சுத்தியலை எடுத்து.. நொச்சுன்னு ஒரு அடி.. நச்சுன்னு செஞ்ச ரேகா.. அச்சான்னு வியந்து போன ரசிகர்கள்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தெய்வமகள் சீரியலின் அண்ணியாரின் பிறந்தநாளுக்கு அவர் ஆடிய ஆட்டம் தான் தற்போது இன்ஸ்டாகிராமில் வைரலாக பரவி வருகிறது.ரேகா கிருஷ்ணப்பா என்று இவருடைய சொந்தப் பெயரையே மறந்து போகும் வகையில் அண்ணியாரே என்று பேமஸ் ஆகிவிட்டார்.

சீரியலில் அம்மா கேரக்டரில் நடித்துக் கொண்டிருந்தாலும் பிறந்தநாளுக்கு இவர் ஆடிய குத்தாட்டம் தான் தற்போது செம வைரலாக பரவி வருகிறது.

கலக்குறீங்க அண்ணியாரே

கலக்குறீங்க அண்ணியாரே

சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பல சீரியல்கள் முடிவடைந்தாலும் அந்த சீரியலில் நடித்தவர்களின் கேரக்டர்கள் ரசிகர்களின் மனதில் ஆழமாக பதிந்து விடுகிறது. அந்த மாதிரிதான் சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த தெய்வமகள் சீரியலில் முடிவடைந்த பிறகும் சீரியலின் கதாநாயகிக்கு எவ்வளவு வரவேற்பு இருக்கிறதோ அந்த அளவிற்கு வில்லிக்கும் ரசிகர்களின் மனதில் நன்றாக ஒட்டிக் கொண்டார். அந்த சீரியலில் காயத்ரி கேரக்டரில் நடித்து பிரபலமான ரேகா கிருஷ்ணப்பா இந்த சீரியலுக்கு பிறகும் பலர் இவரை அதே மிரட்டல் காயத்ரி ஆகவும் அண்ணியாராக தான் பார்த்து வருகின்றனர்.

புனைபெயராகவே ஆகிடுச்சு

புனைபெயராகவே ஆகிடுச்சு

இந்த சீரியலின் ஹீரோ பிரகாஷ் இவரை எப்போதுமே அண்ணியாரே..என்று அதட்டி கூப்பிட்டு வருவார். இதைப்பார்த்த இவருடைய ரசிகர்களும் அதையே ஃபாலோ பண்ண ஆரம்பித்துவிட்டார். அதனாலேயே என்னவோ பலருக்கும் அண்ணியாரே என்று சொன்னதுமே இவருடைய முகம் தான் நினைவிற்கு வருகிறதாம். சினிமாவாக இருந்தாலும் சரி சீரியலாக இருந்தாலும் சரி பல திரைப்படங்களில் நடித்து இருந்தாலும் அதில் ஒன்று ஒருசில கேரக்டரையும் பெயர்கள் அவர்களுக்கு புனை பெயர்களை பெற்றுத் தந்துவிடும். அதுபோலத்தான்
தற்போது இவருக்கும் அண்ணியாரே எனும் பட்டம் ஒட்டிக்கொண்டு விட்டது.

அந்தக் கண்ணு தான் பவரு

அந்தக் கண்ணு தான் பவரு

தெய்வமகள் சீரியலுக்கு பிறகு ரேகா அதே சன் டிவியில் நந்தினி சீரியலிலும் மிரட்டியிருக்கிறார். இந்த சீரியலில் இவர் மந்திரவாதியின் கெட்டப்பில் வந்தாலும் அனைவரும் இவரை காயத்ரி என்றே குறிப்பிட்டு வந்தனர். ஆனால் இவரைப் பார்த்து பல குழந்தைகள் கூட பயப்படுகிறது. அதுவரைக்கும் பெரியவர்களின் வயிற்றெரிச்சலை சம்பாதித்துக் கொண்டிருந்த ரேகா கிருஷ்ணப்பா அதன்பிறகு நந்தினி சீரியலில் குழந்தைகளையும் பயமுறுத்தி விட்டார். இந்த சீரியலில் இவருடைய கெட்டப்பும் இவருடைய அந்த மிரட்டலான கண்களும் இவருடைய நடிப்பில் மைல்கல் தான். பொதுவாக ஒருவர் ஹீரோயினியாக நடித்துக் கொண்டிருந்தால் அவருக்கு தொடர்ந்து ஹீரோயினி வாய்ப்பு வந்து கொண்டிருப்பது போல இவருக்கு கிடைக்கும் வாய்ப்புகள் எல்லாம வில்லி கேரக்டராகத்தான் வந்துகொண்டிருக்கிறது.

மாடர்ன் உடையில் செம ஆட்டம்

மாடர்ன் உடையில் செம ஆட்டம்

விஜய் டிவியில் தற்போது இவர் தமிழும் சரஸ்வதியும் சீரியலில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த சீரியலிலும் இவருடைய நடிப்பு மிரட்டலாக தான் இருந்துகொண்டிருக்கிறது. இப்படியே இவரை மிரட்டலாக பார்த்து ரசித்த ரசிகர்கள் தற்போது இவர் பிறந்தநாளுக்கு ஸ்டைலாக மாடர்ன் உடையில் குத்தாட்டம் போட்டதை பார்த்ததும் கொஞ்சம் ஷாக் ஆகி விட்டார்களாம். இவருடைய பிறந்த நாளுக்கு ரசிகர்கள் முதல் திரை பிரபலங்கள் வரை பலரும் இன்ஸ்டாகிராமில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டிருக்கும் போது, இவர் அனைவருக்கும் நன்றியை கூறிவிட்டு செம ஆட்டம் போட்டிருக்கிறார். இந்த வீடியோக்கள் தான் தற்போது இன்ஸ்டாகிராமில் வைரலாக பரவி வருகிறது. அதுமட்டுமல்லாமல் பிறந்த நாளன்று இவர் வெட்டிய கேக் பார்த்து சிலர் கலாய்த்தும் வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+