மகன் துரை வைகோவுக்கு மதிமுக ஐ.டி.விங் பொறுப்பாளர் பதவி- பணிகளை ஒதுக்கீடு செய்தார் தந்தை வைகோ!
சென்னை: மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஐ.டி.விங் பொறுப்பாளராக மகன் துரை வைகோ நியமிக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் பொதுச்செயலாளரும் துரை வைகோவின் தந்தையுமான ராஜ்யசபா எம்.பி. வைகோ தெரிவித்துள்ளார். மேலும் மதிமுகவில் துரை வைகோ மேற்கொள்ள வேண்டிய பணிகளையும் வைகோ ஒதுக்கீடு செய்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.
மதிமுகவில் திடீரென மகன் துரை வையாபுரி என்ற துரை வைகோவுக்கு தலைமை கழகச் செயலாளர் பதவி வழங்கப்பட்டது. இதனால் மதிமுகவின் மூத்த தலைவர்கள் பலரும் அதிருப்தி அடைந்தனர்.
மதிமுகவின் மாவட்ட செயலாளர்கள், உயர்நிலைக் குழு உறுப்பினர்கள், துரை வைகோவுக்கு பதவி வழங்கலாம் என்கிற கூட்டத்தைப் புறக்கணித்தனர். ஆனால் வைகோ இதனை எல்லாம் நிராகரித்தார். எனக்கே விருப்பம் இல்லாமல்தான் ரகசிய வாக்கெடுப்பு நடத்தி துரை வைகோவுக்கு பதவி கொடுத்தோம் என்றார்.

மதிமுகவில் சலசலப்பு
அதேநேரத்தில் மகனுக்கு பதவி தரக் கூடாது என வைகோ நினைத்திருந்தால் ரகசிய வாக்கெடுப்பில் எதிர்த்துதானே வாக்களிக்க வேண்டும் என்கிற கேள்வியும் முன்வைக்கப்பட்டது. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னதாக திடீரென மதிமுகவில் இருந்து விலகுகிறேன்; விரைவில் திமுகவில் இணைக்கப்படும் என வைகோ அறிவித்ததாக ஒரு செய்தி வலம் வந்தது. ஆனால் வைகோ இது திட்டமிட்ட பொய்ச்செய்தி; இது தொடர்பாக போலீசில் புகார் கொடுத்திருக்கிறோம்; இது தொடர்பாக மதிமுகவினர் எந்த கருத்தும் சொல்லக் கூடாது எனவும் கூறியிருந்தார்.

மகனுக்கு பணிகள் ஒதுக்கீடு
இந்நிலையில் மதிமுக தலைமை கழகச் செயலாளரான துரை வைகோவுக்கான பணிகள் எவை என ஒரு பட்டியலிட்டு வைகோ இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: மறுமலர்ச்சி திமுக சட்ட திட்ட விதி எண் 23 இன் படி பொதுச்செயலாளர் அளிக்கும் பொறுப்புகளை நிறைவேற்ற வேண்டும். சட்ட திட்ட விதி எண் : 26 இன் படி தலைமைக்கழகத்தின் அன்றாட அலுவல்களை நிறைவேற்றவும்,கழகத்தின் எல்லா அமைப்புகளுடன் தொடர்பு கொள்ளவும் தலைமை நிலையம் இயங்கி வருகின்றது. கழகப் பொதுச்செயலாளர் பொறுப்பில் இயங்கும் தலைமை நிலையப்பணிகளை தலைமைக்கழக செயலாளர் ஒருங்கிணைப்பார்.

கட்சிகளுடனான தொடர்பு
பொதுச் செயலாளரின் சுற்றுப்பயணங்கள் சந்திப்புகள் மற்றும் நிகழ்ச்சிகளை ஒருங்கிணைக்கும் கடமையையும் தலைமைக்கழகச் செயலாளர் மேற்கொள்வார். கழகத்தின் நடவடிக்கைகள் நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்தல்; அனைத்துக் கட்சிகள் இயக்கங்கள் உள்ளிட்ட மற்ற பல்வேறு அமைப்புகளுடன் கழகத்தின் சார்பில் மேற்கொள்ளப்படும் தொடர்புகளில் பொதுச்செயலாளர் இடும் பணிகளை நிறைவேற்றுதல்; தலைமைக் கழகச் செயலாளரின் பணி ஆகும்.

ஐடிவிங் பொறுப்பாளர்
மேலும் மதிமுக சார்பில் அமைக்கப்பட உள்ள தகவல் தொழில்நுட்ப அணியின் (MDMK IT- WING) பொறுப்பாளர் பொறுப்பையும், கூடுதலாக தலைமைக் கழகச் செயலாளரே கவனிப்பார். இவ்வாறு வைகோ தெரிவித்துள்ளார். துரை வைகோவுக்கு இளைஞர் அணி பொறுப்பும் கூடுதலாக வழங்கப்படலாம் என கூறப்பட்ட நிலையில் ஐ.டி.விங் பொறுப்பை வைகோ வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி












Click it and Unblock the Notifications