மகாலட்சுமி வீடு தேடி வரணுமா? உங்கள் வீட்டு தோட்டத்தில் இந்த செடிகளை வளர்க்க மறக்காதீர்கள்
சென்னை: நம்முடைய வீட்டில் வளர்க்கும் செடிகள் மனதிற்கு மகிழ்ச்சியைத் தரும். சில செடி கொடிகளை பார்த்தலே ஒருவித அமைதி பரவும். சில செடிகள் ஆன்மீக ரீதியாக பலனளிக்கக் கூடியவை. செல்வ வளத்தை தரக்கூடியவை. நம்முடைய வீட்டில் எந்தெந்த செடிகளை வளர்க்கலாம்.. எந்தெந்த செடிகளை வளர்க்கக் கூடாது என்று வாஸ்து ரீதியாக கூறப்பட்டுள்ளது.
நாம் வளர்க்கும் செடி கொடிகள், பழ மரங்கள் நமக்கு மட்டும் நன்மையை தரக்கூடியவை அல்ல..பல பறவைகள், விலங்குகளுக்கும் அந்த செடிகள் பலன் தரக்கூடியவை. எனவேதான் நம்முடைய வீட்டு தோட்டங்களில் விதைகளை நட்டு விருட்சங்களை வளர்க்க வேண்டும். அதுவும் நாம் வளர்க்கும் செடிகள் நன்மை தரக்கூடியதாக இருக்க வேண்டும்.

துளசி
வீட்டிற்கு முன்பு துளசிச் செடியை வளர்ப்பது மிகவும் அதிர்ஷ்டகரமான பலன்களைக் கொடுக்கக் கூடியது.
துளது பெருமாளுக்கு உகந்தது. அதிக அளவில் ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்படுவதால் உடல் நலத்திற்கு தேவையான சுத்தமானக் காற்று கிடைக்கிறது.

மருதாணி, மாதுளை
பாரிஜாதம், மல்லிகை, முல்லை, செண்பகம், நித்தியமல்லி மற்றும் வாசமுள்ள பூச்செடிகள் போன்றவற்றை வீட்டிற்கு முன்னால் வைத்து லட்சுமி கடாட்சத்தை அளிக்கும். மருதாணி மற்றும் மாதுளை செடிகளையும் வீட்டிற்கு முன்னால் வைத்து வளர்த்தால் லட்சுமி கடாட்சமும் உண்டாகும். அதிர்ஷ்டமும் பெருகும்.

மஞ்சள் அரளி பூக்கள்
வீட்டின் முன்பாக மஞ்சள் அரளி பூக்கள் வளர்க்கலாம். மஞ்சள் கலரில் பூக்கள் கொத்து கொத்தாக பூக்கும் செடி இது. இதனை வீட்டில் வளர்த்தால் செல்வம் பெருகும் என்பது நம்பிக்கை. செம்பருத்தி பூக்கள் பல வண்ணங்களில் இருந்தாலும்கூட சிவப்பு வண்ணமே சிறந்தது. மருத்துவ குணம் வாய்ந்தது. வீட்டின் பின் பக்கம் கற்றாழை மருத்துவ குணம் நிறைந்தது. கற்றாழைச்செடிகள் பூக்கும் போது வீட்டில சுப நிகழ்வுகள் நடைபெறும் என்ற நம்பிக்கை உள்ளது.

மனோரஞ்சிதம்
மகாலட்சுமி நிலை வாசலுக்குள் நிலையாக வருகை தர வேண்டும் என்றால் உங்கள் வீட்டு வாசல் பகுதியில் மனோரஞ்சித செடியை வளர்க்க வேண்டும். மகாலட்சுமிக்கு மிகவும் விருப்பமான இந்த செடியை உங்கள் நிலை வாசலில் நட்டு வைத்து தான் பாருங்கள். மகாலட்சுமியின் வருகையை நீங்களே நினைத்தாலும் தடுத்து நிறுத்த முடியாது. இது தவிர உங்கள் வீட்டிற்கு வரும் எதிரிகள் கூட இந்த செடியை பார்த்துவிட்டு வீட்டிற்குள் நுழையும் போது உங்களுடைய நண்பர்களாக மாறிவிடுவார்கள். அந்த அளவிற்கு ஒரு வசிய தன்மை கொண்ட செடி தான் இது. நம்பிக்கை உள்ளவர்கள் மேல் சொன்ன விஷயங்களை பின்பற்றி பலன் பெறலாம்

கடன் பிரச்சினை தீரும்
ரொம்பவும் கடன் பிரச்சனையால் அவதிப்பட்டு வருபவர்கள், வருமானம் இல்லாமல் கஷ்டப்பட்டு வருபவர்கள், தொழிலில் நஷ்டம் இருந்தால், இப்படி பணம் சம்பந்தப்பட்ட அத்தனை பிரச்சனைகளுக்கும் ஒரு தீர்வு கிடைக்க வேண்டும் என்றால், இந்த மரத்திலிருந்து எடுக்கப்பட்ட இந்த சிறிய குச்சி வீட்டில் இருந்தால் போதும்.
அந்த காலத்தில் பூஜை அறையில் வாசக்கால் செய்யவும், இந்த புரசுமர கட்டையை பயன்படுத்தி வந்தார்கள். வீட்டில் நிலை வாசல் கதவு வைக்கவும் இந்த புரசு மரக்கட்டையை பயன்படுத்தி வந்தார்கள். காரணம் செல்வ செழிப்பை ஈர்த்து தரக்கூடிய சக்தி இந்த புரசு மரத்திற்கு உண்டு என்பது அந்த காலத்தில் வாழ்ந்த நம் முன்னோர்களுக்கு தெரிந்திருந்தது.

செல்வம் அதிகரிக்கும்
புரசு மரத்தில் இருக்கும் ஒரு சிறிய குச்சியை மட்டும் எடுத்து அதை சுத்தமாக மஞ்சள் தண்ணீரில் கழுவி, மஞ்சள் பூசி, குங்குமப்பொட்டு வைத்து பூஜை அறையில் வைத்து தினம்தோறும் அதைத் தொட்டு வழிபாடு செய்து வந்தால் உங்கள் பண பிரச்சனை தீரும். கடன் சுமையிலிருந்து விடுபடுவீர்கள். உங்கள் வீட்டின் செல்வ செழிப்பு படிப்படியாக உயரத் தொடங்கும். நம்பிக்கையுடன் செய்யும் காரியங்கள் வெற்றியைத் தரும். செல்வ வளம் பெருகும்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications