திருநெல்வேலி தைப்பூசம் கொடியேற்றம்..நெல்லுக்கு வேலியிட்ட நெல்லையப்பர் புராண கதை தெரியுமா?
நெல்லையப்பர் காந்திமதியம்மன் திருக்கோவிலில் இன்று காலை தைப்பூசத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
திருநெல்வேலி: நெல்லையப்பர் ஆலயத்தில் தைப்பூசத் திருவிழா இன்றைய தினம் கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது. கொடியேற்ற விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். விழாவின் முக்கிய நிகழ்வான நெல்லுக்கு வேலியிட்ட திருவிழா 29ஆம் தேதி நடைபெற உள்ளது. பிப்ரவரி 4ம் தேதி தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென் தமிழகத்தில் பிரசித்திபெற்ற சிவாலயங்களுள் நெல்லை அருள்மிகு நெல்லையப்பர் காந்திமதியம்மாள் திருக்கோவிலும் ஒன்றாகும் . இங்கு ஆண்டுதோறும் தைப்பூசத் திருவிழா வெகுவிமர்சையாக நடைபெறும் .

இந்த ஆண்டுக்கான திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவினை முன்னிட்டு சுவாமி சன்னதி முன்பு உள்ள கொடி மரத்திற்கு பல்வேறு திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு கொடியேற்றம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து மகாதீபாராதனையும் , சிறப்பு பூஜையும் நடைபெற்றது. தொடர்ந்து 12 நாட்கள் திருவிழா நடைபெறுகிறது.
விழாவின் ஒவ்வொரு நாளும் சுவாமி அம்பாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர் . விழாவின் முக்கிய நிகழ்வான வரும் 29ஆம் தேதி 4ஆம் திருநாள் அன்று நெல்லுக்கு வேலியிட்ட திருவிழாவும் , பிப்ரவரி 4ஆம் தேதி தைப்பூச தீர்த்தவாரி திருவிழா வரலாற்றுச் சிறப்பு மிக்க கைலாசபுரம் தீர்த்தவாரி மண்டபத்தில் சிறப்பாக நடக்கிறது.
திருநெல்வேலியில் ஆண்டு தோறும் நடைபெறும் நெல்லுக்கு வேலியிட்ட நிகழ்ச்சிக்கு புராண வரலாறு உண்டு. பல ஆண்டுகளுக்கு முன்பு நெல்லையப்பர் கோவில் பட்டர்கள் வீடு, வீடாகச் சென்று நெல் யாசகமாக பெற்றனர். அந்த நெல்லை, நெல்லையப்பர் கோவில் முன்பு காய வைத்து விட்டு, தாமிரபரணி ஆற்றுக்கு குளிக்க சென்றனர். அப்போது திடீரென்று பலத்த மழை பெய்து, வெள்ளம் கரை புரண்டு ஓடியது.
இதனால் பட்டர்கள் அச்சமடைந்தனர். தாங்கள் காயவைத்த நெல் மழையில் நனைந்து தங்களுக்கு சாப்பாட்டுக்கு வழி இல்லாமல் போய்விடுமோ என்ற மனவேதனையுடன் நெல்லையப்பர் கோவிலுக்கு வந்தனர். அங்கு அவர்கள் பார்த்த காட்சி மெய்சிலிர்க்க வைத்தது. தங்கள் காயவைத்த பகுதியில் மட்டும் மழை பெய்யாமல், அதை சுற்றி தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதாக புராண வரலாறுகளில் குறிப்பிடப்பட்டு உள்ளது. இதை நினைவுபடுத்தும் பகுதியில் ஆண்டு தோறும் நெல்லையப்பர் கோவிலில் நெல்லுக்கு வேலியிட்ட நிகழ்ச்சி நடக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ஆண்டு ஜனவரி 29ஆம் தேதி நெல்லுக்கு வேலியிட்ட திருவிழா நடைபெறுகிறது. அன்று இரவு 8 மணிக்கு பஞ்ச மூர்த்திகளுடன் சுவாமி, அம்பாள் வீதி உலாவும் நடைபெறுகிறது. பிப்ரவரி 4ஆம் தேதி தைப்பூச தீர்த்தவாரி நிகழ்ச்சி சிறப்புமிக்க நெல்லை சந்திப்பு கைலாசபுரத்தில் உள்ள தீர்த்தவாரி மண்டபத்தில் நடைபெறுகிறது. இந்த தீர்த்தவாரி நிகழ்ச்சிக்காக நெல்லையப்பர், காந்திமதியம்மன், அகஸ்தியர், தாமிரபரணி, குங்கிலிய நாயனார், சண்டிகேஸ்வரர், அஸ்திரதேவர் மற்றும் அஸ்திரதேவி ஆகியோர் 4ஆம் தேதி நண்பகல் 12.30 மணிக்கு சுவாமி நெல்லையப்பர் கோவிலில் இருந்து புறப்பட்டு எஸ்.என்.ஹைரோடு, ஈரடுக்கு மேம்பாலத்தின் கீழ்பாலம் வழியாக கைலாசபுரத்தை வந்தடைவர். தாமிரபரணியில் தீர்த்தவாரி முடிந்து, தீபாராதனைக்கு பின்னர் மாலை 6 மணிக்கு சுவாமிகள் மீண்டும் புறப்பட்டு எஸ்.என். ஹைரோடு வழியாக பாரதியார் தெரு, தெற்கு புதுத்தெரு, ரத வீதி சுற்றி கோவிலுக்கு வந்தடைவார்கள்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications