and Unblock the Notifications