
90ஸ் கிட்ஸ் பேவரைட் இருமலர்கள் சீரியல் கதாநாயகி.!! திரைப்படத்தில் அதுவும் இப்படியா?? பரவும் மீம்ஸ்
சென்னை: சமீபத்தில் திரைக்கு வந்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற சீதாராம் திரைப்படத்தின் கதாநாயகி மிருனாள் தாகூர் குறித்து ஒரு மீம்ஸ் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
மீம்சை பார்த்த 90ஸ் கிட்ஸ்கள் எல்லாம் அவரா..!! இவர்..!!? என்று ஆச்சரியத்தில் மூழ்கியுள்ளனர்.
நீண்ட இடைவெளிக்கு பின்பு சப்தமே இல்லாமல் திரைப்படங்களில் ரீ என்ட்ரீ கொடுத்துள்ள நடிகைக்கு தங்கள் வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர்.
திருமணம் ஆன இத்தனை நாளுக்குள் இப்படி ஒரு முடிவா!! ரவீந்தர் பதிவால் குழப்பத்தில் ரசிகர்கள்

காதல் படங்களில் எக்ஸ்பர்ட் துல்கர்
துல்கர் சல்மான் படங்களுக்கு என்று மலையாளம் மட்டுமின்றி தமிழ்,தெலுங்கு,மொழிகளிலும் தனி ரசிகர்கள் கூட்டம் இருக்கும். துல்கர் சல்மானும் தனது ரசிகர்களை ஏமாற்றாமல் ஒவ்வொரு படத்தையும் வேறு வேறு கதைக்களங்களில் கொடுத்து ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார். துல்கர் சல்மான் படங்களில் ஆக்சன், காமெடி, இருந்தாலும் ரசிகர்கள் அவரிடம் எதிர்பார்ப்பது என்னவோ காதல் படங்களை தான்.ரசிகர்களை விட ரசிகைகள் அதிகமாக வைத்திருக்கும் துல்கர் சல்மான் காதல் படங்களில் கொஞ்சம் ஸ்பெஷல் தான்.

காதல் காவியம் சீதாராம்
அனுராகவபுடி இயக்கத்தில் துல்கர் சல்மான் -மிருனாள் தாகூர், ரஷ்மிகா, இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் நடிப்பில் வெளிவந்த படம் சீதா ராம்.காதல் படங்களை விரும்பும் ரசிகர்களுக்கு நல்ல விருந்தாய் அமைந்திருந்தது இப்படம்.இசை, ஒளிப்பதிவு,திரைக்கதை என அனைத்திலும் சிறப்பான விமர்சனத்தை பெற்றிருந்தது இந்த படம் .சீதாராம் படத்தில் ராணுவ வீரராக துல்கர் சல்மான் நடித்திருந்தார். அவரை உருகி உருகி காதலிக்கும் நூர்ஜகான் என்ற இளவரசி கதாபாத்திரத்தில் மிருனாள் தாகூர் நடித்திருந்தார்.

90ஸ் களின் சீரியல் நாயகி
தற்போது சீதாராம் படத்தில் இளவரசி கதாபாத்திரத்தில் நடித்து அனைவரும் மனதையும் கொள்ளையடித்திருக்கும் மிருனாள் தாகூர் பற்றிய ஒரு மீம்ஸ் தான் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. தற்பொழுது சீரியலில் இருக்கும் நடிகைகளே கதாநாயகியாக நடிப்பது குதிரைக்கொம்பாக உள்ள இக்காலகட்டத்தில், தாங்கள் சீரியலில் பார்த்த நடிகையை பத்து வருடங்கள் கழித்து திரையில் கதாநாயகியாக பார்த்த 90ஸ் கிட்ஸ்கள் அவரை வைத்து அந்த மீம்ஸை கெத்தாக உருவாக்கியுள்ளனர்.

அம்முவாக அறிமுகமான நூர்ஜகான்
நூர்ஜகான் இளவரசியாக கலக்கிய மிருனாள் தாகூரை திரையில் பார்த்த ரசிகர்களுக்கு எங்கேயோ பார்த்து பரிச்சயமான முகம் போல் தோன்றியுள்ளது. சும்மா விடுவார்களா..!? விக்கிபீடியாவில் சென்று ஆராய்ச்சி செய்து பார்த்தவர்கள் ஷாக்காகி போனார்கள். சில வருடங்களுக்கு முன்பு ஜி5 சேனல் முன்பு ஜி தொலைக்காட்சியாக இருந்த போது அதில் ஒளிபரப்பான இனிய இரு மலர்கள் சீரியல் மூலம் அந்த நேரத்தில் பிரபலமாய் இருந்தவர்தான் மிருனாள் தாகூர். அவரது அம்மு கதாபாத்திரத்தை இன்னும் மறவாத 90ஸ் கிட்ஸ் அதை மீம்ஸ் ஆக உருவாக்கி பரவ விட்டுள்ளனர்.