சீரியலுக்காக நடிகர் ஸ்ரீ செய்த செயல்.. வாழ்த்தும் ரசிகர்கள்
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் வானத்தைப்போல சீரியல் ரசிகர்களின் மத்தியில் நல்ல மதிப்பை பெற்றுள்ளது. டிஆர்பி யிலும் முதன்மையான இடத்தை வகுக்கும் இந்த சீரியலில் கதாநாயகனாக நடிக்கும் ஸ்ரீகுமார் தற்போது வெளியிட்ட சண்டை காட்சிகள் மேக்கிங் வீடியோ பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
ஆரம்பத்தில் இந்த சீரியலில் சின்ராசு ஆக தமன்குமார் நடித்து வந்தார். அவர் திடீரென்று இந்த சீரியலை விட்டு விலகியதும் அவருக்கு பதிலாக ஸ்ரீ நடிக்க வந்தார். ஸ்ரீ பாதியில் வந்ததால் அவரை சின்ராசு ஆக ரசிகர்கள் ஏற்றுக் கொள்வார்களா என்று தயாரிப்பாளர்கள் தரப்பிலிருந்து பெரிய அளவில் பயம் இருந்ததாம். ஆனால் ஒரு சில நாட்களிலே ரசிகர்கள் அவரை சின்ராசுவாக ஏற்றுக் கொண்டனர்.
வெள்ளித்திரைக்கு இணையாக சின்னத்திரைகளும் சண்டைக் காட்சிகளிலும் பலர் தங்களுடைய முழு உழைப்புகளை டெடிகேஷனாக வெளிக்காட்டி வருகிறார்கள். என்பதையும் தற்போது ரசிகர்கள் புரிந்து கொண்டார்களாம். ஸ்ரீகுமார் தற்போது முழு ஈடுபாட்டோடு தான் விரும்பும் நடிப்புத் துறையில் செய்த செயல் பலருடைய வாழ்த்துக்களை பெற்று வருகிறது. சின்னத்திரையில் தனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி வெள்ளித்திரையில் ஸ்ரீ தடம் பதிக்க வேண்டும் என்பதுதான் இவருடைய ரசிகர்களின் அதிகமான ஆசையாக இருந்து வருகிறதாம்.

பல முகம் இருக்குதே
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் வானத்தைப்போல சீரியல் ரசிகர்களின் மத்தியில் நல்ல மதிப்பை பெற்றுள்ளது. இந்த சீரியல் கதாநாயகனாக சின்ராசு கேரக்டரில் ஸ்ரீ நடித்து வருகிறார். அண்ணன் தங்கச்சி கதையை மையமாக கொண்ட இந்த சீரியலின் பாசத்தில் மட்டுமல்லாமல் என்னால் ஆக்ஷனிலும் கலக்க முடியும் என்று ஸ்ரீகுமார் அடிக்கடி நிரூபித்து வருகிறார். சின்னத்திரை கதாநாயகனாக பலருக்கும் பரிச்சயமான ஸ்ரீகுமார் தற்போது வெள்ளி திரையிலும் நடித்துக் கொண்டிருக்கிறார்.

ஒரே பாச மழை தான்
சில நாட்களுக்கு முன்பு கமல் நடிப்பில் வெளியான விக்ரம் திரைப்படத்தில் ஸ்ரீகுமார் முதன்மையான கேரக்டரில் நடித்திருந்தார். அதைப் பார்த்த இவருடைய தீவிரமான ரசிகர்கள் இதுபோல பல திரைப்படங்களில் நடிக்க வேண்டும் என்று வாழ்த்துக்களை கூறி வந்தனர். இந்த நிலையில் தான் நடித்து வந்த வானத்தைப்போல சீரியலுக்காக ஸ்ரீகுமார் செய்த செயல் பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளதாம். சீரியல் என்றாலே அழுகாச்சி சீன்களும், சண்டை சச்சரவுகளும் அதிகமாக இருக்கும் நேரத்தில் அங்கேயும் பாச கதைகளும் ஆறாக ஓடும் என்பதை இந்த வானத்தைப்போல சீரியல் நிரூபித்து வருகிறது. அண்ணனுக்காக தங்கச்சியும் தங்கச்சிக்காக அண்ணனும் உருகி உருகி தங்களுடைய பாதசத்தை காட்டி அனைவரையும் அழ வைத்து வருகிறார்கள்.

சண்டைக் காட்சிகள்
வானத்தைப்போல சீரியலின் கதை படி சிறுவயதிலேயே சின்ராசு மற்றும் அவருடைய சகோதரி துளசியும் அம்மா அப்பாவை இழந்து விட்டாலும் அண்ணனுடைய பாசம் மற்றும் பாதுகாப்பினால் துளசி வளர்க்கப்பட்டு வருகிறார். திருமணத்திற்கு பிறகு இவர்களுடைய வாழ்க்கையில் எவ்வளவு மாற்றங்கள் ஏற்பட்டும் என்பதுதான் இந்த சீரியலின் கதையாக இருந்தாலும் தற்போது துளசியின் வயிற்றில் வளரும் குழந்தையையால் சின்ராசுவிற்கு ஆபத்து என்று துளசியை அனைவரும் நம்ப வைத்துக் கொண்டிருக்கும் நேரத்தில் சின்ராசு கோவிலில் விரதம் இருந்து பூஜை செய்கிறார். அதில் சின்ராசு தற்போது எதிரிகளோடு சண்டை போட்ட சீன்கள் படமாக்கப்பட்டுள்ளது.

என்ன ஒரு டெடிகேஷன்
சண்டை என்றாலே சட்டைக்கிழியத்தானே செய்யும் என்று சொல்வது போல தற்போது சண்டை காட்சிகளில் வில்லன் ஒருவர் ஸ்ரீகுமாரின் முதுகில் மரப்பலகையை அடித்து உடைத்து இருக்கிறார். அது டூப்பாக செய்த செயல் என்று நினைத்துக் கொண்டிருந்த நேரத்தில் அது எவ்வளவு நிஜம் என்ற மேக்கிங் வீடியோவை தன்னுடைய இன்ஸ்டாகிராமில் ஸ்ரீகுமார் பதிவிட்டு இருக்கிறார். இந்த வீடியோவை பார்த்ததும் ரசிகர்கள் பலர் உங்களுடைய டெடிகேஷன் வேற லெவல் என்று கூறி வருகிறார்கள். அது மட்டும் அல்லாமல் நடிப்பு என்றாலும் பாதுகாப்பு முக்கியம் என்று பலர் அறிவுரைகளையும் ஸ்ரீ குமாருக்கு வழங்கி வருகிறார்கள்.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications