சபரிமலை ஐயப்பன் கோவில் மண்டல பூஜைக்கு இன்று நடை திறப்பு..மலையெங்கும் சரண கோஷம்
சபரிமலை: சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று திறக்கப்பட்டது. நாளை முதல் மண்டல பூஜை காலம் தொடங்குகிறது. நாளை கார்த்திகை மாதம் பிறக்கிறது. மண்டல பூஜை காலம் தொடங்குவதால் பல கோடி பக்தர்கள் துளசி மணி மாலை அணிந்து கடும் விரதமிருந்து ஐயப்பனை தரிசனம் செய்ய வந்தனர்.
கடல் மட்டத்தில் இருந்து 914 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது, சபரிமலை ஐயப்பன் திருக்கோவில். சுயம்பு லிங்க பூமி, யாக பூமி, பலி பூமி, யோக பூமி, தபோ பூமி, தேவ பூமி, சங்கமம் பூமி என்ற 7 சிறப்புகளைக் கொண்டது. சபரிமலைக்கு ஆண்டுதோறும் 4 முதல் 5 கோடி பக்தர்கள் வருகை தந்து இறைவனை தரிசித்துச் செல்கின்றனர்.
சபரிமலை ஐயப்பன் கோவில் நடை ஆண்டு தோறும் கார்த்திகை, மார்கழி மாதங்களில் மண்டல, மகரவிளக்கு பூஜை காலங்கள் தவிர மாத பிறப்பு நாட்களில் சிறப்பு பூஜைக்காக 5 நாட்கள் நடை திறக்கப்படுகிறது.

ஐயப்பன் கோவில் நடை திறப்பு
சபரிமலை ஐயப்ப சுவாமி கோயில் நடையை தந்திரி கண்டரு ராஜீவரு முன்னிலையில் மேல்சாந்தி பரமேஸ்வரன் நம்பூதிரி திறந்து வைத்தார். பின்னர் மாளிகைப்புறம் சன்னிதான மேல் சாந்திக்குக் கோயிலுக்கான சாவி மற்றும் திருநீறு வழங்கப்படும். தொடர்ந்து பதினெட்டாம் படியில் இறங்கிச் சென்று ஆளி நெருப்பு பற்றவைக்கப்பட்டது. அதன் பிறகு பக்தர்கள் தரிசனத்துக்குச் செல்வதற்காக பதினெட்டாம் படி திறக்கப்பட்டது.

புதிய மேல் சாந்தி பொறுப்பேற்பு
சபரிமலை புதிய மேல்சாந்தியாகத் தேர்வு செய்யப்பட்டுள்ள கண்ணூரைச் சேர்ந்த ஜயராமன் நம்பூதிரி, மாளிகைப்புற சன்னிதானத்துக்கு ஹரிஹரன் நம்பூதிரி ஆகியோர் மேல்சாந்தியாக பொறுப்பேற்றனர். சபரிமலை புதிய மேல்சாந்தியின் கையை பிடித்து ஐயப்ப சன்னிதானத்துக்கு அழைத்துச் சென்ற தந்திரி ஐயப்பன் மூல மந்திரம் மற்றும் பூஜை முறைகளையும் உபதேசித்தார்.

பிரம்மச்சாரி
சபரிமலையில் ஐயப்பன் தியான கோலத்தில் பிரம்மச்சாரியாக பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார்.
சிவனின் உடுக்கையை படுக்க வைத்த நிலையில் உள்ள பீடத்தில், சிவனைப் போல் தியான கோலத்திலும், விஷ்ணுவை போல் விழித்த நிலையிலும் அருள்பாலிப்பது இத்தல ஐயப்பனின் விசேஷமாகும்.

ஐயப்பனுக்கு அபிஷேகம்
இந்த ஆலயத்தில் 'தத்வமஸி' என்ற சொல் எழுதப்பட்டிருக்கும். இதற்கு 'நீயும் ஒரு கடவுள்' என்று பொருள்.
ஐயப்பனுக்கு விபூதி, சந்தனம், பால், பன்னீர், 108 ஒரு ரூபாய் நாணயம், தேன், பஞ்சாமிர்தம், இளநீர் ஆகிய எட்டும் கொண்டு செய்யப்படும் அபிஷேகத்துக்கு 'அஷ்டாபிஷேகம்' என்று பெயர். ஐயப்பன் நெய் அபிஷேக பிரியர். எனவேதான் இருமுடி கட்டி வரும் பக்தர்கள் தேங்காயில் நெய் ஊற்றி வந்து ஐயப்பனை வழிபடுகின்றனர்.

18 படிகள் தத்துவம்
சபரிமலையில் 18 படிகள் ஏறி ஐயப்பனை தரிசிக்க வேண்டும். இந்த 18 படிகளுக்கென ஒரு தத்துவம் உண்டு. ஐம்புலன்கள் 5: மெய், வாய், கண், மூக்கு, காது. திரிகுணங்கள் 3: சத்துவ குணம், ரஜோ குணம், தமோ குணம். வித்ய, அவித்ய இரண்டு. அஷ்ட ராகங்கள் 8: வீரம், அச்சம், இழிப்பு, வியப்பு, காமம், அவலம், ருத்திரம், நகை. இந்த பதினெட்டுமே, 18 படிகளின் தத்துவம். இவற்றை கடந்து ஐயப்பனை தரிசிக்க வேண்டும். ஒருவர் 18 ஆண்டுகள் சபரிமலை சென்று 18 படிகளை கடந்துசென்று வந்தால் அவர் பிறப்பு, இறப்பிலிருந்து விடுபடுகிறார். அவர்கள் சொர்க்கத்தை அடைவார்கள் என்பது 18 படிகளின் தத்துவமாகும்.

அரவணை பாயாசம்
சபரிமலை அரவணை பாயாசம் புகழ்பெற்றது. அரிசி, நெய், சர்க்கரை, ஏலக்காய் கலந்து இந்தப் பாயாசம் தயாரிக்கப்படுகிறது. ஐயப்பன் கோவிலில் மாளிகைப் புறத்தம்மனின் தனி சன்னிதி உள்ளது. இங்கே தேங்காயை உடைக்கக்கூடாது. உருட்டி வழிபட வேண்டும். மஞ்சள் பொடியை அம்பாளுக்கு படைத்து வழிபடுவார்கள்.

ஐயப்பனுக்கு தங்க அங்கி
பந்தளம் சித்திரை திருநாள் மகாராஜா 453 பவுன் எடை கொண்ட தங்க அங்கியை சபரிமலை ஐயப்பனுக்கு காணிக்கையாக வழங்கினார். மண்டல பூஜை தினத்தில் ஐயப்ப சுவாமிக்கு தங்க அங்கி அணிவிக்கப்படும் அந்த அங்கி பத்தனம் திட்டா மாவட்டம் ஆரன்முளா பார்த்தசாரதி கோவிலில் பாதுகாக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் மண்டல பூஜைக்கு மட்டும் அந்த நகைகள் அங்கிருந்து ஊர்வலமாக சபரிமலைக்கு எடுத்துவரப்படும்.
மண்டல பூஜை நாளில் ஐயப்பனுக்கு தங்க அங்கி அணிவிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்படும்.

ஐயப்பன் திருவாபரணப் பெட்டி
ஐயப்பனின் புனித தங்க நகைகளானது திருவாபரணம் என்று அழைக்கப்படுகிறது. திருவாபரணப் பெட்டி மொத்தம் மூன்று பெட்டிகளைக் கொண்டது அது. திருவாபரணப் பெட்டி,வெள்ளிப் பெட்டி,கொடிப் பெட்டி,திருவாபரணப்பெட்டி மட்டுமே ஐயப்பன் சன்னிதியை அடைகிறது. மாளிகைப்புறத்தம்மன் சன்னிதிக்கு கொடிப்பெட்டி கொண்டு செல்லப்படும். மகர விளக்கு பூஜை நாளில் பொன் ஆபரணங்களை அணிந்த ஐயப்பனை ஒரு முறை மட்டுமே தரிசிக்க முடியும்.

ஹரிவராசனம்
ஐயப்பன், மகரசங்கராந்தி அன்று ஜோதி வடிவில் பக்தர்களுக்கு காட்சி தருவார். இந்த ஜோதியை அப்பாச்சி மேடு, பம்பை, பெரியானை வட்டம், புல்மேடு ஆகிய இடங்களில் இருந்து தரிசிக்க முடியும். ஐயப்பனுக்கான பாடல்களில் முக்கியமானது, 'ஹரிவராசனம்.' இது இரவில் ஐயப்பனை உறங்கச் செய்வதற்காக இசைக்கப்படும் தாலாட்டு. தினசரியும் ஹரிவராசனம் பாடப்பட்டு சபரிமலை கோவில் நடை அடைக்கப்படும்.

ஐயப்பனுக்கு நெய்யபிஷேகம்
கார்த்திகை மாதம் ஒன்றாம் தேதியான நாளை அதிகாலை 4 மணிக்குப் புதிய மேல்சாந்தி ஜெயராமன் சபரிமலை திருநடையைத் திறந்து பூஜைகள் மேற்கொள்வார். அதிகாலை 4.30 மணி முதல் 11.30 மணிவரை நெய்யபிஷேகம் நடைபெறும். டிசம்பர் மாதம் 26ஆம் தேதி மாலை 6.30 மணிக்கு ஐயப்பனுக்கு தங்க அங்கி சார்த்தி தீபாராதனை நடைபெறும். டிசம்பர் 27ஆம் தேதி மதியம் மண்டல பூஜையும் நடைபெறும். அன்று மாலை நடை அடைக்கப்படும். மகரவிளக்கு பூஜைக்காக டிசம்பர் 30ஆம் தேதி மீண்டும் நடை திறக்கப்படும். ஜனவரி 14ஆம் தேதி மகரவிளக்கு ஜோதி தரிசனம் நடைபெறும். ஜனவரி 20ஆம் தேதி சபரிமலை நடை சாத்தப்படுகிறது.
-
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
இததான் ஒட்டிகிட்டு இருந்தீங்களா? அமெரிக்காவை லெஃப்ட் ஹேண்ட் டீல் செய்யும் ஈரான்! கோடிக்கணக்கில் லாஸ் -
விஜய்க்கு பெரம்பூரில் பிரபல நடிகை வைத்த செக்.. பிரச்சாரம் தொடங்கும் முன்பே இப்படியா பஞ்சாயத்து? -
நேத்து வந்த ஸ்ரீநாத்துக்கு சீட்.. தூத்துக்குடி அஜிதா ஆக்னல் செய்த சம்பவம்! சொதப்பிய விஜய்!












Click it and Unblock the Notifications