Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தவறியும் கூட வீட்டில் இந்த வார்த்தைகளை சொல்லிவிடாதீர்கள்..பலித்து விடுமாம்! - ஆன்மீக ரகசியங்கள்!!

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஒரு வார்த்தை கொல்லும் ஒரு வார்த்தை வெல்லும் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது. நம் வீட்டில் மகாலக்ஷ்மி வாசம் செய்யவேண்டும் என்றால் நல்ல வார்த்தைகளை மட்டுமே பேச வேண்டும். மாறாக கெட்ட வார்த்தைகளையோ அமங்கலச் சொற்களையே ஒருபோதும் சொல்லக்கூடாது.

மந்திரத்துக்கு மகிமை உண்டு என்கிறோம். அது போல நாம் பேசும் வார்த்தைகளுக்கு மிக மிக முக்கியத்துவம் உண்டு. நாம் பேசும் வார்த்தைகள் சில நேரங்களில் சத்திய வாக்காக மாறும். எனவேதான் ஒவ்வொரு வார்த்தையும் பேசும் முன்பாக யோசித்து பேச வேண்டும்.

வீட்டில் உள்ள பெண்கள் சொல்லும் வார்த்தைகள் நல்ல சொற்களாக இருக்க வேண்டும். நம்முடைய வீட்டிற்குள் மகாலட்சுமி குடியேற வேண்டும் என்பதற்காகவே அனைவரும் வழிபடுகின்றோம். நாம் பேசும் வார்த்தைகளும் அன்னை மகாலட்சுமியை வீட்டிற்குள் வரவழைக்கும்.

நேர்மறை எண்ணம்

நேர்மறை எண்ணம்

நம்முடைய வீட்டிலோ வேலை பார்க்கும் இடத்திலோ தொழில் செய்யும் இடத்திலோ நாம் எந்த மாதிரியான வார்த்தைகளைச் சொல்லுகிறோமோ அதற்கு உண்டான பலன்களையே, வினைகளையே நாம் பெறுவோம் என்று ஞானநூல்கள் விவரிக்கின்றன. ஒவ்வொரு சொல்லும் நேர்மறை எண்ணம் கொண்டவைகளாக இருக்க வேண்டும்.

மகாலட்சுமி

மகாலட்சுமி

நம் வீடுகளில் மகாலக்ஷ்மி வாசம் செய்யவேண்டும் என்றுதான் நாம் எல்லோருமே எதிர்பார்க்கிறோம். காலையும் மாலையும் அதனால்தான் விளக்கேற்றுகிறோம். பெண்கள் வீட்டில் தினசரியும் பூஜை செய்வார்கள்.
எத்தனை வழிபாடுகள் செய்தாலும் நம்முடைய பேச்சுகளில் எதிர்மறை சிந்தனைகளோ பேச்சுகளோ இருந்தால், அந்த வீட்டிற்குள் அன்னை மகாலக்ஷ்மி வர யோசிப்பா

அப்படியே ஆகட்டும்

அப்படியே ஆகட்டும்

நம்மைச் சுற்றி அஷ்ட தேவதைகள் இருக்கிறார்கள் என்கிறது சாஸ்திரம். அதேபோல் முனிவர்களும், சித்தர்களும் நம்முடைய முன்னோர்களும் நம்மைச் சுற்றி இருப்பார்களாம். இவர்கள் அனைவரும் நம்மை ஆசீர்வாதம் செய்து கொண்டு இருக்கிறார்கள். அவர்கள் 'ததாஸ்து.. ததாஸ்து' என்று சொல்லிக் கொண்டே இருப்பார்களாம். நாம் சொல்லும் நல்ல வார்த்தைக்கும் 'ததாஸ்து' என்று சொல்லிவிடுவார்கள். ஏதேனும் கெட்ட வார்த்தை சொன்னாலும் 'ததாஸ்து' என்று சொல்லிவிடுவார்கள். ததாஸ்து என்றால், 'அப்படியே ஆகட்டும்' என்று அர்த்தம். சமீபத்தில் இது பற்றிய ஒரு சினிமா கூட வெளியாகியுள்ளது.

 இறைவனின் ஆசி

இறைவனின் ஆசி

நாம் நலமுடன் இருக்கிறோம் என்று பேசினாலே நமக்கும் இறைவனின் ஆசியும் கிடைக்கும். அதே போல இல்லை என்ற வார்த்தையை உபயோகிக்கக் கூடாது என்று சொல்வார்கள். வீட்டில் அரிசி இல்லை, பருப்பு இல்லை, எண்ணெய் இல்லை, காய்கறிகள் இல்லை' என்றெல்லாம் சொல்லவே சொல்லாதீர்கள். அரிசி, பருப்பு வாங்க வேண்டும் என்று கூறுங்கள்.

Recommended Video

    Horoscope | இன்றைய ராசிபலன் ஆகஸ்ட் 10, 2022
     கெட்ட வார்த்தைகள் வேண்டாம்

    கெட்ட வார்த்தைகள் வேண்டாம்

    அதேபோல், ஒரு சில வாயில்'சனியன்', 'நாசமாப் போச்சு' என்ற வார்த்தைகள் வந்து கொண்டிருக்கும். தவறியும் கூட அந்த வார்த்தைகளைச் சொல்லவே சொல்லாதீர்கள். இப்படியெல்லாம் சொல்லிக்கொண்டிருந்தால், மகாலக்ஷ்மி கோபமாகிவிடுவாள். வீட்டுக்குள் நுழையாமல் கிளம்பிப் போய்விடுவாள். நம் வீட்டில் மகாலக்ஷ்மி வாசம் செய்யவேண்டும் என்றால் சிரித்த முகத்தோடு கலகலப்பாக மகிழ்ச்சியோடு குடும்பத்தில் உள்ளவர்களுடன் பேச வேண்டும். எந்த வீட்டில் மகிழ்ச்சி நிறைந்திருக்கிறதோ அந்த வீட்டில் நான் மகிழ்ச்சியோடு மன நிறைவோடு இருப்பேன் என்று சொல்கிறார் மகாலட்சுமி. எனவே எப்போதும் நேர்மறை சிந்தனையோடு இருப்போம் நல்ல வார்த்தைகளையே பேசுவோம்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+