இன்று இதுதான் தேவை... ஆரியின் அசத்தலான குடியரசு தின வாழ்த்துக்கள்
சென்னை: நாடு முழுவதும் இன்று குடியரசு தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகின்றது.
நடிகர் ஆரி அனைவருக்கும் தன்னுடைய குடியரசு தின வாழ்த்துக்களை கம்பீரமாக வார்த்தைகளோடு கூறியிருக்கிறார்.

பிக்பாஸில் அமோக வரவேற்பு
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி அதிக அளவில் ரசிகர்களை கவர்ந்த ஒரு நிகழ்ச்சியான பிக் பாஸ் நிகழ்ச்சியில் நான்காவது சீசனில் வெற்றியாளராக வாகை சூடிய ஆரி அர்ஜுனன் ஒரு நடிகராக மட்டுமல்லாமல், தமிழையும் தமிழ் மொழியையும் நேசிக்கும் ஒரு சராசரி மனிதராகவும் இருந்து வருகிறார். இவர் பாரம்பரிய விதைகள் மீட்டெடுத்து வருகிறார். அதுமட்டுமில்லாமல் பல்வேறுவிதமான முன்னேற்ற வழி முறைகளையும் செய்து வருகிறார். இளைஞர்களை கவரும் விதமாக இவருடைய செயல் இருந்ததாலே இவருக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் அமோக வரவேற்பு கிடைத்தது.

நடிப்பை தாண்டிய சிறந்த குணம்
பிக் பாஸ் நிகழ்ச்சியில் அறிமுகமாவதற்கு முன்பு தான் ஒரு நடிகராகவும், சமூக சேவகராகவும் தொண்டுகள் பல செய்பவராகவும் சிறந்து விளங்கிய இவர், இந்த நிகழ்ச்சிக்கு பிறகும் தன்னுடைய பழைய வாழ்க்கையில் கவனத்தை செலுத்திக் கொண்டு இருக்கிறார். அது மட்டுமில்லாமல் பல புது படங்களிலும் நடித்துக் கொண்டிருக்கிறார். இவருடைய திரைப்படங்கள் வெளியாகவில்லை என்று ரசிகர்கள் பலர் ஆர்வத்தோடு எதிர்பார்த்து வருகிறார்கள். ஆனால் அது விரைவில் நடக்கும் என்று இவர் கூறியுள்ளார்.

சிறப்பான குடியரசு தினம்
இதுவரைக்கும் 5 சீசன்களில் பிக்பாஸ் நிகழ்ச்சி முடிவடைந்திருக்கும் நிலையில் எந்த ஒரு சீசன்களில் போட்டியாளர்களுக்கும் கிடைக்காத அளவில் இவருக்கு அதிகமாக வாக்குகளைப் பெற்று இவர் வெற்றி பெற்றுள்ளார். இவருடைய கேரக்டர் மற்றும் துணிச்சலை ரசிக்கும் ரசிகர்கள் இவருக்கு சமூக வலைத்தளத்திலும் பாலோவர்ஸ்களாக இருந்து வருகின்றனர். தற்போது இன்று குடியரசு தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. கொரோனா ஊரடங்கு காரணமாக எளிமையாக கொண்டாடப்பட்டு வந்தாலும் அனைவரும் சமூக வலைத்தளத்தில் வாழ்த்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.

குடியரசு தின வாழ்த்துக்கள்
தற்போது சமூகத்தில் நடக்கும் அவலங்களை குறிக்கும் விதமாக, ஆரி 'நாட்டை சீரழிக்கும் மதவெறி, சாதிவெறி, பயங்கரவாதம் ஆகியவற்றை வீழ்த்தி நமது முன்னோர்கள் பெற்றுத் தந்த சுதந்திரத்தை பாதுகாத்து நாட்டின் வளர்ச்சியை ஒருங்கிணைத்து முன்னெடுக்க இந்நாளில் அனைவரும் உறுதி ஏற்போம்...என்று குடியரசு தின வாழ்த்துக்களை தன்னுடைய ரசிகர்களுக்கு பகிர்ந்துள்ளார். இவருடைய இந்த போஸ்ட்க்கு ரசிகர்கள் பலர் லைக்குகளை அளித்து கமெண்ட்களை அனுப்பி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications