"நீ என்னை ஏமாத்திட்ட” மன அழுத்தத்தில் கத்திய திவ்யா..கூலாக வீடியோ எடுத்த அர்னாவ்..வெளியான ஆதாரம்
சென்னை: சின்னத்திரை தம்பதிகளான அர்னாவ் மற்றும் நடிகை திவ்யா இருவரும் சண்டை போட்ட வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வெளியாகி இருக்கிறது.
நடிகர்களான இவர்கள் இருவரும் ஒருவரை மாற்றி ஒருவர் குற்றங்கள் சுமத்திக் கொண்டிருக்கும் வேளையில் இந்த வீடியோ பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
இவர்கள் இருவரில் யார் சொல்வது உண்மை என்று கணிக்க முடியவில்லை என்று ரசிகர்களும் குழம்பி வருகிறார்கள்.

திவ்யாவின் குற்றசாட்டு
கேளடி கண்மணி சீரியலில் நடித்து வந்த திவ்யாவுக்கும் அவரோடு நடித்த நடிகர் அர்னாவ்வுக்கும் ஒரு சில மாதங்களுக்கு முன்பு திருமணம் முடிந்திருக்கிறது. திருமணத்திற்கு முன்பு இவர்கள் இருவரும் ஐந்து வருடங்கள் லிவ்விங் ரிலேஷன்ஷிப்பில் தான் வாழ்ந்து வந்துள்ளனர். இவர்கள் இருவரும் வெவ்வேறு மதத்தை சேர்ந்தவர்கள் என்பதால் திவ்யா முஸ்லிம் மதத்திற்கு மாறி அர்னாவ்வை திருமணம் செய்து இருக்கிறார். அர்னாவ் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் செல்லம்மா சீரியலில் கதாநாயகனாக நடித்து வருகிறார்.

திவ்யாவின் குற்றசாட்டு
திருமணத்திற்கு முன்புவரைக்கும் இவர்களுடைய வாழ்க்கையில் எந்த பிரச்சனையும் இல்லாமல் சுமுகமாகத்தான் சென்று கொண்டிருந்ததாம். சிறு சிறு பிரச்சனைகள் ஏற்பட்டு வந்தாலும் அதை அவர்களே பேசி தீர்த்துக் கொண்டு இருந்துள்ளார்கள். ஆனால் திருமணம் ஆன பிறகு தான் இவர்களுக்குள் பெரிய பூகம்பமே வெடித்திருக்கிறது. தற்போது திவ்யா ஸ்ரீதர் கர்ப்பமாக இருக்கும் நிலையில அர்னாவ் முன்பு மாதிரி சரியாக பேசவில்லை என்று சொல்லப்படுகிறது. இதனால் திவ்யா மற்றும் அர்னாவ் இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் சீரியலில் அர்னாவ்வுடன் நடிக்கும் நடிகைக்கும் இவருக்கும் தப்பான உறவு இருப்பதாக திவ்யா குற்றச்சாட்டுகளை கூறி இருக்கிறார்.

வெளியான புது வீடியோ
இந்த நிலையில் கணவன் மனைவி இருவருமே ஒருவர் மாற்றி ஒருவர் அடுத்தவர்களை குற்றம் சொல்லி அவர்களைப் பற்றிய வீடியோக்களையும், ஆதாரங்களையும் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில் தற்போது திவ்யா அர்னாவ் சண்டையிடும் காட்சி வெளியாகி இருக்கிறது. அந்த வீடியோவில், நான் உன்னை லவ் பண்றேன். ஆனா நீ என்னை ஏமாத்திட்ட அந்த பொண்ணு மட்டும் இல்ல நானும் சூசைட் அட்டென்ட் பண்ண ட்ரை பண்ணுவேன். ஏன்னா நீ அந்த மாதிரி ஒரு துரோக காரன் என்று கத்தி பேசிக் கொண்டிருக்கிறார். அதற்கு அர்னாவ் நீ தான் எனக்கு துரோகம் செய்து இருக்க புருஷன் குழந்தைகளை என்னிடம் மறைத்து என்னை திருமணம் செய்து இருக்க என்று பேசுகிறார். ஆனால் அப்போதும் அர்னாவ் முகம் அதில் தெரியவில்லை.

காரசாரமான விவாதம்
அப்போது கடும் கோபத்தில் இருக்கும் திவ்யா வேண்டாம் பத்து. ... என்று விரலை காட்டி மிரட்டுகிறார். அதற்குப் பிறகு உனக்கு நான் என்ன பண்ண வேண்டும்? நீ வீடியோ எடுத்தால் நான் பயப்பட மாட்டேன் என்று கூறுகிறார். அதற்கு அர்னாவ் இதுதான் எனக்கு சாட்சி என்று கூறுகிறார்.அப்போது எதுக்கு என்ன நீ அடிச்சா என்று அர்னாவ் கேட்கிறார். அதற்கு திவ்யா உன்னை நான் அடிச்சேனா? என்னுடைய லைஃபை நீ ஸ்பாயில் பண்ணி இருக்க! நான் எப்போ அடிச்சேன் என்று கேட்கிறார்? பில்லோவை நான் தூக்கி போட்டது உன்னை அடிச்சேனா ? கேட்கிறார். நீ ஒரு ஆம்பளையா? ஏன்னா நீ அந்த மாதிரி ஒரு துரோக காரன் என்று கோபமாக பேசி இருக்கிறார். இந்த வீடியோ தற்போது வெளியாகி இருக்கிறது.
-
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
"நீங்கள் ஸ்டாலினை சீண்டி இருக்கலாம்.. ஆனால் என்னிடம் வேண்டாம்.!" ஆளுநர் ரவிக்கு மம்தா எச்சரிக்கை -
பவன் கல்யாண் போட்ட தூண்டில்.. நாமக்கல்லில் 70% எகிறும் விஜய் கிராஃப்.. திமுகவுக்கு 4 பக்கம் ஆபத்து? -
எடப்பாடியை முதல்வராக மோடி - அமித்ஷா அறிவிக்காதது ஏன்.. காரணம் இதுதான்.. உடைத்த பிரபலம் -
விசிக 8, மதிமுக 4.. நாளைக்குள் தொகுதி பங்கீட்டை முடிக்கும் திமுக.. குறைந்த தொகுதிகளில் உதயசூரியன்! -
ஒரு குண்டு கூட வீசாமல்.. அமெரிக்காவை காலி செய்யும் சீனாவின் "ரகசிய" ஆயுதம்.. ஆட்டம் மொத்தமா மாறுது -
பச்சை, வெள்ளை, சர்க்கரை ரேஷன் அட்டையில் அரசு சலுகைகள்! 3 மாதம் பொருட்கள் வாங்காவிட்டால் கார்டு கட்? -
175 சீட் "மாஸ்டர் பீஸ்" தலைகீழாக போகுதே? கியரை மாற்றிய திமுக, அஇஅதிமுக.. லட்டு சான்ஸ் மிஸ் ஆகிறதே? -
நாடு முழுதும் ESMA அமல்.. கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டால் மத்திய அரசு அதிரடி.. மீறினால் அவ்வளவுதான்












Click it and Unblock the Notifications