Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் கந்த சஷ்டி கோலாகலம்..திருத்தணியில் புஷ்பாஞ்சலி

Subscribe to Oneindia Tamil

சென்னை: முருகப்பெருமான் ஆலயங்களில் கந்த சஷ்டி விழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் விரதம் இருந்து வழிபட்டு வருகின்றனர். முருகப்பெருமானின் ஆலயங்களில் சூரசம்ஹாரம் நடைபெறும் நிலையில் அறுபடை வீடுகளில் திருத்தணியில் மட்டும் சூரசம்ஹாரம் நடைபெறாமல் புஷ்பாஞ்சலி நடைபெறும்.

பழனியில் கந்தசஷ்டி திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் இன்று மாலை நடைபெறுகிறது. முன்னதாக சஷ்டி விரதம் மேற்கொண்ட பக்தர்கள் பழனிமலைக் கோவில் மற்றும் திருஆவினன்குடி கோவிலில் வாழைத்தண்டு விரதத்தை மேற்கொண்டு வருகின்றனர்.

அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனியில் கடந்த 25 ம்தேதி காப்பு கட்டுதலுடன் கந்தசஷ்டி திருவிழா தொடங்கியது. இதனையடுத்து பக்தர்கள் கந்த சஷ்டி விரதம் மேற்கொண்டனர். கந்தசஷ்டி திருவிழாவின் ஆறாம் நாளான இன்று மாலை பழனி கிரி வீதிகளில் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

 பழனி மலை முருகன்

பழனி மலை முருகன்

ஆறு நாட்கள் கடும் விரதம் மேற்கொண்டு இருந்த பக்தர்கள் ஆறாம் நாளான இன்று காலை முதல் திருவாவினன்குடி மற்றும் பழனி மலைக்கோவிலில் முருகனை வழிபட்டு ஆறுநாட்களுக்கு பிறகு விரதத்தை நிறைவு செய்யும் வகையில் வாழைத்தண்டு விரதம்‌ மேற்கொண்டனர்.

சூரசம்ஹாரம்

சூரசம்ஹாரம்

சூரசம்ஹாரம் நிகழ்ச்சி முடிந்து, சூரனை வெற்றிவாகை சூடியதை அடுத்து நாளை அருள்மிகு சண்முகர்-வள்ளி, தெய்வயானை சமேதருக்கு திருக்கல்யாணம் வைபவம் முடிந்தவுடன் சஷ்டி விரதம் இருந்துவந்த பக்தர்கள் சாப்பாட்டு விரதம் மேற்கொண்டு விரதத்தை பூர்த்தி செய்வர். இன்று மாலை நடைபெறவுள்ள சூரசம்ஹாரம் நிகழ்ச்சியை காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் பழனியில் குவிந்துள்ளனர். சூரசம்ஹாரம் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் பக்தர்களின் பாதுகாப்பிற்காக ஐந்நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

சுவாமிமலை

சுவாமிமலை


கும்பகோணம் அருகேயுள்ள சுவாமிமலை, சுவாமிநாத சுவாமி திருக்கோயில், முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் நான்காம் படை வீடாகும், இங்கு 60 தமிழ் வருட தேவதைகளும், 60 படிக்கட்டுகளாக அமையப் பெற்ற கட்டுக்கோயிலாகும் இங்கு தந்தை சிவபெருமானுக்கே, குருவாக இருந்து, முருகப்பெருமான், ஓம் எனும் மந்திரப் பொருளை உபதேசம் செய்து சுவாமிக்கே நாதன் ஆனதால் இங்கு முருகன் சுவாமிநாதசுவாமியாக போற்றப்படுகிறார் இத்தகைய சிறப்பு வாய்ந்த பெருமை கொண்ட தலத்தில் ஆண்டுதோறும் கந்தசஷ்டி விழா 10 நாட்களுக்கு சிறப்பாக நடைபெறும் வழக்கம். இந்த ஆண்டு கந்த சஷ்டி விழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. அதிகாலை, மூலவர் சுவாமிநாதசுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று சிறப்பு மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்க, ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர்.

