பால் காவடி பன்னீர் காவடி..புஷ்பக்காவடி..தமிழ்கடவுள் முருகனுக்கு காவடி சுமப்பது ஏன் தெரியுமா?
இடுப்பன் என்ற அசுரனுக்கு பெருமை சேர்ப்பது போல பக்தர்கள் தமிழ் கடவுள் முருகனுக்கு பக்தர்கள் காவடி சுமந்து வந்து வழிபடுகின்றனர்.
சென்னை: கந்தனுக்கு அரோகரா..வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா என்று உற்சாகமாக முழக்கமிட்டவாரே பக்தர்கள் காவடி சுமந்து கொண்டு வேல் வேல்.. வெற்றி வேல்.. என்று பாடிக்கொண்டும் ஆடிக்கொண்டும் வருவார்கள். தமிழ் கடவுள் முருகனுக்கு பிரியமான நேர்த்திக்கடன் காவடி சுமப்பது. அது ஏன் தைப்பூச திருவிழா கொண்டாடப்படும் இந்த நாளில் தெரிந்து கொள்வோம்.

தைப்பூசத்தை முன்னிட்டு பழனி, திருச்செந்தூர் உள்ளிட்ட முருகப்பெருமானின் அறுபடை வீடுகளிலும் பக்தர்கள் கூட்டம் அலை மோதுகிறது. காவடிகள் சுமந்து கொண்டு பாதையாத்திரையாக கோவிலுக்கு வந்து கொண்டிருக்கின்றனர்.
காவடியில் பால், பன்னீர், புஷ்பங்கள், தீர்த்தக்காவடி, சர்ப்பகாவடி என காவடிகள் பலவகை உண்டு. இந்த காவடியை சுமந்து கொண்டு பாதையாத்திரையாக நடந்து சென்று முருகனை வழிபட்டால் அவரது அருள் பல மடங்கு கிடைக்கும் என்பது நம்பிக்கை. அதற்கும் ஒரு புராண கதை உள்ளது.
ஒரு சமயம் அகஸ்திய முனிவர் சிவகிரி, சக்தி கிரி என்ற இரு மலைகளைத் தன் இருப்பிடத்திற்கு எடுத்துச் செல்ல ஆசைப்பட்டு அதற்காக இடும்பன் என்ற அசுரனை நியமித்தார். இரண்டு மலைகளையும் இரு பக்கமும் ஒரு தராசு போல் கட்டிக்கொண்டு தன் தோளில் சுமந்து ஸ்ரீ முருகனையே நினத்துக்கொண்டு பழனி வந்தான்.
சற்று இளைப்பாறலாம் என்று தன் சுமையை இறக்கி வைத்தான். பின் கொஞ்ச நேரம் கழித்து அதைத் தூக்க முயன்றான், முடியவில்லை. சிவகிரியின் மேல் ஒரு சிறுவன் நிற்பதைக் கண்டான். இடும்பனும் சிறுவனை மலையிலிருந்து கீழே இறங்கும்படி வேண்டினான். ஆனால் அந்த சிறுவன் இந்த மலை தனக்கே சொந்தம் என்றும் தான் இறங்க மாட்டேன் என்றும் கூறினான்.
வந்தது கந்தன் என்று தெரியாமல் இடும்பன் கோபம் கொண்டான். அப்போது இருவருக்கும் ஏற்பட்ட சண்டையில் இடும்பனை அழித்தார் முருகன். இதைக் கண்ட அகஸ்தியர் மற்றும் இடும்பனின் மனைவியுடன் சென்று வேண்ட, முருகன் இடும்பனுக்கு அருளாசி புரிந்ததுடன் இடும்பனைத் தனது காவல் தெய்வமாகவும் நியமித்தார். அதோடு காவடியேந்தி சந்தனம், பால், மலர் போன்ற அபிஷேகப் பொருட்களை தன் சன்னதிக்கு எடுத்து வருபவர்களுக்கு தனது அருள் நிச்சயம் கிடைக்கும் என்று இடும்பனிடம் கூறினார்.
முருகனின் அருள் கிடைக்கவேண்டும் என்பதற்காக லட்சக்கணக்கான பக்தர்கள் காவடிகளை சுமந்து கொண்டு அறுபடை வீடுகளுக்கும் பாதையாத்திரையாக வருகின்றனர். காவடி சுமப்பது தமிழ் நாட்டில் மட்டுமல்ல தமிழர்கள் எங்கெல்லாம் வசிக்கிறார்களோ அங்கெல்லாம் தமிழ் கடவுள் முருகனுக்கு கோவில் எழுப்பி காவடிகளை சுமந்தும் அலகு குத்தியும் வழிபடுகின்றனர்.
-
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி












Click it and Unblock the Notifications