அபிஷேக்கின் ராஜதந்திரங்கள் வீணாகப் போய்விட்டதே...ஒரே வார்த்தையில் ஆஃப் செய்த சுருதி
சென்னை: எல்லார்கிட்டயும் வாயாலே வடை சுட முடியாது என்பதை சுருதி, அபிஷேக்குக்கு நிரூபித்துவிட்டார்.
காக்காவை நரி ஏமாற்றினது மாதிரி கதை சொல்லிக் கொண்டிருந்த அபிஷேக்குக்கு அல்வா கொடுத்து திருப்பி அனுப்பிவிட்டார் சுருதி.
எவ்ளோ ஃபீல் பண்ணி பேசியும் பாச்சா பலிக்கவில்லையே என அபிஷேக் காண்டாகி இருக்கிறார்.

சூட்சமத்தை கண்டுபிடித்துவிட்டார்
அந்தப் பக்கமா ஒரு பேச்சு இந்த பக்கமா ஒரு பேச்சு என்று தன்னுடைய கதையை சாதித்துக் கொள்வதற்காக அபிஷேக் நடத்திய நாடகத்தை பாதியிலேயே முடித்து அனுப்பி விட்டார் சுருதி. இதைப் பார்த்ததும் அபிஷேக்கின் நெகட்டிவ்வர்ஸ் சுருதியை கொண்டாடி வருகின்றனர். அடடா என்ன தைரியமான பேச்சு என்று சுருதிக்கு ஆதரவு கூடி வருகிறது. இதுவரைக்கும் இருந்த இடம் தெரியவில்லை என்று பலர் கூறிக் கொண்டிருந்த நேரத்தில் சுருதி தற்போது வெளிப்படையாக பேசியதுதான் ரசிகர்களின் மத்தியில் இவருக்கு நல்ல பெயரை வாங்கிக் கொடுத்திருக்கிறது.

பறக்கும் மீம்ஸ்கள்
இப்பதான் விளையாட்டை விளையாட தொடங்கியிருக்கிறார் என்று சுருதிக்கு ஒரு பக்கம் ஆதரவு அதிகரித்துக் கொண்டிருக்கும் போது, பலர் அபிஷேக்கின் மூக்கு உடைந்து விட்டது என்று கலாய்த்து வருகின்றனர். இதை இதைத்தான் எதிர்பார்த்தோம் என்று பிக்பாஸ் ரசிகர்கள் ஒரு பக்கமாக மீம்ஸ்களை பறக்க விட்டுக் கொண்டிருக்கும்போது, என்ன மாதிரி எல்லாம் டபுள் கேம் விளையாடுகிறார் பார்த்தீர்களா??என்று அபிஷேக் மீது பலர் காட்டில் இருக்கின்றனர். ஆனால் இவருடைய சூட்சம செயல்பாடுகளை சக போட்டியாளர்கள் நன்றாகவே புரிந்து வைத்து விட்டார்கள்.

சரியாச் சொன்ன நிரூப்
அபிஷேக், பிரியங்காவுடன் மட்டும்தான் கூட்டாக இருந்துகொண்டு பிரியங்காவை அதிகமாக உசுப்பேத்தி சக போட்டியாளர்கள் இடம் மல்லுக்கட்ட வைத்து வருகிறார், என்று ரசிகர்கள் ஒரு பக்கம் கூறிக் கொண்டிருந்த நேரத்தில், நேற்றைய எபிசோட்டில் நிரூப் அதையே கூறிவிட்டார். நீ பிரியங்காவை ரொம்பவே உசுப்பேத்துற என்று சொன்ன அந்த வார்த்தைகள் ரசிகர்களுக்கு எனர்ஜி கொடுத்திருக்கிறது. இதைத்தான் நாங்கள் சொல்லி கொண்டு இருக்கிறோம் என்று பலருக்கு நிரூப் சப்போர்ட் கொடுத்துக் கொண்டிருக்கின்றனர்.

அபிஷேக் ஃபீல் ஆகிட்டாரே
நேற்றைய ஆட்டத்தில் எப்படியும் வெற்றி பெற்றுவிட வேண்டும். தான் இந்த வாரம் எலிமினேஷனில் இருந்து தப்பித்து விட வேண்டுமென்று கவனமாக மட்டுமல்லாமல் அறிவாகவும் அபிஷேக் விளையாடிக் கொண்டிருந்தார். ஆனால் இதையெல்லாம் எங்க கிட்ட நடக்காது என்று ஒரே அடியாக நேருக்கு நேராக சொல்லி துரத்தி அனுப்பிவிட்டார் சுருதி. பாவனி கிட்ட இந்த மாதிரி பேச முடியல ஆனா நாங்க என்ன உனக்கு குறைவா தெரியுமா என்று அவர் பேசிய வார்த்தைகள் தற்போது சமூக வலைத்தளத்தில் மீம்ஸ்களாக பறந்து வருகிறது. சுருதி வைத்திருக்கும் காயினை எப்படியாவது பெற்றுவிட வேண்டும் என்று துடித்துக் கொண்டிருந்த அபிஷேக்குக்கு அது கிடைக்காமல் திரும்பி போனது பார்த்து அவருடைய ரசிகர்கள் ஃபீல் பண்ணி வைத்திருக்கின்றனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications