உலகின் மிகப்பெரிய..39 அடி உயர கால பைரவர்..மார்ச் மாதம் மகா கும்பாபிஷேகம்..பக்தர்களுக்கு அழைப்பு
பைரவர் ஆலயத்தின் திருப்பணி என்பது ஊர் கூடி தேர் இழுப்பது போன்றது. எனவே உதவி கரங்கள் நீட்ட விரும்புபவர்கள் பைரவரின் ஆலயப் பணி என்கிற ஆன்மீகப் பணியில் பங்கு பெறலாம்.
ஈரோடு:
ஒரு கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்டால் மூன்று ஜென்மங்களின் பாவங்கள் தீரும் என்பது ஐதீகம். இதுவரை எந்தக் கோவில் கும்பாபிஷேகத்திலும் இல்லாதவாறு பைரவர் கோவிலில் மக்கள் பார்வையாளராக மட்டுமல்லாமல் தாங்களும் ஒரு அங்கமாக கலந்து கொண்டு அபிஷேக ஆராதனை செய்யும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. உலகின் மிகப்பெரிய பைரவர் ஆலயத்திற்கு வரும் மார்ச் 13ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.
சிவனின் மறு அவதாரமாக இருக்கக் கூடியது தான் ஸ்வர்ண ஆஹர்ஷண பைரவர். பொதுவாக சிவன் கோவில்களில் கால பைரவரின் சன்னதியானது சிறிய அளவில் தெற்குநோக்கி அமைந்திருக்கும் ஈரோடு மாவட்டம், காங்கேயம் மெயின் ரோடு,அவல்பூந்துறை இராட்டைசுற்றிபாளையத்தில் அமைந்துள்ள இக்கோவிலில் பைரவர் மேற்கு பார்த்து அமைந்திருப்பது தனிச்சிறப்பு. இதுவரை உலகிலேயே எங்கும் இல்லாதவாறு அறுபத்து நான்கு பைரவர்களும் ஒரே இடத்தில் இருப்பது மட்டுமல்லாது 39 அடி கால பைரவர் சிலை மிக பிரம்மாண்டமாக நிறுவப்பட்டுள்ளது. இந்த சிலை unique book of world record எனும் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
இக்கோவிலின் திருப்பணியானது ஏழு வருடங்களாக பல குருமார்களின் ஆசியோடும் பெரியோர்களின் ஆசிர்வாதத்தோடும் நடைபெற்று வந்த நிலையல் வரும் 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 13ஆம் தேதி மாசி 29 ஆம் தேதி திங்கட்கிழமை காலை 10:15 மணிக்கு மஹா கும்பாபிஷேகம் மிகச் சிறப்பாக நடைபெறவுள்ளது.

இக்கோவிலின் மூலவரான ஸ்வர்ண ஆஹர்ஷண பைரவர் ஆரோக்கியத்திற்கும் செல்வ வளத்திற்கும் ஆன அட்சய பாத்திரத்தை கையில் ஏந்தியவாறு அமையப்பெற்றுள்ளார். நாம் எதை முழு மனதாக அர்ப்பணிக்கிறோமோ அதை பல மடங்காக பெருக்கி கொடுக்கும் வல்லமை பெற்றவர். ஆலயத்தில் பிரம்மாண்டமாக அமைந்துள்ள 650 கிலோ பஞ்சலோக சிலைக்கு நெய் ஆரோக்கியத்தின் வடிவமாகவும் நாணயங்கள் செல்வத்தின் வடிவமாகவும் அர்ப்பணிக்கப்படும்
மகா கும்பாபிஷேக நிகழ்ச்சி நிரல் நான்கு கால பூஜை :
10.03.2023 மாசி மாதம் 26ஆம் நாள் வெள்ளிக்கிழமை காலை 11 மணிக்கு ஸ்வர்ண ஆஹர்ஷண பைரவ பஞ்சலோக சிலைக்கு பொது மக்களால் நெய் அபிஷேகம்.
11.03.2023 மாசி மாதம் 27-ம் நாள் சனிக்கிழமை காலை 10 மணிக்கு கணபதி ஹோமத்திற்கு பிறகு முதற்கால பூஜை ஆரம்பம். மதியம் 2:30 மணிக்கு தீர்த்தம். அவல்பூந்துறை ஈஸ்வரன் கோவிலில் இருந்து பைரவர் ஆலயத்திற்கு பொது மக்களால் தீர்த்தம் எடுத்து வருதல். திர்த்த ஊர்வலம் யானை, குதிரை, கிராமிய நிகழ்ச்சி மற்றும் வானவேடிக்கையுடன் சிறப்பாக நடைபெறும்.
