ரொம்ப ஏமாந்து இருக்கேன்.. பிரியும் போது வருத்தப்பட்டேன்.. ஒன்றரை வருஷம் ஆகிடுச்சு! ஜெயம் ரவி எமோஷனல்
சென்னை: நடிகர் ஜெயம் ரவி தான் சின்ன வயதிலிருந்து ரொம்பவும் ஏமாற்றப்பட்டதாகவும், அதுபோல மறக்க முடியாத நினைவுகள் சிலவற்றையும் பகிர்ந்திருக்கிறார்.
நடிகர் ஜெயம் ரவி எடிட்டர் மோகனின் மகன் என்பது பலருக்கும் தெரியும். அது போல அவருடைய அண்ணன் ராஜாவும் பிரபல இயக்குனர் தான். ராஜா இயக்கிய ஜெயம் என்ற திரைப்படத்தின் மூலமாகத்தான் ஜெயம் ரவி சினிமாவில் அறிமுகமானார். கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கு மேலாக சினிமாவில் இருக்கும் ஜெயம் ரவி சமீபத்தில் பிரதர் என்ற திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இந்த திரைப்படம் தீபாவளிக்கு வெளியாக இருக்கிறது.

பல வருடங்களாக சினிமாவில் இருக்கும் ஜெயம் ரவி அதிகமாக சர்ச்சைகளில் சிக்கியது கிடையாது. எந்த நடிகைகளோடும் கிசுகிசுக்களில் சிக்காமல் இருந்த ஜெயம்ரவி சில மாதங்களுக்கு முன்புதான் அவருடைய மனைவியை விவாகரத்து செய்யப் போகிறார் என்ற செய்திகள் இணையத்தில் வெளியானது. அதைத் தொடர்ந்து ஜெயம் ரவி அதை உறுதி செய்திருந்தார்.
அதற்கு பிறகு ஜெயம் ரவிக்கு பிரபல பாடகி ஒருவரோடு தொடர்பு இருப்பதாகவும் வதந்திகள் பரவியது. அதை ஜெயம் ரவி மறுத்திருந்தார். இப்படியான நிலையில் தான் தொடர்ச்சியாக அவர் பேட்டிகளில் தன்னுடைய குடும்ப வாழ்க்கை மற்றும் சினிமா அனுபவங்கள் குறித்து பேசிக் கொண்டிருக்கிறார். இது பிரதர் பட ப்ரமோஷன் ஆக கூட இருந்தாலும் இவரை பற்றி பல விஷயங்கள் ரசிகர்கள் தெரிந்து கொள்ள முடிகிறது.
என் மகன் செய்த தப்பு இதுதான்..3 வருஷம் வீணா போச்சு.. ராஜா மாதிரி இருந்தான்..ஜெயம் ரவி அப்பா வருத்தம்
அதில் சில வருடங்களுக்கு முன்பு பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் ஆடியோ வெளியீட்டு விழாவில் தான் நடந்து கொண்ட விதம் குறித்து அதை ஒரு பேட்டியில் ஜெயம் ரவி பேசியிருக்கிறார். நான் சின்ன வயதிலிருந்து ரொம்பவும் ஏமாற்றப்பட்டு இருக்கிறேன். என்னுடைய நண்பர்கள் கூட என்னை கிண்டல் செய்வார்கள்.

சிலர் என்னிடம் டிக்கெட் வாங்கி தரேன் என்று பணத்தை வாங்கிக் கொண்டு சென்று விடுவார்கள். நான் ஏமாந்து இருப்பதை பார்த்து சிலர் என் மீது பரிதாபப்படுவார்கள். இது என்னுடைய நெருங்கிய நண்பர்களுக்கு தெரியும். பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நாங்க நடிக்கும் போது எல்லோரும் ஒரு குடும்பமாக பழகிவிட்டோம்.
திரிஷா, கார்த்தி எல்லோரிடமும் இருக்கும்போது எனக்கு எந்த கவலையும் தெரியாது. திடீரென்று அவர்களை பிரிய போகிறோம் என்று யோசித்தபோதுதான் என்னையும் மீறி அந்த இசை வெளியீட்டு விழாவில் நான் அழுதுவிட்டேன். அப்போ அங்கு இருந்த ரசிகர்கள் நாங்க இருப்போம் என்று சொன்னதால் அவர்கள் பக்கம் சென்று அவர்களை கட்டிப்பிடித்து இருந்தேன். இந்த வீடியோக்கள் அந்த நேரத்தில் பெரிய அளவில் பரவி வந்தது அதை நான் எதிர்பார்க்கல.
எனக்கு அந்த நேரத்தில் என்ன தோன்றுகிறதோ அதை அப்படியே பேசி விடுகிறேன். பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நடந்து ஒன்றரை வருடங்கள் கடந்து விட்டது அதற்கு பிறகு எங்களால் முன்பு போல ஒன்று சேர்ந்து பேச முடியவில்லை. அந்த வருத்தம் இருக்கத்தான் செய்கிறது என்று அந்த பேட்டியில் ஜெயம் ரவி பேசி இருக்கிறார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications