• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

படத்தில் நடித்ததற்காக தனுஷை குறித்து இப்படி ஒரு பதிவா..?? ஆஜித்தை வாழ்த்தும் ரசிகர்கள்

Google Oneindia Tamil News

சென்னை: விஜய் டிவியின் ஜூனியர் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் மூலம் சின்னத்திரையில் அறிமுகமாகி பிக் பாஸ் 4 நிகழ்ச்சியால் நன்கு பிரபலமான ஆஜித், தற்பொழுது வெளியாகி உள்ள நானே வருவேன் திரைப்படத்தில் நடிக்கும் அளவிற்கு உயர்ந்துள்ளார்.

ஆஜித்திற்கு பல பிரபலங்களிடமிருந்து வாழ்த்துகள் குவிந்து வருகிறது.

தன்னுடைய இந்த வளர்ச்சியை குறித்து ஆஜித் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளது சமூக வலைதளங்களில் வைரலாக வலம் வந்து கொண்டிருக்கிறது.

சின்னத்திரை சிம்பு ஆகிவிட்டாரா ஆஜித்??.. கலாய்க்கும் நெட்டிசன்கள்சின்னத்திரை சிம்பு ஆகிவிட்டாரா ஆஜித்??.. கலாய்க்கும் நெட்டிசன்கள்

ஜூனியர் ஆக களம் இறங்கிய ஆஜித்

ஜூனியர் ஆக களம் இறங்கிய ஆஜித்

விஜய் டிவியின் ஜூனியர் சூப்பர் சிங்கரில் டைட்டில் வின்னராக புகழ் பெற்ற ஆஜித் சிறுவயதிலேயே தன்னுடைய குறும்புத்தனமான ஆட்டிட்யூடால் அந்த நேரத்தில் பல ஆல்பம் சாங் களில் நடித்து மிகவும் பிரபலமானார்.விஜய் டிவியின் மூலம் பிரபலமானவர்கள் விஜய் டிவிக்கு என்று தத்து கொடுக்கப்பட்டவர்கள் போல் என்ற எழுதப்படாத ஒரு விதி இருக்கிறது. அதைப் போலவே விஜய் டிவியின் மூலம் பிரபலமான ஆஜித் அவ்வப்போது சில ரியாலிட்டி ஷோக்களில் வந்து பாடுவதும் போவதுமாக இருந்தார்.

சீனியர் ஆனதும் பிரமோஷன்

சீனியர் ஆனதும் பிரமோஷன்

ஜூனியர் ஆக இருந்த ஆஜித்தை ரியாலிட்டி ஷோ என்டர்டைனராக பாடுவதற்கு பயன்படுத்தி வந்த விஜய் டிவி அவரே சீனியர் ஆனதும் போட்டியாளராக பிக் பாஸ் வீட்டிற்குள் களமிறங்க வாய்ப்பு கொடுத்தது. பிக் பாஸ் வீட்டிற்குள் போன ஆஜித்தும் ரம்யா பாண்டியனின் உடன்பிறவா சகோதரராகவும்,கேபிரில்லாவின் நெருக்கமான நண்பராகவும் மாறியதால் பெரிய அளவிற்கு தன்னுடைய பெயரை டேமேஜ் ஆக்கிக் கொள்ளாமல் நல்ல பையனாக பெயரெடுத்து செரிலிபிரிட்டியாக வெளிவந்தார்.

வெரைட்டி வெரைட்டியாக பெர்பார்மன்ஸ்

வெரைட்டி வெரைட்டியாக பெர்பார்மன்ஸ்

செலிபிரிட்டியான பின்பு தன்னுடைய சமூக வலைதள பக்கங்களை பின்பற்றுவோர் எண்ணிக்கை அதிகம் ஆகிவிட்டதால், அவர்களுக்காவும் செலிபிரிட்டி இமேஜை நிலை நிறுத்துவதற்காகவும் ஏதாவது வீடியோவை அப்லோட் செய்து மகிழ்வித்து வந்தார். விஜய் டிவியின் பிக் பாஸ் போட்டியாளர்களை வைத்து நடத்திய பிபி ஜோடிகள் டேன்ஸ் நிகழ்ச்சியிலும் கேபிரில்லாவுடன் இணைந்து வேற லெவலில் பெர்பாமன்ஸ் கொடுத்திருந்தார்.

நானே வருவேனில் நான்

நானே வருவேனில் நான்

சமூக வலைதளங்களில் பெர்பாமென்ஸ் செய்து கொண்டிருந்தவருக்கு தனுஷ்- செல்வராகவன் கூட்டணியில் உருவான நானே வருவேன் திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு தொக்காக கிடைத்தது. படத்தின் ரிலீஸ்க்கு தன் நண்பர்களுடன் சென்றுள்ள ஆஜித் சில போட்டோக்களையும் வீடியோக்களையும் அப்லோட் செய்தும் தான் நடித்ததை குறித்து சில விஷயங்களையும் பகிர்ந்து உள்ளார். "பெரிய திரையில் என்னைப் பார்ப்பதும், நான் எப்போதும் ரசித்த இரண்டு பேருடன் எனது திறமைகளைப் பகிர்ந்து கொள்வதும் உண்மையில் கடவுளின் ஆசீர்வாதம். சினிமா ஆர்வலர்களிடமிருந்து உண்மையாக வரும் விமர்சனங்கள் யாரும் எதிர்பார்க்காத அளவுக்கு அதிகமாக உள்ளது, மேலும் நான் இந்த படத்தின் ஒரு பகுதியாக இருப்பது எப்போதும் சிறந்த உணர்வுகளில் ஒன்றாகும். ஆதரவுக்கு உங்கள் அனைவருக்கும் நன்றி. மற்றும் நான் இந்தத் துறையில் நீண்ட காலம் வாழத் தூண்டும் தனுஷ் சார் மற்றும் செல்வராகவன் சார் ஆகியோரிடமிருந்து தொழில் ரீதியாக நிறைய கற்றுக்கொண்டேன்". என்று பதிவிட்டுள்ளார்.இந்த பதிவை பார்த்த அவரது சக பிக் பாஸ் போட்டியாளர்களான ரம்யா பாண்டியன், சம்யுக்தா தொடங்கி பலர் ஆஜித்துக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

English summary
Aajeedh took to Instagram saying, "Seeing myself on the big screen and sharing my talents with two people I've always admired is truly a blessing from God. The reviews coming in from true cinephiles have been beyond anyone's expectations and being a part of this film is one of the best feelings ever. Thank you all for your support.And I have learned a lot professionally from Dhanush sir and Selvaraghavan sir who inspire me to stay long in this industry".
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X