தான் சம்பந்தப்பட்ட எபிசோடுகளை தவிர வேறு எதையும் பார்க்கவில்லை..மீண்டும் கேமை தொடங்கிய அபிஷேக்
சென்னை: வைல்ட் கார்டு கன்டஸ்டன்ட் ஆக திரும்பவும் பிக் பாஸ் வீட்டிற்கு நுழைந்துள்ள அபிஷேக், தன்னுடைய கேரக்டரை ஏதேனும் மாற்று இருக்கிறாரா!? என்று பார்த்தால் உண்மையிலேயே அது இல்லை என்று தான் கூற முடியும்.
முன்புபோல் அனைவரிடமும் வான்டட் ஆக பேசவில்லையே தவிர அவரது மூவ்மென்டுகள் அனைத்தும் அமைதியாக பழைய மாதிரியே தான் இருக்கிறது என்று பிக்பாஸ் நிகழ்ச்சியை தொடர்ந்து பார்த்து வருபவர்கள் கருத்தாக இருக்கிறது.
நேற்றைய எபிசோடு கூட அதை ஞாபகப் படுத்துவதாக இருந்தது.

கிரேட் டாஸ்க்
ஹவுஸ் மெட்டுகள் அனைவருக்கும் ஏ, பி, சி,எப்,என்கின்ற ரேங்கில் கிரேட் கொடுக்கும் டாஸ்கில் சஞ்சீவ் அபிஷேக்கிற்கு பெயிலர் எனப்படும் எப் கிரேடு கொடுத்து அதற்கான காரணத்தையும் விளக்கி கூறினார். மனதில்படுவதை பேசுவதாக நினைத்துக் கொண்டு எல்லோரிடமும் சென்றது எதையாவது பேசுவதால் தான் எப் கிரேட் கொடுத்ததாக கூறினார். அபிஷேக்கும் நெஞ்சை நிமிர்த்தி அதை பெருந்தன்மையோடு ஏற்றுக்கொண்டார்.

சத்தியமா பார்க்கலை
எப் கிரேட் பெற்றதைக் குறித்து ரம்யாகிருஷ்ணன் அவரிடம் கருத்து கேட்டபோது,தான் இடையில் போட்டியில் இருந்து வெளியேறிய பின்பு தன் நண்பர்களால் தொகுக்கப்பட்ட, தான் மட்டுமே பெர்பாமன்ஸ் பண்ணிய வீடியோக்களை பார்த்ததாகவும், அதன்மூலம் தான் பல விஷயங்களை புரிந்து கொண்டதாகவும், அதற்கேற்ப இனிமேல் தன்னுடைய கேமை பார்த்து பார்த்து விளையாட போவதாகவும் கூறினார்.

நெட்டிசன்களின் கருத்து
பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஆரம்பத்திலேயே தான் இதுவரை பிக்பாஸ் நிகழ்ச்சியையே பார்த்ததில்லை என்று கூறிய அபிஷேக், நேற்று எபிசோடில் தான் வெளியே சென்ற பின்பும் பிக்பாஸ் நிகழ்ச்சியை முழுமையாக பார்க்கவில்லை என்றும் தான் சம்பந்தப்பட்ட தொகுப்புகளை மட்டும் பார்த்ததாக கூறியது கொஞ்சம் வித்தியாசமாக இருக்கிறது. மற்றவர்களைப் பற்றி தெரிந்து கொள்ளாமல் அவரை பற்றி மட்டுமே அவர் தெரிந்து கொண்டு கேமை எப்படி சிறப்பாக விளையாட முடியும் என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

மீண்டும் தொடங்கிய விளையாட்டு
தாமரையின் பதிலடி தாக்குதல் மிரண்டு போயிருந்த பிரியங்காவிற்கு சமாதானம் கூறுவதாக நினைத்துக் கொண்டு பெரிய ஆட்களை தாக்கிப் பேசினால் மக்களுக்கு பிடிக்கும் அதனால் தான் உன்னை தாக்கி பேசுகிறார் என்றும், என்னை தாக்கி பேசினார் 10 பேருக்கு பிடிக்கும் என்று அப்படியே தன்னையும் கூட இனைத்து கொண்டு பெரிய ஆள் என கூறிக் கொண்டது பழைய அபிஷேக் இன்னும் மாறவில்லை அப்படியேதான் இருக்கிறார் என்று நினைவூட்டுவது போல் இருந்ததாக பிக்பாஸ் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.சாதாரண அபிஷேக்கா இருக்கும்பொழுது கண்டன்டுகளை அள்ளிக்கொடுக்கும் அபிஷேக்,தற்பொழுது அனலைசிஸ்ட் அபிஷேக்காக மாறி வந்திருக்கிறார். எப்படி எல்லாம் கண்டன்ட் தர போகிறாரோ!!??? என்று பொறுத்திருந்து பார்ப்போம்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications