மன்னிச்சிருங்க டார்ச்சர் பண்ணுறேன்.. உருக்கமாக போஸ்ட் வெளியிட்ட கன்னிகா
சென்னை: நடிகை கன்னிகா தற்போது தன்னுடைய ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட வீடியோ சமூக வலைத்தளத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது.
சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் கன்னிகா தற்போது தன்னுடைய கணவனுடன் வெளியிட்ட வீடியோவிற்கு ரசிகர்களின் ஹார்ட்கள் பறந்து கொண்டிருக்கிறது.
சின்னத்திரையில் இருந்து வெள்ளி திரையில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கும் கன்னிகா தான் ஃப்ரீயாக இருக்கும் நேரத்தில் எடுத்த வீடியோவை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டதும் அவருடைய ரசிகர்கள் இந்த மாதிரி அடிக்கடி போஸ்ட் போட சொல்லி அப்ளிகேஷன் கொடுத்து கொண்டிருக்கிறார்களாம்.

காதல் மனைவி கன்னிகா
சினேகனின் காதல் மனைவி கன்னிகாவும் திரைத்துறையை சார்ந்தவர் தான். இவர் சீரியல் மட்டுமல்லாமல் வெள்ளித்திரையிலும் ஒரு சில படங்களில் நடித்து இருக்கிறார். ஆனால் இவர் எதிர்பார்த்த அளவில் வெள்ளித்திரையில் இவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும் சின்னத்திரையில் கல்யாண வீடு சீரியல் மூலமாக சூர்யா கேரக்டரில் தன்னுடைய நடிப்பை அழகாக வெளிக்காட்டியிருந்தார். இவருடைய குடும்பபாங்கான முகத்தை ரசிகர்கள் பலர் ரசித்து வருகின்றனர். கன்னிகா வுக்கு அதிகமான ரசிகர்கள் இருந்து வருகின்றனர். கன்னிகா சமூக வலைத்தளத்திலும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.

சினேகனின் வருத்தம்
கவிஞர் சினேகன் எனும் பெயரைக் கேட்டதும் பலருக்கும் பரிச்சயமானவர் தான். இவருடைய பாடல்கள் பல்லாயிரக்கணக்கான இருந்தாலும் இவர்தான் இந்த பாடலை பாடினார் என்று பலருக்கும் தெரியாமல் தான் இருந்துள்ளது. இவருடைய பாடல்கள் பல ஹிட்டாகி உள்ளது. ஆனால் அதன் சிறப்பு இவரை வந்து சேரவில்லை என்பது சினேகனின் காதல் மனைவியின் வருத்தமாக உள்ளது. அதனால் தற்போது சினேகனின் சிறப்பை வெளிக்காட்டுவதும், தன் கணவன் மீது தான் வைத்திருக்கும் அன்பை அனைவருக்கும் புரிய வைத்திருக்கவும் கன்னிகா எடுத்திருக்கும் முயற்சி பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது.

மன்னிப்பு கேட்ட கன்னிகா
கன்னிகா மற்றும் சினேகன் இருவரும் அதிக அளவில் பாசத்தோடு இருந்து வருவது பலருக்கும் தெரிந்ததுதான். தற்போது கூட கன்னிகா தன் கணவரோடு ரீல்ஸ் வீடியோ வெளியிட்டு இருக்கிறார். அதில் "நெஞ்சே..என் நெஞ்சே. சென்றாயோ அவனோடு..."என்னும் பாடலுக்கு அழகாக ஸ்டெப் போட்டு டான்ஸ் ஆடி இருக்கிறார் அவருடைய லாவண்டர் நிற உடைக்கும் தகுந்தபடி சினேகன் கருப்பு நிற கோட் சூட்டில் கலக்கி இருக்கிறார். இவர்கள் இருவரும் காதலோடு எடுத்த வீடியோவை தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட கன்னிகா இதைப் பார்த்து எப்படியும் ரசிகர்கள் பலர் பொறாமைப்படுவார்கள் என்று தெரிந்து கொண்டார்கள் போல. அதனால் தான் தற்போது ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டபடி கேப்ஷன் கொடுத்திருக்கிறார்.

இதுதான் காரணமாம்
தன்னுடைய ரீல்ஸ் வீடியோவிற்கு, "மன்னிச்சுடுங்க...டார்ச்சர் பண்றேன் உங்கள எல்லாம்" என்று கன்னிகா கேப்ஷன் கொடுத்திருக்கிறார். இதை பார்த்த ரசிகர்கள் பலர் இந்த வீடியோ பார்ப்பதற்கு அவ்வளவு அழகாக இருக்கிறது பார்க்கும்போது, எதற்காக நாங்கள் மன்னிக்க வேண்டும் இப்படி எல்லாம் சொல்லாதீர்கள் என்று கூறி இருக்கிறார்கள் .மனதிற்குள் எங்களை அறியாமல் ஒரு சந்தோஷம் எட்டிப் பார்க்கிறது. நமக்கு பிடித்தவர்கள் சந்தோஷமாக இருந்தால் நமக்கும் அது பிடிக்கும் தானே, அது மாதிரி தான் இருக்கிறது என்று பலர் தங்களுடைய அன்பை கமெண்டுகளில் கொட்டி வருகின்றனர். அது மட்டும் அல்லாமல் இவர் போஸ்ட் வெளியிட்ட ஒரு சில மணி நேரத்தில் இந்த வீடியோவிற்கு லைக்களும் கமெண்டுகளும் போட்டி போட்டு எகிறி வருகிறது.












Click it and Unblock the Notifications