நாம் இருவர் நமக்கு இருவர் தேவியின் உருக்கமான கண்ணீர் பதிவு.. பல வருடம் கழித்து இப்படி ஒரு பதிவா?
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பான நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் கதாநாயகி தேவி கேரக்டரில் நடித்த ரக்ஷா ஹோல்லா பல வருடங்களுக்குப் பிறகு மீண்டும் சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட பதிவிற்கு ரசிகர்கள் ஆறுதல் கூறி வருகின்றனர்.
இன்று சீரியல் இயக்குனர் தாய் செல்வம் திடீரென மரணமடைந்திருக்கும் நேரத்தில் அவருடைய மறைவு பற்றியும் அவரை பற்றியும் பல தகவல்களை கூறியிருக்கிறார்.

நாம் இருவர் நமக்கு இருவர் தேவி
விஜய் டிவியில் ஒளிபரப்பான நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலின் முதல் பகுதி பலதரப்பட்ட ரசிகர்களின் மனதையும் கவர்ந்து இழுத்து இருந்தது. இளைஞர்கள் முதல் வீட்டில் இருக்கும் பெண்கள் வரைக்கும் இந்த சீரியல் நன்றாகவே பிடித்திருந்தற்கு காரணம் அந்த சீரியலில் பல கேரக்டர்கள் ரசிகர்களுக்கு பிடித்ததாக இருந்தாலும் அதில் மாயன் தேவி ஜோடியும், மாறன் தாமரை ஜோடியும் ரசிகர்களின் மனதில் பசைபோல ஒட்டிக் கொண்டது.

உருக்கமான வார்த்தைகள்
இந்த நிலையில் விஜய் டிவியில் முதல் முறையாக தனக்கு வாய்ப்பு கொடுத்து ரசிகர்களின் மத்தியில் தனக்கு பெரும் ஆதரவு ஏற்படுத்திய நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் இயக்குனர் திடீரென மரணம் அடைந்து விட்டதால் அவரைப் பற்றி உருக்கமாக பதிவிட்டிருக்கிறார். அதில், "எங்கிருந்து தொடங்குவது என்று எனக்கே தெரியவில்லை. தாய் சார் நீங்கள் எனது மிகப்பெரிய பலம் மற்றும் எனது மிகப்பெரிய விமர்சகர். நான் நடித்து கேரக்டருக்காக நீங்கள் என்னை நேசித்தீர்கள். நீங்கள் இனி இல்லை என்று நினைப்பது கூட ஒரு அதிர்ச்சி மற்றும் மிகவும் பேரழிவை ஏற்படுத்துகின்றது. எனக்கு பிடித்த இயக்குனராக இருங்கள் உங்கள் பணி என்றென்றும் எங்கள் இதயங்களில் நிலைத்திருக்கும்.

மிகப்பெரிய வலி
அது மட்டுமல்லாமல் உங்களைப் போன்ற ஒரு அற்புதமான நபரை நான் சந்தித்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். என்னை ஒரு சிறந்த கலைஞனாக உருவாக்கி உங்கள் சொந்த குடும்பத்தைப் போல என்னை நடத்தியது. என்னால் முடியவில்லை நீங்கள் எங்களை சுற்றிஇல்லை என்ற உண்மையை ஜீரணிக்க முடியவில்லை. எந்த வேலையிலும் உங்கள் மீதுள்ள என் அன்பு என்றும் மறையாது. அனைவரையும் நேசிக்கும் தாய் செல்வம் சாருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள். லவ் யூ, தாய் சார் நிம்மதியாக ஓய்வெடுங்கள்... எல்லாவற்றுக்கும் நன்றி சார். நான் இதை எனது சமூக வலைத்தள பக்கங்களில் இப்படி பதிவிடுவேன் என்று நினைக்கவே இல்லை, உண்மையில் இது பெரிய வலி தான்" என்று உணர்வுபூர்வமாக பதிவிட்டு இருக்கிறார்.

பிரபலமான இயக்குனர்
இயக்குனர் தாய் செல்வம், காத்து கருப்பு, தாயுமானவன், கல்யாணம் முதல் காதல் வரை, மௌன ராகம் சீசன் 1,நாம் இருவர் நமக்கு இருவர், பாவம் கணேசன், ஈரமான ரோஜாவே சீசன் 2 என பல சீரியல்கள் இயக்கியிருக்கிறார். அது மட்டும் அல்லாமல் எஸ் ஜே சூர்யா நடித்த நியூட்டனின் மூன்றாம் விதி என்ற திரைப்படத்தையும் இவர்தான் இயக்கியிருக்கிறார். இந்த நிலையில் இவருடைய திடீர் மரணம் சின்னத்திரை மட்டுமல்லாமல் வெள்ளி திரை பிரபலங்களையும் அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது. அனைவரும் சமூக வலைத்தளத்தில் உருக்கமாக பலர் அவரைப் பற்றிய பல நினைவுகளை பகிர்ந்து வருகின்றனர். இந்த நிலையில் பல வருடங்களுக்குப் பிறகு ரக்ஷா இயக்குனர் தாய் செல்வத்தோடு எடுத்த புகைப்படத்தையும் வருத்தத்தையும் உணர்வு பூர்வமாக பதிவிட்டு இருக்கிறார்.

ரசிகர்களின் தவிர்ப்பு
ரக்ஷாவின் பதிவை பார்த்த ரசிகர்கள் பலர் அவருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர். இன்னும் ஒரு சில ரசிகர்கள் உங்களைப் பார்த்து எவ்வளவு நாளாச்சி, எப்படி இருக்கீங்க? இப்ப ஏதாவது தமிழ் சீரியலில் நடிக்கிறீர்களா?கன்னட சீரியல் மட்டும் தான் நடித்துக் கொண்டிருக்கிறீர்களா? உங்களுடைய நடிப்பு அருமையாக இருக்கிறது. தயவு செய்து கைவிடாதீர்கள் என்று வேண்டுகோள் விடுத்துக் கொண்டிருக்கின்றனர். இன்னும் ஒரு சில ரசிகர்கள் பல நாட்களுக்குப் பிறகு நீங்கள் பதிவு வெளியிட்டதை நினைத்து சந்தோஷப்படுவதா? அல்லது இப்படி ஒரு வருத்தமான பதிவு வெளியிட்டிருப்பதை குறித்து வேதனைப்படுவதா? என தெரியவில்லையே என்று கருத்து தெரிவித்திருக்கிறார்கள்.












Click it and Unblock the Notifications