குடும்பத்தோடு தீ விபத்தில் சிக்கி நூலிழையில் தப்பிய ஸ்ரீ.. அவர் பேசிய உருக்கமான வார்த்தைகள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை பாண்டிபஜார் வணிக வளாகத்தில் நடந்த தீவிபத்தில் குடும்பத்துடன் நடிகர் ஸ்ரீ சிக்கியுள்ளார்.

நல்லவேளையாக எந்த பாதிப்பும் இல்லாமல் அவர் குடும்பம் மற்றும் கூட இருந்தவர்களும் காப்பாற்றப்பட்டு இருக்கின்றனர்.

வானத்தைப்போல சின்ராசு

வானத்தைப்போல சின்ராசு

இப்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் வானத்தைப்போல சீரியலின் சின்ராசு கேரக்டரில் நடித்து வரும் ஸ்ரீ மற்றும் அவருடைய குடும்பத்தினர் அதிர்ஷ்டவசமாக தற்போது உயிர் தப்பியுள்ளனர். இது சமூக வலைத்தளத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவர்கள் தீ விபத்திலிருந்து காப்பாற்றப்பட்ட வீடியோக்கள் ரசிகர்களால் அதிகமாக பகிரப்பட்டு கடவுளுக்கு நன்றிகளையும் கூறிவருகின்றனர்.

திரைத்துறை தம்பதிகள்

திரைத்துறை தம்பதிகள்

வெள்ளித்திரை கதாநாயகர்களுக்கு இணையாக சின்னத்திரையில் கலக்கி கொண்டிருக்கும் ஸ்ரீ பல வருடங்களாக சின்னத்திரையில் ஹீரோவாக நடித்து வருகிறார். அவருடைய மனைவி ஷமிதா தோழா தோழா தோள் கொடு தோழா எனும் பாடல் மூலம் ரசிகர்களின் மனதில் இப்ப வரைக்கும் வாழ்ந்து வருகிறார். தற்போது இவர் திரைப்படங்களில் வாய்ப்பு அதிகமாக இல்லாததால் சின்னத்திரையில் நடித்து வருகிறார். ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் பேரன்பு சீரியலில் ஷமிதா நடித்துவருகிறார். இவர்கள் இருவரும் சீரியல்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருந்தாலும் ப்ரீயாக இருக்கும் நேரத்தில் குடும்பத்தோடு என்ஜாய் பண்ணி வருகின்றனர்.

எதிர்பாராத விபத்து

எதிர்பாராத விபத்து

திரைத்துறை பிரபலங்களான ஸ்ரீ மற்றும் நடிகை ஷமிதா தன்னுடைய குழந்தைகளோடு சென்னை பாண்டிபஜார் வணிக வளாகத்தில் ஷாப்பிங் சென்று இருக்கும் நேரத்தில் அங்கு எதிர்பாராதவிதமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கிறது. இந்த தீவிபத்து நடந்த இடத்தில் 70 பேர் இருந்து உள்ளார்களாம். மூன்றாவது தளத்தில் இவர்கள் இருந்தாலும் அங்கே இருந்தவர்கள் தீயணைப்பு மற்றும் காவல்துறையினருக்கு துரிதமாக செயல்பட்டு அனைவரையும் எந்த பாதிப்பும் இல்லாமல் காப்பாற்றுகின்றனர் .

ஸ்ரீகுமார் அளித்த பேட்டி

ஸ்ரீகுமார் அளித்த பேட்டி

யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லாமல் மக்கள் பாதுகாப்பாக காப்பாற்றப்பட்டனர். இந்த சம்பவம் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இது குறித்து தீயில் சிக்கிய நடிகர் ஸ்ரீ கூறியிருப்பது: சென்னை பாண்டிபஜார் வணிக வளாகத்தில் குடும்பத்துடன் நான் சிக்கிக்கொண்டேன். மூன்றாவது தளத்தில் 70 பேர் நாங்கள் இருந்தோம். தீயணைப்பு மற்றும் காவல்துறையினர் துரிதமாக செயல்பட்டு எங்களை உயிருடன் மீட்டிருக்கின்றனர். அவர்களுக்கு ரொம்ப நன்றி, கடவுளுக்கு நன்றி என்று கூறியிருக்கிறார். இதையடுத்து சோசியல் மீடியாவில் ரசிகர்கள் பலரும் ஸ்ரீகுமார் உடல் நலம் குறித்து கேட்டு வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+