12.03.2023 மாசி மாதம் 28- ம் நாள் ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு இரண்டாம் கால பூஜை மாலை 5 மணிக்கு மூன்றாம் கால பூஜை இரவு 7 மணிக்கு மேல் பாரம்பரிய கும்மித்திருவிழா
13.3.2023 மாசி மாதம் 29-ம் நாள் திங்கட்கிழமை காலை 6 மணிக்கு நான்காம் கால பூஜை. 10:15 மணிக்கு மஹா கும்பாபிஷேகம் மற்றும் தீபாராதனை 10.03.2023 வெள்ளி முதல் 13.03.2023 திங்கள் வரை அன்னதானம் நடைபெறும்.
கோவிலின் நுழைவாயிலில் ராஜகோபுரம் இருப்பது போல் உலகின் மிகவும் பிரம்மாண்டமான 39 அடி உயரமுள்ள காலபைரவர் சிலை உருவாகியுள்ளது. அவர் வழியாகத்தான் ஆலயத்தில் உள்ளே செல்ல வேண்டும்.
சிவனின் அவதாரமாக பைரவர் இருக்கிறார் என்பது நம்பிக்கை. பைரவரின் வாகனம் நாய்.காலபைரவரின் பின்னால் பிரம்மாண்டமான நாய் உருவம் உள்ளது. இந்த உலகின் மிகப்பெரிய காலபைரவர் சிலையை பலரது கூட்டு முயற்சியில் உருவாக்கி வரும் விஜய் ஸ்ரீ சுவாமிகள் செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்தார்.
''எனக்குச் சிறுவயதிலிருந்து நாய்கள் பிடிக்கும் .பைரவரின் வாகனமாக இருப்பதுதான் நாய்.எங்கள் வீட்டில் இருபது நாய்களுக்கு மேல் இருந்தன. அந்த அளவிற்குச் சிறு வயதிலேயே எனக்குள் பைரவர் நிறைந்துவிட்டார் . ஏழு ஆண்டுகளுக்கு முன்பு என் மனதில் விழுந்த விதை தான் இன்று பைரவருக்கான இந்தப் பிரம்மாண்ட ஆலயமாக எழுந்து நிற்கிறது.எனக்குள் கனிந்து கொண்டிருந்த கனவு இப்போது நனவாகி இருக்கிறது. பலரது அன்பாலும் கூட்டு முயற்சியாலும் ஒத்துழைப்பாலும் உதவிகளாலும்தான் இது நிறைவேறிக் கொண்டிருக்கிறது -
சின்ன விதையாக விழுந்தது ஆலயமாக உருவாகி இப்போது நிறைவடையும் நிலையில் இருக்கிறது. எல்லாம் கால பைரவர் அழைத்துச் சென்று வழிகாட்டியதுதான்.அவர் காட்டிய வழியில் நான் சென்றதால் தான் இது சாத்தியமாகி உள்ளது. அதன்படியே ,இந்தப் பைரவர் ஆலயத்தின் திருப்பணிகள் இப்போது நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

இங்குள்ள 39 அடி காலபைரவர் சிலைபோல உலகின் வேறெங்கும் அமைக்கப்படவில்லை. எனவே தான் அது உலக சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. ஆசியாவிலேயே உயரமான 39 அடி கால பைரவரை நுழைவாயிலாகக்கொண்ட நமது தென்னக காசி பைரவர் திருக்கோயில் தலம்,
பொதுவாக சிவாலயங்களில் தெற்குப் புறமாக சிறிதாக இரண்டு அடி உயரத்தில் ஒரு கால பைரவர் சிலை இருக்கும். ஆனால் பைரவருக்கு முதன்மையாக இவ்வளவு பெரிய ஆலயமும் மிகப்பெரிய சிலையும் உருவாகி உள்ளது இங்குதான் என்பது குறிப்பிடத்தக்கது. ஆசியாவிலேயே உயரமான 39 அடி கால பைரவரை நுழைவாயிலாகக்கொண்ட நமது தென்னக காசி பைரவர் திருக்கோயில் தலம்,
இந்தக் கோயிலின் திருக்குடமுழுக்கு என்கிற மகாகும்பாபிஷேக விழா வரும் 2023 மார்ச் 13ஆம் தேதி நடைபெற உள்ளது. முறையான வேள்விகள்,நான்குகால பூஜைகளுக்குப் பிறகு இது நடைபெற உள்ளது. இந்தக் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பல்வேறு நிகழ்வுகள் நடைபெற உள்ளன. மக்கள் அனைவரும் பாரம்பரியத்தை நோக்கித் திரும்பிப் பார்க்கிற காலகட்டமாக இப்போதைய காலம் மாறி உள்ளது.
நமது பாரம்பரியக் கலைகளான மயிலாட்டம், ஒயிலாட்டம் போன்ற நிகழ்வுகளை பிரமாண்டமாக நடத்த இருக்கிறோம். இரண்டு கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் அவல்பூந்துறை கிராமத்தில் உள்ள 300 ஆண்டுகால பழமையான சிவன் கோவிலில் இருந்து ஆயிரம் பேர் குடமுழுக்குக்கான தீர்த்தத்தைக் கொண்டு வருகிறார்கள்.
அது மட்டுமல்ல ஒரு கும்மித் திருவிழாவும் நடைபெற உள்ளது. இதில் நூற்றுக்கணக்கான மகளிர் கலந்து கொள்ள உள்ளார்கள்.திங்கள் கிழமை காலை 10:15 மணிக்கு நடைபெறும் குடமுழுக்குக்கு முன்பு வெள்ளி, சனி, ஞாயிறு என்று, மூன்று நாட்களிலும் பல்வேறு நிகழ்வுகள் உண்டு.நான்கு கால பூஜைகள் உண்டு.அன்னதானமும் உண்டு.இவையெல்லாம் இந்தக் கோவிலின் மீதும் ஆன்மீகத்தின் மீதும் மக்களுக்குக் கவன ஈர்ப்பு செய்யும் அம்சங்களாகும்.
இந்தக் கோவிலின் இன்னொரு சிறப்பு அம்சம் என்னவென்றால் இங்கே 650 கிலோ எடையுள்ள ஸ்வர்ண ஆகர்ஷன பைரவர் சிலை ஒன்று உள்ளது. இது முழுக்க ஐம்பொன்னால் ஆனது. அதை வணங்குபவர்களுக்குப் பலன்களும் வளங்களும் கிடைத்து வருகின்றன.குடமுழுக்கின்போது மக்கள் அனைவரும் இதற்கு நெய் அபிஷேகம் செய்யலாம்.
இந்த ஆலயத்தில் ஜாதி மத பேதம் இல்லாமல் அனைவரும் வந்து அருள் பெற்றுச் செல்லலாம். திருக்குடமுழுக்குக்குப் பிறகு கர்ப்பக்கிரகத்தின் உள்ளே இருக்கும் பைரவர் சிலையினைப் பொதுமக்கள் தொட்டு வணங்கலாம். தாங்களே எல்லா விதமான அர்ச்சனைகளையும் அபிஷேகங்களையும் மக்கள் செய்து கொள்ளலாம். இதற்கு எந்த விதமான கட்டுப்பாடுகளும் இல்லை.அந்த வகையில் பொது மக்களின் ஆலயமாக சாதி மத இன வேறுபாடு இன்றி அனைவரும் வணங்கக் கூடிய ஆலயமாக இது உருவாகியிருக்கிறது.
பைரவர்கள் 64 பேருக்கும் சிலைகளை அமைத்து வருகிறோம். ஒரு சிலைக்கு 76,000 ஆகிறது இதுவரை 28 சிலைகளுக்குச் செலவுகளை ஏற்று உள்ளார்கள். மீதி செலவுகளை வசதி உள்ளவர்கள் ஏற்றுக் கொடுத்து இந்தத் திருப்பணிக்கு உதவிடலாம். அதன்மூலம் இந்தப் பைரவர் ஆலயப் பணியில் பங்கு பெறலாம்.
ஸ்வர்ண பைரவ பீடம் அறக்கட்டளை அமைத்து ஏற்கெனவே நாங்கள் பல உதவிகளைச் செய்து வருகிறோம். அவற்றில் முக்கியமானது ஏழை மாணவர்களுக்குக் கல்வி உதவித் தொகை வழங்குதல், ஆலயப் பணிகள், யோகா கற்றுத் தருதல், புற்றுநோய் போன்ற நோயாளிகளுக்குச் சிகிச்சைக்கு உதவுதல் போன்றவற்றைச் செய்து வருகிறோம். இப்பணிகளில எங்களுக்கு 12 டாக்டர்கள் உதவி வருகிறார்கள்.
இந்த ஆலயத்தின் திருப்பணி என்பது ஊர் கூடி தேர் இழுப்பது போன்றது. எனவே உதவி கரங்கள் நீட்ட விரும்புபவர்கள் பைரவரின் ஆலயப் பணி என்கிற ஆன்மீகப் பணியில் பங்கு பெற்று பைரவர் அருளைப் பெற்றுக் கொள்ளலாம் என்று அவர் கூறினார்
பைரவ பீடம் ( பைரவர் கோவில் )
ஈரோடு to காங்கேயம் மெயின் ரோடு,
இராட்டைசுற்றிபாளையம்,
அவல்பூந்துறை - 638115
ஈரோடு, தமிழ்நாடு.
95857 66669
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications