பாரதி கண்ணம்மா சீரியல் முடிவு நேரத்தில் உருக்கமாக பேசிய இயக்குனர்...கதாநாயகன் செய்த எதிர்பாராத செயல்

இந்த டிராவல் உண்மையிலே என்னுடைய வாழ்க்கையில் மறக்க முடியாத ட்ராவல் நான்கரை வருடங்களாக இந்த பாரதி கண்ணம்மா சீரியலில் நான் டிராவல் செய்து இருக்கிறேன் என இயக்குனர் பிரவீன் பெண்ணட் உருக்கமாக பேசியிருக்கிறார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: பாரதி கண்ணம்மா சீரியலில் முதல் பாகம் இன்னும் ஒரு சில நாட்களில் முடிவடைய இருக்கிறது.

இந்த சீரியலின் சூட்டிங் முழுவதும் முடிந்து விட்டது.

கடைசி நாள் ஷூட்டிங்கின் போது இந்த சீரியலின் இயக்குனர் பிரவீன் பெண்ணட் சீரியல் மற்றும் அனைவரையும் ரொம்பவே மிஸ் பண்ணுவதாக உருக்கமாக பேசியிருக்கிறார்.

பாரதி கண்ணம்மா சீரியலில் எத்தனையோ பேர் மாறி இருந்தாலும் கதாநாயகன் மாறாமல் நான்கரை வருடங்களாக பயணித்திருக்கிறார்

இந்த நிலையில் கடைசி நிமிடம் என பாரதியாக நடிக்கும் அருண் அனைவருக்கும் நன்றி கூறி வீடியோ வெளியிட்டு இருக்கிறார்.

இனிமையான முடிவு

இனிமையான முடிவு

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீரியல் இன்னும் ஒரு சில நாட்களில் முதல் அத்தியாயம் முடிவடையே இருக்கிறது இந்த சீரியல் சுமார் நான்கரை வருடங்களாக ஒளிபரப்பாகி வந்த நிலையில் இந்த சீரியலில் ரசிகர்கள் எதிர்பார்த்தபடியே சுபம் சுமூகமாக இருக்கிறது. ஆரம்பத்தில் இருந்து இந்த சீரியலில் எத்தனையோ பிரச்சனைகள், அழுகைகள், போராட்டங்கள் வந்து கொண்டிருந்தாலும் கடைசியில் எல்லாம் சாதித்து அனைத்தையும் முடித்துவிட்டு ஒரு இனிமையான நினைவுகளோடு இந்த சீரியல் முடிவடைய இருக்கிறது. ஆரம்பத்தில் இருந்து இந்த சீரியலுக்கு அதிகமான நெகட்டிவ் கருத்துக்கள் வந்து கொண்டிருந்தது.

பிரபலமான மீம்ஸ்

பிரபலமான மீம்ஸ்

எந்த இடத்திலும் தங்களுக்கு வரும் நெகட்டிவ் கருத்துக்களை குறித்து கவலைப்படாத இந்த சீரியல் டீம் நான்கரை வருடங்களாக ஒன்றாகவே பயணித்தது. இந்த சீரியலில் கதாநாயகி ரோஷினி ஹரிபிரியன் ஆரம்பத்தில் கண்ணம்மாவாக நடித்து பின்பு அவர் விலகி அவருக்கு பதிலாக தற்போது வினுஷா தேவி நடித்து வருகிறார். சீரியலில் ஆரம்பத்தில் அதிகமான நெகட்டிவ் கருத்துக்கள் ரோஷினி ஹரி பிரியனுக்கு தான் வந்தது. அவர் கையில் பேக்கை தூக்கிக்கொண்டு நடந்ததை குறித்து அதிகமான நெட்டிசன்கள் விதவிதமாக மீம்ஸ் வெளியிட்டு கண்ணம்மா, சென்னை முதல் விண்வெளி வரைக்கும் சென்று விட்டதாக புகைப்படங்கள் பரவி வந்தது. அதுமட்டுமல்லாமல் கதாநாயகன் எப்போதும் முகத்தை உர்ரென்று வைத்துக் கொண்டிருப்பதும் அவருடைய முகத்தில் எக்ஸ்பிரஷனை பார்க்க முடியவில்லை என்றெல்லாம் அதிகமாக கலாய்க்கப்பட்டு வந்தார்.

பிரியும் நேரம் வந்துவிட்டது

பிரியும் நேரம் வந்துவிட்டது

இந்த நிலையில் தற்போது ரசிகர்கள் எதிர்பார்த்தபடியே இந்த சீரியல் முடிவடைவது இந்த சீரியலின் ரசிகர்களுக்கு கொஞ்சம் வருத்தமாக தான் இருக்கிறது. பாரதி மற்றும் கண்ணம்மாவின் திருமணம் மீண்டும் நடைபெற இருக்கும் நிலையில் பாரதியின் திருமணத்தோடு இந்த சீரியல் முடிவடைகிறது. அதில் எடுக்கப்பட்ட சீன்களில் கடைசியாக அனைவருக்கும் டாடா காண்பிக்கும் நேரம் வந்ததும் அனைவரும் தங்களுடைய வருத்தத்தை பகிர்ந்து கொண்டிருக்கின்றனர். ஸ்கூல் காலேஜ் படிக்கும் போது ஒன்றாக படித்து ஃபேரவல் டே அன்று பிரியும் போது எப்படி எல்லோரும் பீல் பண்ணிக் கொண்டிருப்போமோ அதுபோல சீரியல் நடிகர்கள் அனைவரும் பீல் பண்ணிக் கொண்டிருக்கின்றனர்.

உருக்கமான வார்த்தைகள்

உருக்கமான வார்த்தைகள்

அப்போது இந்த சீரியலின் இயக்குனர் பிரவீன் பென்னட் இந்த டிராவல் உண்மையிலேயே என்னால் மறக்க முடியாத ட்ராவல். கிட்டத்தட்ட நான்கரை வருடங்கள் இந்த பாரதி கண்ணம்மா சீரியலில் நான் டிராவல் செய்து இருக்கிறேன். இதில் எத்தனையோ மாற்றங்கள் வந்திருக்கிறது. ஹீரோ மட்டும் மாறவில்லை .அதுபோல ஹீரோ உடைய அம்மா, அப்பாவும் மாறவில்லை. மீதம் இருந்த பலர் மாறி இருக்கின்றனர். இதை பார்க்கும் போது எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது, இதையும் தாண்டி நம்ம இந்த இடத்துல இன்று வந்து நிற்கிறோம் .இது நிறைவான சந்தோஷத்தோடு சீரியலை முடிக்கிறோம். இந்த முதல் பாகம் தான் முடிக்கிறோம். இன்னும் தொடர்ந்து போவோம் என்று சொன்னதும் அங்கு இருந்த நடிகர்கள் அனைவரும் கைதட்டி ஆரவாரம் செய்கின்றனர். இந்த வீடியோவை வெளியிட்டு இதுவரைக்கும் பாரதியாக நடித்து வந்த அருண் பிரசாத் கடைசி நேரம் தேங்க்யூ பார் ஆல் லவ் அண்ட் சப்போர்ட் என்று இந்த சீரியலில் அவரோடு நடித்த அனைவரையும் டேக் செய்து கூறி இருக்கிறார். இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் பலர் இதுவரைக்கும் எப்போ இந்த சீரியல் முடியும் என்று கேட்டோம். ஆனால் இப்போ முடிவை பார்க்கும் போது கொஞ்சம் வருத்தமாக இருக்கிறது என்று கூறி இருக்கிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+