மேட்சிங் உடையில் குடும்பத்தோடு தீபாவளியை கொண்டாடிய விஜயகாந்த்.. மெய்சிலிர்த்த ரசிகர்கள்
சென்னை: கேப்டன் என்று ரசிகர்கள் செல்லமாக அழைக்கப்படும் விஜயகாந்த் தன்னுடைய குடும்பத்தோடு தீபாவளியை கொண்டாடி மகிழ்ந்து இருக்கிறார்.
சமீப காலமாகவே உடல்நிலை பிரச்சனையால் இருந்து வந்த விஜயகாந்த் தற்போது தீபாவளியை கொண்டாடி தன்னுடைய ரசிகர்களுக்கு வாழ்த்துக்களை கூறியிருக்கிறார்.
கம்பீரமாக பார்த்து வந்த விஜயகாந்த் தற்போது உடல் மெலிந்த நிலையில் இருப்பதை பார்த்து பீல் பண்ணும் ரசிகர்கள் விரைவில் அவர் நலம் பெற்று வர வேண்டும் என்று வேண்டி வருகிறார்கள்.

நடிப்பை தாண்டிய குணம்
ஒரு நடிகராகவும், அரசியல் கட்சித் தலைவராகவும் பலருக்கும் பரிச்சயமான விஜயகாந்த் தீபாவளி பண்டிகையை தன்னுடைய குடும்பத்தோடு சிறப்பாக கொண்டாடி இருக்கிறார். நாராயணன் விஜயராஜ் என்ற பெயரைக் கொண்ட விஜயகாந்த் ஒரு திரைப்பட நடிகராகவும் மட்டுமல்லாமல் இவருடைய தனிப்பட்ட கேரக்டர் மூலமும் ரசிகர்களை அதிகமாக கவர்ந்திருக்கிறார். இவர் வீட்டிற்கு எப்போது சென்றாலும் அனைவருக்கும் சாப்பாடு வழங்கப்படுமாம். அதுமட்டுமல்லாமல் இவர் செய்த பல நல உதவிகள் மூலமாக இவருக்கு அதிகமான ரசிகர்கள் இருந்து வருகிறார்கள்.

அரசியலிலும் அசைக்க முடியாதவர்
ஒரு நடிகராகவே பலருக்கும் உதவிகளை செய்து வந்த விஜயகாந்த் 2011 ஆம் ஆண்டு முதல் 2016 ஆம் ஆண்டு வரை தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவராக இருந்து வந்துள்ளார். அரசியலுக்கு வருவதற்கு முன்பு இவர் தயாரிப்பாளர், இயக்குனராக பல அவதாரங்களை வெற்றியாக முடித்து இருக்கிறார். தற்போது அவர் தேசிய முற்போக்கு திராவிட கழகம் கட்சியின் நிறுவனர் மற்றும் பொதுச் செயலாளராகவும் இரண்டு முறை சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்துள்ளார் .இந்த நிலையில் இவர் உடல்நிலை பிரச்சனை காரணமாக நடிப்பை விட்டு விலகி இருக்கிறார்.

இனிய தீபாவளி
கம்பீரமான நடிப்பாலும் தன்னுடைய கனீர் என்ற குரலாலும் அனைவரையும் மிரளவைத்த விஜயகாந்தின் தற்போதைய நிலை குறித்து அவருடைய தீவிரமான ரசிகர்கள் பீல் பண்ணி வருகின்றனர். ரசிகர்கள் மட்டுமல்லாமல் திரை பிரபலங்கள் கூட அவர் உடல்நிலை இப்படி ஆகிவிட்டதே என்று கருத்து தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில் இவர் தன்னுடைய குடும்பத்தோடு தீபாவளி பண்டிகையை மகிழ்ச்சியாக கொண்டாடி இருக்கிறார்.

நலம் பெற வேண்டும்
மீண்டும் விஜயகாந்த் பழைய நிலைக்கு திரும்பி வர வேண்டும் என்று இவருடைய ரசிகர்களும் கட்சியினரும் தற்போதைய இவருடைய லேட்டஸ்ட் போட்டோவுக்கு வாழ்த்துக்களும் அதிகரித்து வருகிறது. கம்பீரமாக பார்த்து ரசித்த விஜயகாந்த் தற்போது சோபாவில் அமர்ந்தபடி கையில் மத்தாப்போடு அதையும் அவருடைய மனைவியான பிரேமலதா பிடித்து இருப்பதை பார்க்கும்போது ரசிகர்களுக்கு கஷ்டமாக இருப்பதாகவும், விரைவில் அவர் பழைய நிலையில் நலம் பெற வேண்டும் என்று ரசிகர்கள் மட்டுமல்லாமல் திரை பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
-
சஞ்சய் 4 வருஷமாக படும்பாடு.. விஜய் நிஜ ஹீரோ இல்ல, தந்தையாக தோற்று விட்டார்! பிரபலம் ஆதங்கம் -
விஜய் சினிமாவை விட்டு விலக உண்மையான காரணம் இதுதான்! நேரடியாகவே சொன்னாரு! நடிகர் ஷியாம் ஓபன் -
விஜய் பற்றி என்னால் தப்பா பேச முடியாது.. ஏனென்றால்? ஓபனாக பேசிய சுந்தர் சி.. பாராட்டும் தவெக ரசிகர்கள் -
அந்த சம்பவத்தால் விஜய் அப்பாவிடம் அழுதாரு.. கோபத்தில் SAC செய்த சம்பவம்! நான் கூடவே இருந்தேன்! பிரபலம் ஓபன் -
Bhavani: சோசியல் மீடியாவை கலக்கும் இந்த நடிகை யார் தெரியுதா? அல்லு அர்ஜுனின் “சொந்தம்” -
சங்கீதா சொன்னது தான் உண்மையா? விஜயின் சொத்து பட்டியலை சுட்டிக்காட்டும் நெட்டிசன்கள்! அடுத்த பஞ்சாயத்து -
அவன் இவன் பட நடிகை ஜனனிக்கு எளிமையான கல்யாணம்.. வெளியான போட்டோஸ்.. குவியும் வாழ்த்து -
என் மகிழ்ச்சி இதுதான்! இறுதியாக ஒரே ஊரில் சேர்ந்து விட்டோம்! திரிஷாவின் பீலிங் ஆன போஸ்ட்! இதுதான் பதிலடியா? -
Happy Raj OTT: ஓடிடிக்கு வரும் ஜிவி பிரகாஷின் ஹேப்பி ராஜ்... எந்த தளத்தில், எப்போ பார்க்கலாம்? லீக்கான தகவல் -
அறந்தாங்கி நிஷா ஓபனாக சொன்ன ஒரு வார்த்தை.. அறிவே இல்லையா இப்படியா பேசுறது? மேடையிலேயே திட்டிய நடிகர் -
நடிகர் பிரகாஷ் ராஜின் அம்மா திடீர் இறப்பு.. இவ்வளவு பெரிய சோகங்களை கடந்து வந்தவரா அவர்! நெகிழ வைத்த கதை -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள்












Click it and Unblock the Notifications