For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சபரிமலையில் மண்டல,மகரவிளக்கு பூஜை நிறைவு.. ஐயப்பனை தரிசித்த 45 லட்சம் பக்தர்கள்

Google Oneindia Tamil News

சபரிமலை: ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு சீசன் நிறைவடைந்ததன் காரணமாக நடை ஹரிவராசனம் பாடி இன்று காலை நடை அடைக்கப்பட்டது. ஐயப்பனை தரிசனம் செய்ய நடப்பாண்டு 45 லட்சம் பக்தர்கள் வருகை தந்ததாக தேவசம்போர்டு நிர்வாகம் தெரிவித்துள்ளது. மாசி மாத பூஜைக்காக பிப்ரவரி மாதம் 12 ஆம் தேதி நடை திறக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மண்டல, மகர விளக்கு பூஜைக்காக கடந்த நவம்பர் மாதம் 16 ஆம் தேதி சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டது. கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதால் சபரிமலைக்கு பக்தர்கள் வருகை அதிகமாகக் காணப்பட்டது. தினசரியும் 1 லட்சம் பக்தர்கள் வரை தரிசனம் செய்தனர். பல மணி நேரம் காத்திருந்து ஐயப்பனுக்கு நெய் அபிஷேகம் செய்து வழிபட்டனர்.

இந்த ஆண்டுக்கான மண்டல பூஜை கடந்த மாதம் 27ஆம் தேதி நடந்தது. இதுபோல மகர விளக்கு தரிசனம் கடந்த 14ஆம் தேதி நடைபெற்றது. இந்த இரண்டு விழாக்களிலும் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். 60 நாட்களுக்கும் மேலாக ஐயப்பனுக்கு குளிர குளிர நெய் அபிஷேகம் செய்து பக்தர்கள் வழிபட்டனர்.

Sabarimala Ayyappan Temple Mandala Makaravilakku Pooja Completed 45 Lakh Devotees Darshan

நேற்றிரவுடன் பக்தர்கள் தரிசனம் நிறைவு பெற்றது. அதன்பின்பு சபரிமலை காடுகளில் ஐயப்ப பக்தர்களை காத்த வன தேவதைகளுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக மாளிகை புரத்து அம்மன் சன்னதியில் குருதி பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து இன்று அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. காலையில் நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம், அபிஷேகம் ஆகியவை நடைபெற்றது. அதன்பின்பு காலை 7 மணிக்கு ஹரிவராசனம் பாடி கோவில் நடை அடைக்கப்பட்டது. தொடர்ந்து கோவில் சாவி பந்தள அரண்மனையில் ஒப்படைக்கப்பட்டது. இனி பிப்ரவரி மாதம் 12ஆம் தேதி மாசி மாதம் கும்ப மாத பூஜைகளுக்காக கோவில் நடை திறக்கப்படும்.

மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு சீசனில் மட்டும் சபரிமலை சாமி தரிசனத்திற்கு 45 லட்சம் பக்தர்கள் வருகை தந்ததாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதைத்தொடர்ந்து, மாசி மாத பூஜைக்காக அடுத்த மாதம் 12 ஆம் தேதி நடை திறக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

2023 பிப்ரவரி மாதம் முதல் ஜனவரி வரை சபரிமலை ஐயப்பன் கோவில் நடைதிறக்கும் நாட்களை தேவசம்போர்டு வெளியிட்டுள்ளது.

பிப்ரவரி - மாசி மாதம் கும்ப மாதம்

பிப்ரவரி 12 - 17 : மாதாந்திர பூஜை

மார்ச் - பங்குனி மீன மாதம்

மார்ச் 14 - 19 : மாதாந்திர பூஜை

மார்ச் 26 - ஏப்ரல் 05 : சபரிமலை உற்சவம்

மார்ச் 27 : கொடியேட்டு

ஏப்ரல் 05 : பங்குனி உத்திரம், ஆராட்டு

ஏப்ரல் 11 - 19 : விஷூ திருவிழா சித்திரை விழத

ஏப்ரல் 15 : விஷூ மேஷ மாதம் பிறப்பு

மே :- வைகாசி ரிஷப மாதம்

மே 14 - 19 : மாதாந்திர பூஜை - வைகாசி

மே 29 - 30 : விக்ரஹ பிரதிஷ்டை பூஜை

ஜூன் - ஆனி மிதுன மாதம்

ஜூன் 15-20 : மாதாந்திர பூஜை - ஆனி

ஜூலை :- ஆடி - கடக மாதம்

ஜூலை 16 - 21 : மாதாந்திர பூஜை

ஆகஸ்ட் - ஆவணி சிம்ம மாதம்

ஆகஸ்ட் 16 - 21 : மாதாந்திர பூஜை

ஆகஸ்ட் 27 - 31 : ஓணம் பூஜை

ஆகஸ்ட் 29 : ஓணம் பண்டிகை

செப்டம்பர் - புரட்டாசி கன்னி மாதம்

செப்டம்பர் 17 - 22 : மாதாந்திர பூஜை

அக்டோபர் 17 - 22 : மாதாந்திர பூஜை - ஐப்பசி துலாம் மாத பூஜை

நவம்பர் 10 - 11 : ஸ்ரீ சித்ர ஆட்ட திருநாள்

கார்த்திகை மாதம் விருச்சிக மாத பூஜை

நவம்பர் 16 - டிசம்பர் 27 : மண்டல பூஜை மகோற்சவம்

டிசம்பர் :

டிசம்பர் 27 : மண்டல பூஜை

டிசம்பர் 30 : திருநடை திறப்பு - மகர விளக்கு மகோற்சவம்

2024 ஜனவரி :

2024 ஜனவரி 14 : மகரவிளக்கு தரிசனம்

English summary
45 Lakhs of devotees are having darshan of Sami at the Sabarimala Ayyappan temple as Mandal Pooja and Makaravilakku Pooja is to be held in 60 days.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X