கழுத்துல தாலி காணோமே.. கனி கொடுத்த விளக்கம் .. பரபரப்பான சமூக வலைதளங்கள்!
சென்னை : கழுத்தில் தாலி காணவில்லையே.. எதுக்கு என்று கேட்ட ரசிகருக்கு பதிலடி கொடுப்பதற்காக இன்ஸ்டாகிராமில் லைவில் கனி பேசிய வீடியோக்கள் தான் தற்போது வைரலாக பரவி வருகிறது.
என்னோட புருஷன் கட்டின தாலியை பத்திரமா உயிர் போல பாதுகாத்து வருகிறேன். ஆனால் அவர் கட்டாத தாலியை நான் எதற்காக போட வேண்டும் என்று கழற்றி வைத்து இருக்கிறேன் என ரசிகர்களை குழப்பியுள்ளார்.
அது தமிழ் கலாச்சாரத்தில் கிடையாது என்று புதுவித விளக்கத்தை கொடுத்து சர்ச்சையில் மாட்டி இருக்கிறார் குக் வித் கோமாளி கனி.

இந்த விளக்கத்தை எதிர்பார்க்கல
என்னம்மா இப்படி பண்றிங்களேமா என ரசிகர்கள் ஃபீல் பண்ணுகிற மாதிரி குக் வித் கோமாளி, காரக்குழம்பு கனி இப்போ இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட வீடியோஸ் தான் படுபயங்கரமாக வைரலாக வலம் வருகிறது. அவர் அதில் நிறைய விஷயங்களை பேசிக் கொண்டிருந்தார். அது எல்லாம் யாருக்கும் பெரியதாக தெரியவில்லை. ஆனால் கடைசியாக தாலியைப் பற்றிய ஒரு விளக்கத்தை கொடுத்து இப்போ நெட்டிசன்களிடம் மாட்டி இருக்கிறார். இப்படி பண்ணினா எப்படி என்று கேட்கிற மாதிரி இவருடைய வீடியோக்கள் தான் இன்ஸ்டாகிராமை கதற விட்டு வருகிறது.

செம ட்விஸ்ட் தான்
தமிழ் மக்கள் பெரிதும் மதிக்கும் தாலியை பற்றி இவர் வித்தியாசமான ஒரு விளக்கத்தை கொடுத்து இருக்கிறார். அதைக் கேட்டதும் பலர் அதிர்ச்சி அடைந்தாலும் ஒரு சிலர் இவருக்கு ஆதரவாகவும் குரல் கொடுத்து வருகிறார்கள். ஆனால் எந்தப் பக்கம் ஒசத்தி என்று இவர்களுக்குள் போட்டி படுபயங்கரமாக சமூக வலைதளத்தில் புயலை கிளப்பி இருக்கிறது. இவருடைய ரசிகர்களே தயவுசெய்து இந்த வீடியோவை டெலிட் பண்ணி விடுங்கள் என்று கெஞ்சி வருகின்றனர். அந்த அளவிற்கு இவரை வைத்து இப்போ நெட்டிசன்கள் கலாய்த்து ரோல்ஸ் வீடியோக்களும் றெக்கை கட்டி பறக்கிறது

நான் இப்படிதான்
இவர் இரு தினங்களுக்கு முன்பு புடவையில் ஒரு வீடியோவை இன்ஸ்டாகிராமில் போட்டிருந்தார். அதைப் பார்த்து பலரும் இவருக்கு கமெண்ட்ஸ் போட்டுக் கொண்டிருக்கும் போது ஒரு சில ரசிகர்கள் அழகான புடவை கட்டி இருக்கிறீர்கள். ஆனால் கழுத்தில் மட்டும் ஏன் தாலி போடவில்லை என்று கேட்டிருந்தனர். இன்ஸ்டாகிராமில் மட்டுமல்லாமல் அவருடைய யூடியூப் சேனலிலும் இதே சந்தேகத்தை கேட்டிருந்தார்கள். அதனால்தான் இப்போது அவர்களுக்கு விளக்கம் கொடுக்கும் வகையில் இன்ஸ்டாகிராமில் லைவில் பேசியிருந்தார். அதில் தாலி போடுவது தமிழ் கலாச்சாரத்தில் இல்லை அது இடையில் தான் வந்து சேர்ந்திருக்கிறது. நம்முடைய கலாச்சாரத்தில் எனக்கு தெரிந்து மாலை மாற்றி இவன் தான் எனக்கு இவள் எனக்கு என்று மனதார ஏற்றுக் கொண்டாலே போதும் என்று கூறியிருந்தார்.

பிடிக்கல அதனால போடல
அதுமட்டுமில்லாமல் எனக்கு மஞ்சள் கயிற்றில் தாலி போடுவது தான் ரொம்பவும் பிடிக்கும். அதை எனது கணவர் எனக்கு கட்டினார். ஆனால் அதற்கு பிறகு தாலி மாற்றுவதற்காக உறவினர்கள் எல்லாம் அதை மாற்றி விட்டு போட்டு விட்டனர். ஆனால் அது எனக்கு பிடிக்கவில்லை . என் கணவர் கட்டாத தாலியை எதுக்கு கழுத்தில் போட்டு கிட்டு என்று கழற்றி வைத்திருக்கிறேன். ஆனால் என் கணவர் கட்டிய தாலியை பத்திரமாக வைத்து என் உயிருக்கும் மேலாக பாதுகாத்து வருகிறேன் என்று காதல் பொங்க கூறியிருக்கிறார். அதுமட்டுமல்லாமல் எனக்கு போட்டோஸ் எடுக்கும் போது மட்டும் அந்த தாலியை போட்டுக்கிட்டு மத்த நேரத்தில் அதை கழற்றி வைத்துவிட்டு இருக்கிறது பிடிக்கவில்லை. அதனால் தான் நான் எப்போதுமே போடவில்லை என்று தன்னுடைய விளக்கத்தை கூறியிருக்கிறார்.

ஜாலியான பேச்சு
இந்த மாதிரி இவர் பேசியதை கேட்டதும் இவருடைய ரசிகர்களுக்ளே கொஞ்சம் ஷாக் ஆகிவிட்டது. தமிழ் கலாச்சாரத்தை பற்றி இந்த மாதிரி பேசி இருக்கிறார் என்றுதான் பலர் கொந்தளித்து வருகின்றனர். ஆனால் இவரோ அசால்டாக ஜாலியாக தன்னுடைய மனதில் இருப்பதை கூறியிருக்கிறார். இவர் மக்கள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சொல் விளையாட்டு நிகழ்ச்சியின் மூலமாக தொகுப்பாளராக அறிமுகமாகி இருக்கிறார். அதற்கு பிறகு விஜய் டிவியில் இவர் காலடி எடுத்து வைத்த பிறகு தான் ரொம்பவே பிரபலம் ஆகிவிட்டார். அதுவும் அனைவரும் பார்த்து ரசிக்கும் குக் வித் கோமாளி இரண்டாவது சீசன் நிகழ்ச்சியில் தன்னுடைய சமையல் திறமையினால் பலரையும் திரும்பிப் பார்க்க வைத்துவிட்டார்.

சும்மா அதிர விட்டுவிட்டார்
இவர் கலந்து கொள்ளும் ஒவ்வொரு எபிசோடிலும் ஜாலியாகவும் விறுவிறுப்பாகவும் தன்னுடைய சமையல் செய்யும் திறனையும் வெளிப் படுத்தி வந்தார். இவருக்கு ரசிகர்கள் கொடுத்த ஆதரவினை பார்த்துதான் இவர் தற்போது தனியாக ஒரு யூடியூப் சேனல் வைத்திருக்கிறார். அதில் தன்னுடைய சமையல்கலையினை பலருக்கும் பயன்படுகிற மாதிரி எளிய முறையில் செய்து காட்டிக் கொண்டிருக்கிறார். இவருடைய யூடியூப் சேனலுக்கும் அதிகமான பாலோவர்ஸ்களும் வியூஸ்களும் கிடைத்துக் கொண்டிருக்கிறது. அதிலும் இவர் பல வித சமையல்களை செய்திருந்தாலும் இவர் ஸ்பெஷலாக செய்த காரக்குழம்பு ரொம்பவே பிரபலம் ஆகிவிட்டது. அதனால் தான் ரசிகர்கள் இவரை காரக்குழம்பு கனி என்று பட்டம் கொடுத்து அழைத்து வருகின்றனர்.

