"இதுதான் பூமியில் உண்மையான சொர்க்கம்”நெகிழ்ச்சியாக பகிர்ந்த திவ்யா ஸ்ரீதர்... குவியும் ஆசீர்வாதங்கள்
சென்னை: சின்னத்திரை நடிகையான திவ்யா ஸ்ரீதர் கர்ப்பமாக இருக்கும் நிலையில் ஆதரவற்றோர் இல்லத்தில் சென்று பெரியவர்களின் ஆசிர்வாதத்தை வாங்கி இருக்கிறார்.
கணவரோடு கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து இருக்கும் நிலையில் அடிக்கடி மோட்டிவேஷன் வீடியோ வெளியிட்டு வந்த திவ்யா ஸ்ரீதர் இப்போது செய்த செயலை பலரும் பாராட்டி வருகிறார்கள்.

குடும்ப பிரச்சனை
சமூக வலைத்தளத்தில் குடும்ப பிரச்சனையின் காரணமாக பரபரப்பை ஏற்படுத்திய திவ்யா ஸ்ரீதர் மற்றும் அர்ணவ் பிரச்சனை பலருக்கும் தெரிந்ததுதான். காதல் கணவர் திருமணத்திற்கு பிறகு தன்னை கொடுமைப்படுத்துவதாக திவ்யா போலீஸ் கம்ப்ளைன்ட் கொடுத்திருந்த நிலையில், செல்லமா சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் போது அவருடைய கணவரான அர்ணவ் கைது செய்யப்பட்டு பின்பு ஜாமினில் வெளிவந்திருக்கிறார். ஷாமினில் வெளியே வந்த பிறகு அர்ணவ் தன்னுடைய வீட்டிற்கு செல்லாமல் தனியாகத்தான் வசித்து வருகிறாராம். அதுபோல திவ்யாவும் தனியாக தன்னுடைய பெற்றோருடன் வசித்து வருகிறார் .இதற்கு முன்பு அவருடைய பெற்றோர் அவரோடு இல்லாமல் இருந்த நிலையில் ,இப்போது அர்ணவுடன் ஏற்பட்ட பிரச்சனைக்கு பிறகு திவ்யாவுடன் சேர்ந்து இருக்கின்றனர்.

இஎம்ஐ கட்டுவதில் பிரச்சனை
கர்ப்பமாக இருந்த நிலையில் திவ்யாவிற்கு இப்போது ஆறாவது மாதம் இந்த நிலையில் கணவர் அவருக்கு ஒரு போன் கூட செய்யவில்லையாம். அதுபோல தன்னுடைய வீட்டிற்கு இ.எம்.ஐ கட்டுவதும் இல்லை என்று திவ்யா கூறியிருக்கிறார். திவ்யா இருக்கும் வீடு, அர்ணவ்,திவ்யாவோடு சேர்ந்து இருக்கும்போது அர்ணவின் பெயரில் வாங்கியது தானாம். வீடு வாங்குவதற்காக ஆரம்பத்தில் தன்னுடைய நகைகள் எல்லாம் கொடுத்து விட்ட நிலையில் தற்போது தான் வேலை செய்து தன்னுடைய குடும்பத்தை பார்த்து வருவதாக கூறி இருக்கிறார். இந்த நிலையில் வீட்டிற்கு இஎம்ஐ கட்ட சொல்லி பேங்கில் இருந்து கால் பண்ணி கேட்டதற்கு அர்ணவ் அந்த வீட்டில் நான் இல்லை அதனால் நான் எதற்காக கட்ட வேண்டும்? வீட்டில் இருப்பவர்களிடம் கேளுங்கள்.இல்லை என்றால் வீட்டை நீங்களே எடுத்துக் கொள்ளுங்கள் என்று கூறியிருப்பதாக திவ்யா கூறி இருக்கிறார்.

