பார்த்திபன்- சீதாவோடு அழகிய போட்டோ வெளியிட்ட மகள்.. மகிழ்ச்சியான வாழ்த்து செய்தி
சென்னை: நடிகராகவும் இயக்குனராகவும் பலருக்கும் பரிச்சயம் ஆன பார்த்திபன் மற்றும் நடிகை சீதாவின் இரண்டாவது மகளான அபிநயா தன்னுடைய பெற்றோரோடு எடுத்த புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார். அவருக்கு ரசிகர்கள் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள்.
80ஸ் காலகட்டத்தில் இறுதியில் 90ஸ் காலகட்டத்திலும் பல படங்களில் நடித்த நடிகை சீதா மற்றும் பார்த்திபன் இப்ப வரைக்கும் சினிமா மற்றும் சீரியல்களில் தொடர்ந்து நடித்து வருகிறார்கள். இவர்கள் இருவரும் பல வருடங்களுக்கு முன்பே காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் சில வருடங்களில் இவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் பிரிந்து விட்டனர்.

இயக்குனர் பார்த்திபன் தன்னுடைய திரைப்படங்களில் பல புதுமைகளை செய்து கொண்டு இருக்கிறார். ஆனா அதற்கான அங்கீகாரம் ரசிகர்கள் மத்தியில் அவருக்கு கிடைத்தாலும் அவருடைய உழைப்பு மற்றும் திறமையை அங்கீகரிக்கும் விதமாக விருதுகள் கொடுக்கப்படாதது ஏமாற்றத்தை கொடுத்துக் கொண்டிருக்கிறது.
ஆரம்பத்தில் பார்த்திபன் இயக்குனராக அறிமுகமாகி இருந்தாலும் பிறகு நடிகராகவும் கலக்கி கொண்டிருக்கிறார். புதிய பாதை என்ற திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போது அந்த திரைப்படத்தில் தன்னோடு நடித்த நடிகை சீதாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

தற்போது கூட சினிமா மற்றும் சீரியலில் ஒன்றாக நடிப்பவர்கள் காதலித்து திருமணம் செய்து கொண்டு இருப்பதை பார்த்திருப்போம். அவர்களுக்கு முன்னோடியே இந்த தம்பதி தான். ஆனால் இவர்கள் இருவரும் திடீரென்று பிரிந்தது பெரிய அளவில் பேசப்பட்டது. பார்த்திபன் மற்றும் சீதா இருவரும் பிரிந்து இருந்தாலும் குழந்தைகள் மீது அதிகமான அன்பு வைத்திருக்கிறார்கள்.
இந்த தம்பதிக்கு இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் இருக்கிறார்கள். அதில் மகன் இயக்குனராக வேண்டும் என்று முயற்சி செய்து கொண்டிருக்கிறார் என்றும் என்னுடைய மூத்த மகளும் மருமகனும் இயக்குனர் ஆவதற்கு ஆசைப்படுகிறார்கள் என்றும் கூட பார்த்திபன் ஒரு பேட்டியில் பேசியிருந்தார்.

அதுபோல என்னுடைய மூத்த மகள் கீர்த்தனா முதல் பொக்கிஷம் என்றும் அவருக்கு இசை மீது அதிகமான ஆர்வம் உண்டு, அதுமட்டுமல்லாமல் நான் மீண்டும் என் வாழ்க்கையில் சினிமாவில் நுழைந்ததற்கு என்னுடைய மகள் கீர்த்தனா மட்டும்தான் முழுக்க முழுக்க காரணம். அதுபோல எப்போதுமே என்னுடைய மகள் கீர்த்தனா என்னுடைய உயிர் என்றும் கீர்த்தனா அறிவு, என்னுடைய மகன் அன்பு என்றும் பேசியிருந்தார்.
அதுபோல பார்த்திபனின் இன்னொரு மகளான அபிநயாவிற்கு கடந்த 2019 ஆம் ஆண்டு மார்ச் மாதம் திருமணம் நடைபெற்றது. நரேஷ் என்ற தொழில் அதிபரை அவர் திருமணம் செய்து இருக்கிறார். பார்த்திபனின் மகள் அபிநயா சமூக வலைத்தளத்திலும் செம ஆக்டிவாக இருக்கிறார்.
தன்னுடைய தந்தை மற்றும் அம்மாவோடு எடுத்த புகைப்படங்களை அபிநயா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். இருவரோடும் தனித்தனியாக அவர் எடுத்த புகைப்படங்கள் இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

பார்த்திபன் மற்றும் சீதா இருவரும் சேர்ந்து வாழ வேண்டும் என்று பலர் அந்த பதிவுக்கு கீழே கமெண்ட் கொடுத்து இருக்கிறார்கள். ஏற்கனவே ஒரு பேட்டியில் பார்த்திபன் பேசும்போது எனக்கு இப்போது இருக்கிற மெச்சூரிட்டி நான் சீதாவை விவாகரத்து செய்யும் போது இருந்திருந்தால் அவர் மீண்டும் சினிமாவில் நடிக்க வேண்டும் என்று கேட்கும் போது சந்தோஷமாக போயிட்டு வாமா என்று அனுப்பி வைத்திருப்பேன்.
ஆனால் அப்போது நான் வளர்ந்த சூழ்நிலை மற்றும் மெச்சூரிட்டி இல்லாததால் நான் அந்த நேரத்தில் எடுத்த முடிவு சரி என்று நினைத்து விட்டேன். ஆனால் அது இப்போது தப்பு என்று தெரிகிறது என்று வெளிப்படையாக ஒரு பேட்டியில் பேசி இருந்தார்.












Click it and Unblock the Notifications