Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நீண்ட தலை முடிக்கான அழகி பட்டம் பெற்ற கன்னிகா.. கூந்தலுக்கான ரகசியம் இதுதானாம்..!!

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகை கன்னிகா நடிக்க வருவதற்கு முன்பே தன்னுடைய நீண்ட தலைமுடியை பராமரிப்பதற்காக அழகி பட்டம் பெற்றுள்ளாராம்.

தன்னுடைய தலைமுடி இவ்வளவு நீளமாக இருப்பதற்கு காரணம் பற்றி வெளிப்படையாக கூறியிருக்கிறார்.

இவர் தினமும் தலைமுடிக்காக செய்வதை பின் தொடர்ந்தாலே பலர் தலைமுடி பிரச்சனைக்காக மருத்துவமனைகளுக்கு செல்ல வேண்டியதே இருக்காது போல.

கல்யாணப்பரிசு சூர்யா

கல்யாணப்பரிசு சூர்யா

சன் டிவியில் ஒளிபரப்பான கல்யாணப்பரிசு சீரியலில் மூலமாக சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் சூர்யா கேரக்டரில் அறிமுகமான கன்னிகா, பார்ப்பதற்கு பக்கத்து வீட்டு பெண் போல இருப்பதாக பலரும் கூறி வருகின்றனர். நடிகைகள் என்றாலே எப்போதும் மேக்கப் போட்டுக் கொண்டு மார்டன் உடையில் வலம் வருவார்கள் என்று நினைத்திருந்தவர்களுக்கு கன்னிகாவை பார்த்ததும் கொஞ்சம் அதிர்ச்சியாக தான் இருக்கும். இவர் அதிகமாக மேக்கப் எதுவும் போட்டுக் கொள்வதே கிடையாதாம். சீரியலாக இருந்தாலும் சரி, சினிமாவாக இருந்தாலும் சரி தன்னுடைய இயற்கையான அழகை காட்டுவதில் தான் இவர் விருப்பமாக இருப்பாராம்.

பலதுறையில் சிறப்பு

பலதுறையில் சிறப்பு

கன்னிகா வளர்ந்தது எல்லாமே அருப்புக்கோட்டை தானாம். கல்லூரி படிப்பை முடித்த கன்னிகா நடிப்பு மட்டுமல்லாமல் சமையல் செய்வதிலும், புத்தகங்கள் எழுதுவதிலும், கவிதைகள் படைப்பதிலும், சிலம்பம் சுற்றுவதிலும், ஓவியம் வரைவதிலும் என பல துறைகளில் சிறந்தவராக இருந்து வருகிறார். இவருடைய திறமையை பார்த்து இவரை ஃபாலோ பண்ணும் ரசிகர்கள் அதிகமாக இருக்கத்தான் செய்கின்றனர். இவர் சென்னைக்கு நடிக்க வந்த நேரத்தில் பெரிய அளவில் யாரையும் தெரியாமல் தான் இருந்தாராம்.அந்த நேரத்தில் இவருக்கு கவிஞர் சினேகனின் நட்பு கிடைத்திருக்கிறது. ஆரம்பத்தில் நட்பாக பழகியவர்கள் பின்பு காதலித்து தற்போது திருமணம் செய்து கொண்டுள்ளார்கள்.

தலை முடிக்கான அழகி

தலை முடிக்கான அழகி

திருமணத்திற்கு பிறகும் கன்னிகா திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். கன்னிகா நடிக்க வருவதற்கு முன்பே நீண்ட தலைமுடியை பேணி பாதுகாப்பதற்காக அழகி பட்டம் பெற்றிருக்கிறாராம். இப்போது வரை தன்னுடைய நீண்ட தலைமுடியை அழகாக பராமரித்து வருகிறார். இதைப்பற்றி இவரிடம் சமூக வலைத்தளத்தில் ரசிகர்கள் கேள்விகளை கேட்டு வருகிறார்கள். தற்போதைய சூழ்நிலையில் கல்லூரி படிக்கும் நாட்களிலே பலருக்கும் தலைமுடி எல்லாம் உதிர தொடங்கி சொட்டை தலை தெரிய தொடங்கி விடுகிறது. ஆண்களுக்கு மட்டுமல்லாமல் பெண்களுக்கும் இந்த நிலை தான் இப்போது நிகழ்ந்து வருகிறது. இப்போதெல்லாம் நீண்ட தலை முடியை பார்ப்பதே பெரிய ஆச்சரியமாக இருக்கிறது.

இதுதான் ரகசியம்

இதுதான் ரகசியம்

தன்னுடைய தலை முடி ரகசியத்திற்கு கன்னிகா, தலைமுடிக்கு எந்த ஒரு ஷாம்பு, கண்டிஷனர் என்ற செயற்கைப் பொருட்களையும் உபயோகப்படுத்த மாட்டாராம். சீயக்காய் மட்டும்தான் உபயோகப்படுத்துவாராம். அதுமட்டுமல்லாமல் தலை மயிர்க்கால்களுக்கு தினமும் எண்ணெய் தேய்த்து இரண்டு நிமிடம் மசாஜ் செய்தால் போதும் என்று கூறியிருக்கிறார். மேலும் வாரத்தில் ஒரு ஒருமுறை மட்டுமே தலைக்கு குளித்தால் போதும், குளிக்கும்போது தலைமுடியை நன்றாக காய வைத்து விட வேண்டும். அதற்கு ஹேர் டிரையர் பயன்படுத்தக் கூடாது என்று கூறி இருக்கிறார். அதிகமாக தண்ணீர் குடிக்க வேண்டும். சத்தான காய்கறிகளையும் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கூறி இருக்கிறார். தலைமுடிக்கு தேங்காய் எண்ணெய் அல்லது விளக்கு எண்ணெய் பயன்படுத்தி கொள்ளலாம் என்றும் அறிவுரை கூறியிருக்கிறார். இவர் இதை பயன்படுத்திக் கொள்வதால் தான் நீண்ட தலை முடியை அழகாக பராமரித்து வருகிறாராம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+