பெரியவர்களின் ஆசிர்வாதங்கள்
சமீபத்தில் புது கார் ஒன்றை வாங்கிய திவ்யா அது குறித்து மோட்டிவேஷனலாக பல வீடியோக்களை வெளியிட்டு இருந்தார். அந்த நேரத்தில் அதற்கு ஜாடை மாடையாக பதில் சொல்லும் அளவில்தான் அர்ணவ் சமூக வலைதளத்தில் வீடியோ வெளியிட்டு கருத்துக்களை கூறியிருந்தார். இந்த நிலையில் திவ்யாவிற்கு அவருடன் சீரியலில் நடிக்கும் பிரபலங்கள் பலரும் வளைகாப்பு செய்து ஆசிர்வாதங்களை அழித்து வந்தனர். அது போல இப்போது திவ்யா அக்ஷயா டிரஸ்ட் என்கிற முதியோர் இல்லத்திற்கு சென்று அங்குள்ள பெரியவர்களின் ஆசிர்வாதத்தை பெற்றிருக்கிறார். அவர்கள் மனம் உருகி திவ்யாவுக்கு ஆசீர்வாதங்களை வழங்கியதை வீடியோவாக வெளியிட்டு இருக்கிறார்.

இதுதான் சொர்க்கம்
திவ்யா உருக்கமாக, "பெரியவர்களின் ஆசிர்வாதங்களும் மற்றவர்களின் விருப்பங்களும், உண்மையில் பூமியில் உண்மையான சொர்க்கம்" என்று பதிவிட்டு இருக்கிறார். இதற்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களையும் ஆசீர்வாதங்களையும் கூறி வருகின்றனர். இந்த சூழ்நிலையிலும் மனம் தவறாமல் தன்னுடைய அடுத்த கட்டத்தை நோக்கி சென்று கொண்டே இருக்க வேண்டும் என்று பலர் கருத்து கூறிவரும் நிலையில் திவ்யா மற்றும் அர்ணவ் இடையே பிரச்சனையில் போது அர்ணவின் தோழியாகவும் சக நடிகையாகவும் இருந்து அர்ணவுக்கு எதிராக பல உண்மைகளை கூறிய சின்னத்திரை நடிகர் ரிஹானாவும் திவ்யாவுக்கு வாழ்த்து கூறி இருக்கிறார்.
-
உயிரே போயிடும்னு நினைத்தேன்! அந்த அளவிற்கு வலி, வேதனை! பெங்களூரில் நடந்த சம்பவம்! நடிகை ஐஸ்வர்யா உருக்கம் -
பணிகள் கிட்டத்தட்ட ஓவர்.. இனி 4 வழி இல்லை.. சென்னையின் முக்கிய பகுதியில் மிகப்பெரிய 6 வழி சாலை -
தங்கத்தை மிஞ்சப்போகும்.. பலரின் வீட்டிலேயே இருக்கும் ஒரு குட்டி உலோகம்.. அடிக்குது ஜாக்பாட்! -
தென்னிந்திய தர்காக்கள் மற்றும் பள்ளி வாசல்கள் சங்கம் அதிமுகவிற்கு ஆதரவு! -
கடலூரில் நாளை விஜய் பிரச்சாரத்தால் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு.. நடந்தது என்ன? -
அமெரிக்காவை அலறவிட்ட பிரான்ஸ்! 129 டன் தங்கத்தை மீட்க "கோல்டன்" ஸ்கெட்ச்.. அப்போ இந்தியா பிளான் என்ன -
சிறகடிக்க ஆசை: விஜயாவின் மாற்றம்! முத்து, மீனாவை பெருமையாக பேசுறாங்களே! குடும்பத்தில் கொண்டாட்டம் -
ரஷ்யா மாஸ்டர் பிளான்: இந்தியாவுக்கு ஜாக்பாட்.. சீனா உதவி.. ஒன்று கூடிய BRICS நாடுகளால் டிரம்ப் ஷாக்! -
மொத்தமாக மாறிய டிரம்ப்.. ஈரான் விஷயத்தில் தொனியை மாற்றிய அமெரிக்க அதிபர்.. அடேங்கப்பா! -
2 வெர்ஷன்.. ஜனநாயகன் படம் இணையத்தில் லீக்கானது எப்படி? அதிகம் பலன் அடைவது யார்? அந்த மர்ம கை -
23000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த பின்பும்.. டிசிஎஸ் நிறுவனத்தில் கட்டுப்படுத்த முடியாத செலவு! -
லீக் ஆன ஜனநாயகன்.. நானே ரீலிஸ் பண்ணித்தரேன்னு சொன்னேனே விஜய்.. விட்டு விளாசிய சாட்டை!












Click it and Unblock the Notifications