ரசிகர்களின் அமோக ஆதரவு
ரசிகர்களின் ஆதரவோடு தன்னுடைய திறமையினால் குக் கோமாளி இரண்டாவது சீசனில் டைட்டில் வின்னர் ஆகவும் ஆகிவிட்டார். இவர் தமிழ் திரையுலகில் எவர்கிரீன் படங்களில் ஒன்றான அல்டிமேட் ஸ்டார் அஜித்குமார் நடித்த மிகப்பெரிய வெற்றிப்படமான காதல் கோட்டை படத்தை இயக்கிய அகத்தியனின் மகள். மற்றும் இவருடைய சகோதரி விஜயலட்சுமியும் ஒரு நடிகை தான். இப்படி குடும்பமே சினிமாவில் பிரபலமாக இருந்தாலும் இவர் தன்னுடைய திறமையினால் வின்னர் பட்டத்தை பெற்றிருக்கிறார். இந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு பிறகு இவருக்கு அதிகமான ரசிகர்கள் உருவாக்கிவிட்டார்.

உங்களுக்கு தேவையில்லாதது
ஒரு பிரபலமான நடிகை பலருக்கும் பரிச்சயமான நபரே இப்படி பேசி இருப்பதை கேட்டதும் சிலரால் பொறுத்துக் கொள்ள முடியாமல் இந்த மாதிரி எல்லாம் பேசாதீங்க உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் நீங்கள் போடாம இருங்க அத விட்டுட்டு இப்படி இது கலாச்சாரமே இல்லை என்று கூறுவது முறையல்ல என்று முழக்கமிட்டு வருகின்றனர். ஆனால் கனியை ஆதரிக்கும் ரசிகர்களும் நாங்கள் அவர்களுக்கு சளைத்தவர்களல்ல என்பது போல இந்த வீடியோவை ஒன்றும் தவறாக இல்லை என்று இவருக்கு ஆதரவாக ஒருபுறம் இந்த வீடியோவை அதிகமாக ஷேர் செய்து வருகின்றனர். இவர்கள் மாற்றி மாற்றி வீடியோவை ஷேர் செய்து இன்ஸ்டாகிராம் மட்டுமல்லாமல் சமூக வலைத்தளத்தில் எல்லாம் இந்த வீடியோவை பற்றிதான் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். நீங்கள் உங்களுடைய கருத்துகளை கமெண்ட் பாக்ஸில் தெரிவிங்க மக்களே.
-
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
90, 60, 55, 25: தமிழகத்தின் அடுத்த முதல்வர் இவர்தான்? 2 துணை முதல்வர்கள் யார்? பலே பாஜக.. அப்ப விஜய் -
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க -
பாஜக - தவெக கூட்டணி உருவாகிறதா? திமுகவை வீழ்த்த பம்பர் ஆஃபர் 60 சீட், மெகா பொறுப்பு? டெல்லி பலே மூவ் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
"இந்த" 2 பேருக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்.. டி20 உலக கோப்பை வெற்றிக்கு பின் கம்பீர் சொன்ன வார்த்தை -
கருணாஸ் பாஜகவுக்கு விட்ட சவால்.. "இந்து மதமே கிடையாது" அதிர்ச்சியில் உறைந்த இந்து முன்னணி! -
நாலாபக்கமும் நெருக்கடி.. பாஜக கூட்டணிக்கு வருகிறாரா விஜய்? நயினார் நாகேந்திரனே கொடுத்த பதில் -
பாஜக கூட்டணி வர்றீங்களா? இல்ல கடையை சாத்துறீங்களா? விஜய்க்கு டெல்லி டெட்லைன்.. சிபிஐ பிடியில் தவெக!












Click it and Unblock the Notifications