சூரிய கிரகணம்..கர்ப்பிணிகள் ஏன் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது..காரணம் இதுதான்!
சென்னை: சூரிய கிரகணத்தின்போது கர்ப்பிணிகள் வெளியே செல்லாமல் இருப்பது நல்லது என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். கிரகணத்தின்போது ஏற்படும் சூரியனின் கதிர்வீச்சு உடலில் படும்போது பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதுபோன்ற பாதிப்புகளை தவிர்க்கவே, சூரிய கிரகணத்தின்போது, வெளியே செல்லக்கூடாது என்று அறிவுறுத்தப்படுகிறது.
ஒவ்வொரு ஆண்டும் வானமண்டலத்தில் குறைந்தபட்சம் நான்கு கிரகணங்கள் சம்பவிக்கின்றன, பொதுவாக இரண்டு சூரிய கிரகணங்களும், இரண்டு சந்திர கிரகணங்களும் ஏற்படுகின்றன, சில வருடங்களில் மூன்று சந்திர கிரகணம் கூட சம்பவிக்கும். சூரிய கிரகணம் அமாவாசை அன்றும், சந்திர கிரகணம் பெளர்ணமி அன்றும் சம்பவிக்கும்,
ராகு, கேது என்ற இரண்டு கிரகங்களும் சூரிய கிரகணம், சந்திர கிரகணம் ஏற்படுவதற்கு காரணமான கிரகங்களாகும். சூரிய கிரகண நேரத்தில் பொதுவாக உணவு சாப்பிடக்கூடாது என்று சொல்வார்கள். வெளியே சுற்றித்திரியக்கூடாது என்றும் சொல்வார்கள் அதற்கான காரணங்களையும் ஜோதிட ரீதியாக மட்டுமல்லாது அறிவியல் பூர்வமாகவும் தெரிவித்துள்ளனர்.

ராகு கேது மறைப்பு
நவ கிரகங்களில் இந்த இரு கிரகங்களும் சாயா கிரகங்கள் என்றழைக்கப்படும் நிழல் கிரகங்களாகும், விண்வெளியில் சூரியனது வட்டப் பாதையும் சந்திரனது வட்டப்பாதையும் வெட்டும் புள்ளிகள் ராகு, கேது என அழைக்கப்படுகிறது. ராகு மறைக்கும்போது ராகு க்ரஷ்தம் என்றும், கேது மறைக்கும்போது கேது க்ரஷ்தம் என்றும் சாஸ்த்திரங்கள் கூறுகின்றன பொதுவாக கிரகண தோஷம் கெடு பலன்களைத் தான் தரும் என்பார்கள். சூரிய கிரகண தோஷம்தான் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தும் என்றும் சொல்வதுண்டு.

சூரிய கிரகணம்
இந்த ஆண்டின் இறுதி சூரிய கிரகணம் இன்னும் சில நாட்களில் நிகழ உள்ளது. அக்டோபர் 25ஆம் தேதி சூரிய கிரகணம் நிகழ உள்ளது. இந்த கிரகணத்தினால் சிலருக்கு தோஷம் ஏற்பட வாய்ப்புள்ளது. பிறந்த ஜாதகத்தில் ராகு கேது இருக்கும் அதே ராசிகளில் கிரகண தோஷம் ஏற்பட்டால் தோஷம் ஏற்படும். உதாரணமாக தற்போது ராகு மேஷ ராசியிலும் கேது துலா ராசியிலும் சஞ்சரிக்கிறார்கள். யாருக்கெல்லாம் பிறக்கும் போது ஜெனன கால ஜாதகத்தில் மேஷம் அல்லது துலாம் ராசியில் ராகுவோ கேதுவோ இருந்தால் கிரகண தோஷம் ஏற்படும்.

எந்த நட்சத்திர காரர்களுக்கு தோஷம்
கிரகணம் ஏற்படும் ராசிகளில் பிறந்தவர்களுக்கு தோஷம் கிரகணம் துலாம் ராசி சுவாதி நட்சத்திரத்தில் ஏற்படுகிறது எனவே துலாம் ராசியில் பிறந்தவர்களுக்கு தோஷம் ஏற்படும். இதைத் தவிர கிரகணம் ஏற்படும் நட்சத்ரத்திங்களில் பிறந்தவர்களுக்கும் தோஷம் ஏற்படும். அக்டோபர் 25ம் தேதி நிகழக்கூடிய பகுதி சூரிய கிரகணமானது ஸ்வாதி 4ம் பாதத்திலும் பரணி 2ம் பாதத்திலும் நிகழ்கிறது. எனவே பரணி - பூரம் - பூராடம் மற்றும் திருவாதிரை - ஸ்வாதி - சதயம் ஆகிய நட்சத்திர தோஷம் ஏற்படும்.

ஐப்பசி மாதத்தில் பிறந்தவர்கள்
சூரிய, சந்திர கிரகணம் ஏற்படும் மாதங்களில் பிறந்தவர்களுக்கும் தோஷம் ஏற்படும். தற்போது கிரகணம் ஏற்படுவது ஐப்பசி மாதம் என்பதால் ஐப்பசி மாதத்தில் பிறந்தவர்களுக்கும் தோஷம் ஏற்படும். கிரகணத்திற்கு பிறகு யாருக்கெல்லாம் தோஷம் இருக்கிறதோ அவர்கள் சாந்தி பரிகாரம் செய்து கொள்வது அவசியம்.

கர்ப்பிணிகள் கவனம்
கர்ப்பிணிகள் கிரகண சமயத்தில் வெளியில் செல்லக்கூடாது. கிரகண நேரத்தில் உணவு சாப்பிடக்கூடாது. காய்கறி நறுக்கக் கூடாது, துணி தைக்கக் கூடாது. கடினமான கனமான பொருட்களை தூக்கக் கூடாது. கிரகணம் தொடங்கி முடியும் வரைக்கும் குலதெய்வத்தையும் - முன்னோர்களையும் - இஷ்ட தெய்வத்தையும் வணங்க வேண்டும். கிரகண நேரத்தில் 1 வயதிற்கு குறைவான குழந்தைகளை வெளியில் அழைத்துச் செல்லக்கூடாது.

கதிர்வீச்சினால் பாதிப்பு
நோயாளிகளும் கிரகண நேரத்தில் வெளியே செல்லக்கூடாது. கிரகணத்தின்போது ஏற்படும் சூரியனின் கதிர்வீச்சு உடலில் படும்போது பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதுபோன்ற பாதிப்புகளை தவிர்க்கவே, சூரிய கிரகணத்தின்போது, வெளியே செல்லக்கூடாது என்று அறிவுறுத்தப்படுகிறது. சூரிய கிரகணத்தின் போது வெறும் கண்களால் கிரகணத்தை பார்க்கக் கூடாது.

கிரகணம் முடிந்த பின்னர் என்ன செய்யலாம்
கிரகணம் நடக்கும் போது உணவு பொருட்களில் தர்ப்பை புல் போட்டு வைக்க வேண்டும். கிரகணம் முடிந்தவுடன் வீட்டினை கோமியம் - மஞ்சள் பொடி கலந்த நீரினால் சுத்தம் செய்வது நல்லது. தவிர கிரகணம் முடிந்த பின்னர் வீட்டில் விளக்கேற்றி குல தெய்வத்தை வணங்க வேண்டும். கிரகண நேரத்தில் சூரியனுடைய மந்திரமான ஆதித்யஹ்ருதயம் மற்றும் சிவனுடைய தோத்திரங்கள் சிவபுராணம் படிக்கலாம்.
-
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
"நீங்கள் ஸ்டாலினை சீண்டி இருக்கலாம்.. ஆனால் என்னிடம் வேண்டாம்.!" ஆளுநர் ரவிக்கு மம்தா எச்சரிக்கை -
பவன் கல்யாண் போட்ட தூண்டில்.. நாமக்கல்லில் 70% எகிறும் விஜய் கிராஃப்.. திமுகவுக்கு 4 பக்கம் ஆபத்து? -
எடப்பாடியை முதல்வராக மோடி - அமித்ஷா அறிவிக்காதது ஏன்.. காரணம் இதுதான்.. உடைத்த பிரபலம் -
விசிக 8, மதிமுக 4.. நாளைக்குள் தொகுதி பங்கீட்டை முடிக்கும் திமுக.. குறைந்த தொகுதிகளில் உதயசூரியன்! -
ஒரு குண்டு கூட வீசாமல்.. அமெரிக்காவை காலி செய்யும் சீனாவின் "ரகசிய" ஆயுதம்.. ஆட்டம் மொத்தமா மாறுது -
பச்சை, வெள்ளை, சர்க்கரை ரேஷன் அட்டையில் அரசு சலுகைகள்! 3 மாதம் பொருட்கள் வாங்காவிட்டால் கார்டு கட்? -
175 சீட் "மாஸ்டர் பீஸ்" தலைகீழாக போகுதே? கியரை மாற்றிய திமுக, அஇஅதிமுக.. லட்டு சான்ஸ் மிஸ் ஆகிறதே? -
நாடு முழுதும் ESMA அமல்.. கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டால் மத்திய அரசு அதிரடி.. மீறினால் அவ்வளவுதான்












Click it and Unblock the Notifications