 சூரசம்ஹாரம்

சூரசம்ஹாரம்

தொடர்ந்து உற்சவர் வள்ளி தேவனோ சமேத ஆறுமுகசுவாமி, தேவசேனா சமேத சந்திரசேகரர், வீரபாகு, வீரகேசரி ஆகியோர் சிறப்பு மலர் அலங்காரத்தில் மலைக்கோயிலில் இருந்து நாதஸ்வர மேளதாளங்கள் முழங்க இறங்கி வசந்த மண்டபம் எழுந்தருளினர். விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் இன்று மாலை நடைபெறுகிறது விழா நாட்களில் நாள்தோறும் உற்சவர் சுவாமி திருவீதியுலா நடைபெறுகிறது.

 திருத்தணியில் கந்த சஷ்டி

திருத்தணியில் கந்த சஷ்டி

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் முருகப்பெருமானின் பிரசித்தி பெற்ற 5-படை திருத்தலமாகும். இந்த திருக்கோயிலில் முருகப்பெருமான் சினத்துடன் வந்து தனிந்த மலை என்பதால் தணிகை மலை என்று பெயர் பெற்றது, திருச்செந்தூரில் சூர பத்மனுடன் போர் புரிந்த பின்பு வெற்றி கண்ட பின்பு, அந்தப் போரில் பங்கேற்ற நவ வீரர்களுடன் திருத்தணி முருகன் கோயிலில் மலை மீது அமர்ந்த தலம் என்பதால் இது தணிகை மலை என்று போற்றப்படுகிறது. இந்த ஆண்டு புதன்கிழமை கந்த சஷ்டி விழா தொடங்கியது. ஒவ்வொரு நாளும் மூலவர் முருகப்பெருமானுக்கு சிறப்பு அலங்காரம் நடைபெற்றது. மூலவருக்கு புஷ்ப அலங்காரம், பட்டு அலங்காரம், வெள்ளிக்கிழமை மூலவர் முருகப் பெருமானுக்கு தங்க கவச அலங்காரம் நடைபெற்றது. நேற்றைய தினம் முருகப்பெருமானுக்கு திருவாபரண அலங்காரம் நடைபெற்றது. இன்று தேதி சந்தன காப்பு அலங்காரத்தில் முருகப்பெருமான் காட்சி அளித்தார்.

திருத்தணியில் புஷ்பாஞ்சலி

திருத்தணியில் புஷ்பாஞ்சலி

மற்ற திருக்கோயில்களில் முருகப்பெருமான் வீற்றிருக்கும் தளங்களில் சூரசம்ஹார நிகழ்ச்சி இந்த கந்தசஷ்டி நிகழ்வில் நடைபெறும், ஆனால் திருத்தணி முருகன் கோயிலில் அந்த நிகழ்வின் போது முருகன் கோயில் மலை மீது தணிந்த மலை என்பதால் கோபம், சினம், அனைத்தும் தணிந்த மலை என்பதால், அவருக்கு இங்கு மூன்று டன் புஷ்பங்களால் புஷ்பாஞ்சலி நிகழ்ச்சி நடைபெறும். இந்த நிகழ்வு இன்று மாலை சண்முகருக்கு மலைக்கோயில் பக்தர்கள் முன்னிலையில் நடைபெறுகிறது.

 வள்ளி திருக்கல்யாணம்

வள்ளி திருக்கல்யாணம்

நாளைய தினம் திங்கட்கிழமை உற்சவர் முருகப்பெருமானுக்கு திருக்கல்யாண வைபவம் நடைபெறுகிறது, மேலும்
இந் நிகழ்ச்சிகளில் பங்கேற்க வரும் பக்தர்களுக்கு சிறப்பு வழி ஏற்பாடுகளை திருக்கோயில் நிர்வாகம் செய்துள்ளனர், மேலும் தினந்தோறும் மலைக் கோவிலில் காவடி மண்டபத்தில் உற்சவர் சண்முகநாதருக்கு இலட்சார்ச்சனை நிகழ்வு பக்தர்கள் முன்னிலையில் நடைபெறுகிறது, பக்தர்கள் ரூபாய் 250 செலுத்தி திருக்கோவில் நிர்வாகத்தால் வழங்கப்படும் கந்த சஷ்டி, புஷ்பாஞ்சலி மற்றும் இலட்சார்ச்சனை நிகழ்வின் போது சிறப்பு தொகுப்பு பிரசாத பை வழங்கப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+