For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வரலட்சுமி விரதம் பூஜை செய்ய நல்ல நேரம் என்ன? விரதம் இருப்பது எப்படி? என்ன சாப்பிடலாம்?

Google Oneindia Tamil News

மதுரை: வரலட்சுமி விரதம் நாளை வெள்ளிக்கிழமை கடைபிடிக்கப்பட உள்ள நிலையில், இந்த விரதம் எப்படி இருப்பது, வரலட்சுமி நோன்பு இருப்பதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும், வரலட்சுமி பூஜை செய்ய நல்ல நேரம் போன்றவைகளைத் தெரிந்து கொள்வோம்.

வரலட்சுமி விரத பூஜை செய்தால் உடனடியாக திருமண யோகம் கைகூடும் என்பது நம்பிக்கை. எந்த வீட்டில் பெண்கள் வரலட்சுமி நோன்பிருந்து முறைப்படி பூஜை செய்கிறார்களோ, அந்த வீட்டிற்கு அன்னை மகாலட்சுமி வருவதாகவும்,அருள் ஆசி வழங்குவார் என்பதும் ஐதீகம்.

வரலட்சுமி விரத பூஜை நடத்தப்படும் வீடுகளில் மகாலட்சுமி வாசம் செய்வாள். லட்சுமி வழிபாட்டால் நீண்ட ஆயுள், புகழ், செல்வம், உடல் நலம் உண்டாகும். வரலட்சுமி பூஜை செய்யும் போது, நம் வீட்டுக்கு வரும் விருந்தினர்களை நாம் எப்படி உற்சாகமாக வரவேற்போமோ, அதே மாதிரி வாசலில் நின்று லட்சுமியை பாவனை செய்து அழைக்க வேண்டும்.

வரலட்சுமி விரதம் 2022.. மகாலட்சுமிக்கு நோன்பிருந்து பூஜை செய்தால் இத்தனை நன்மைகளா?வரலட்சுமி விரதம் 2022.. மகாலட்சுமிக்கு நோன்பிருந்து பூஜை செய்தால் இத்தனை நன்மைகளா?

வரம் தரும் வரலட்சுமி விரதம்

வரம் தரும் வரலட்சுமி விரதம்

பதினாறு வகை செல்வத்தையும் வழங்கக்கூடிய மகா லட்சுமி தேவியை நினைத்து இருப்பது வரலட்சுமி விரதம். திருமணமான பெண்கள் பூஜை முடியும் வரை சாப்பிடாமல் விரதத்தை கடைப்பிடிப்பார்கள்.மங்களத்தையும், மாங்கல்ய பலத்தையும் அளிக்கக்கூடிய இந்த விரதத்தை கன்னிப் பெண்களும், திருமணமான சுமங்கலி பெண்கள் கடைப்பிடிக்க வேண்டும்.

என்ன சாப்பிடலாம்

என்ன சாப்பிடலாம்

அதிகாலையில் எழுந்து குளித்து விட்டு பூஜை அறையில் விளக்கேற்றி விரதத்தை தொடங்க வேண்டும். வரலட்சுமி பூஜைக்காக விரதம் இருப்பவர்கள் சில உணவுகளை சாப்பிடலாம். வாழைப்பழம் வலிமையை வளர்க்க மிகவும் உதவியாக இருக்கும் ஒரு பழம். பொட்டாசியம் நிறைந்த, வாழைப்பழத்தில் இயற்கை குளுக்கோஸ் உள்ளது, இது ஆற்றல் அளவை அதிகரிக்க உதவுகிறது.விரதம் இருப்பவர்கள் இதை சாப்பிடலாம். விரதம் இருப்பவர்கள் ஒரு கப் பால் சாப்பிடலாம் இது தூய்மையானதாகக் கருதப்படுகிறது. பால் சாப்பிடாதவர்கள் பழச்சாறுகள் சாப்பிடலாம் அல்லது துளசி தீர்த்தம் சாப்பிடலாம்.

அம்மன் அலங்காரம்

அம்மன் அலங்காரம்

லட்சுமி பூஜை செய்வதற்கு முன்பாக விநாயகர் வழிபாடு அவசியம் செய்ய வேண்டும். வரலட்சுமி பூஜையை மனநிறைவோடு செய்ய வேண்டும். ஒன்பது முடிச்சு இருக்கும் நோன்புக்கயிறு அவசியம். வயது மூத்த சுமங்கலிகள் கையால் நோன்புக்கயிறு கட்டிக்கெள்ள வேண்டும். பட்டுத்துணியால் அவசியம் அம்மனை அலங்கரிக்க வேண்டும். சரிகை உள்ள துணியால் அலங்கரிக்க வேண்டும். வெள்ளை கறுப்பு நிறத்தில் வஸ்திரம் இருக்கக்கூடாது. மஞ்சள் நிறம், சந்தன நிறத்தில் வஸ்திரம் இருந்தால் அற்புதமானது. கலசத்தில் ஸ்ரீ வரலட்சுமி நமஹ என்று இருக்க வேண்டும்.

9 முடிச்சு நோன்புக்கயிறு

9 முடிச்சு நோன்புக்கயிறு

அம்மன் அலங்காரம் செய்த உடன் முடிக்கயிறு தயாரிக்கும் போது 9 முடிச்சுகள் போட்டிருக்க வேண்டும். வெள்ளிக்கிழமை காலைதான் இந்த முடிச்சி போடவேண்டும். சர்க்கரைப் பொங்கல் பாயசம், கொழுக்கட்டை, தாமரை மலர் அவசியம். மனதில் பக்தியுடன் சந்தோஷத்துடன் பூஜை செய்ய வேண்டும். வரலட்சுமி பூஜைக்கு சுமங்கலி பெண்களை அவசியம் அழைப்பது அவசியம்.

Recommended Video

    Horoscope| இன்றைய ராசிபலன் ஆகஸ்ட் 04, 2022
    பூஜை செய்ய நல்ல நேரம்

    பூஜை செய்ய நல்ல நேரம்

    ஆகஸ்ட் 5ஆம் தேதியன்று வெள்ளிக்கிழமை காலை 9:15 முதல் 10:15 வரையிலும், மாலை 4:45 முதல் 5:45 வரை நல்ல நேரமாக உள்ளது. எனவே இந்த நேரங்களில் வரலட்சுமி பூஜை செய்யலாம். மாலை நேரத்தில் வீட்டில் விளக்கேற்றி பூஜையை தொடங்குவது நல்லது. வரலட்சுமி விரதத்தை ஒவ்வொரு ஆண்டும் தவறாது அனுஷ்டித்து வந்தால், திருமணம் ஆகாதவர்களுக்கு விரைவில் திருமணமும், திருமணமான பெண்களுக்கு மாங்கல்ய பலமும் கிடைக்கும் என்பது ஐதீகம். நோயற்ற வாழ்வும் குறைவற்ற செல்வமும் உண்டாகும் என்பது நம்பிக்கையாகும்.

    English summary
    Varalakshmi Viratham date Pooja time and Pooja vithi: (வரலட்சுமி விரதம் பூஜை செய்ய நல்ல நேரம் பூஜை விதிகள்)As the Varalakshmi fast is going to be observed tomorrow, 5th August 2022 Friday. Let's know what this fast is like, what are the benefits of Varalakshmi fasting, and the best time to perform Varalakshmi Poojai.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X