
ரட்சிதா விலகிய சேனலில் கெத்தாக களமிறங்கும் தினேஷ்.. காரணம் அது தானா..!!??
சென்னை: சின்னத்திரை தம்பதிகள் ஆன ரட்சிதா மற்றும் தினேஷ் இருவரும் தற்போது விவாகரத்து செய்யப் போகிறார்கள் என்ற செய்திகள் பரவி வருகிறது.
இந்த நிலையில் ரட்சிதா விலகிய அதே சேனலில் தினேஷ் மீண்டும் சீரியலில் நடிக்கிறார்.
இதைப் பார்த்த ரசிகர்கள் இருவருக்குள் இருக்கும் கருத்து வேறுபாடு காரணமாகத்தான் இவர்கள் இருவரும் இப்படி செய்கிறார்களா?? என்று கேள்விகளை எழுப்பி வருகிறார்கள்.
சின்னத்திரை நடிகை சித்ரா வழக்கில் திடுக்.. ஹேம்நாத் அட்டகாசங்கள் பற்றி சாட்சியளித்தவருக்கு மிரட்டல்?

முதல் சீரியலில் காதல்
விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரிவோம் சந்திப்போம் சீரியலின் மூலமாக சின்னத்திரையில் அறிமுகமான ரட்சிதா, அதே சீரியலில் அவருடன் இணைந்து நடித்த தினேஷ் கார்த்திக்கை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த சீரியலில் கருப்பு தேவதையாக ரட்சிதா நடித்திருப்பார். ஆனால் தினேஷ் இவரை காதலிக்காமல் சீரியலின் கதாநாயகி கல்யாணியை காதலிப்பார். ஆனால் தினேஷை ஒருதலையாக ரட்சிதா காதலித்திருப்பார். இவர்களின் காதல் முதல் சீரியலில் கல்யாணத்தில் முடிந்திருந்தது.

பல சீசன்களில் மீனாட்சி
திருமணத்திற்குப் பிறகு ரட்சிதா மற்றும் தினேஷ் இருவரும் சீரியல்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருந்தனர். அந்த நேரத்தில் ரட்சிதாவுக்கு ஒரு சில திரைப்படங்களிலும் நடிக்க வாய்ப்பு கிடைத்திருந்தது. தற்போது வரைக்கும் இவர்களுக்கு குழந்தை எதுவும் இல்லை என்றாலும் தங்களுடைய துறையில் தங்களுடைய திறமையை நிரூபித்து வருகின்றனர். விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி சீரியலில் பல சீசன்களில் மீனாட்சி ஆக ரட்சிதா நடித்து வந்தார்.

கருத்து வேறுபாடு காரணமா
அதுபோல தினேஷ் கார்த்திக், ஜீ தமிழில் ஒளிபரப்பான பூவே பூச்சூடவா சீரியலில் கதாநாயகனாக நடித்துக் கொண்டிருந்தார். இந்த நேரத்தில் ஜீ தமிழில் நாச்சியார் புறம் என்னும் சீரியலில் தினேஷ் மற்றும் ரட்சிதா இருவரும் ஜோடியாக நடித்து வந்தனர். கொரோனா காலகட்டத்தில் இந்த சீரியல் திடீரென்று முடித்து வைக்கப்பட்டது. இதற்கு பிறகு இவர்கள் மீண்டும் சீரியலில் ஒன்றாக நடிக்க வேண்டும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர். இந்த நேரத்தில் தான் இவர்கள் இருவரும் மன கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டதாக செய்திகள் சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது. இதைக் குறித்து இவர்கள் இருவரும் எந்த ஒரு தகவலையும் வெளியிடவில்லை.

மீண்டும் களம் இறங்கிய தினேஷ்
விஜய் டிவியில் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் ரட்சிதா நடித்து வந்தார். ஆனால், திடீரென்று இந்த சீரியலை விட்டு விலகி கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகி வந்த இது சொல்ல மறந்த கதை எனும் சீரியலில் நடித்து வந்தார். தற்போது இந்த சீரியலும் ஒரு சில மாதங்களில் முடிக்கப்பட்டு விட்டது. இதை குறித்து காட்டமான தன்னுடைய வருத்தத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரட்சிதா தெரிவித்து இருந்தார். ஆனால் தினேஷ் சமீப காலத்தில் எந்த சீரியல் களிலும் நடிக்காமல் தான் இருந்து வந்தார். இந்த நிலையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஈரமான ரோஜாவே 2 சீரியலில் தற்போது அறிமுகம் ஆகி இருக்கிறார். இதை பார்த்த ரசிகர்கள் விஜய் டிவியை விட்டு ரட்சிதா சென்று விட்ட நிலையில் மீண்டும் விஜய் டிவிக்கு தினேஷ் வந்து இருப்பதால் இவர்கள் இருவருக்கும் கருத்து வேறுபாடு என்பது உண்மைதானோ!!?? என்று குழப்பமான கேள்விகளை எழுப்பி இருக்கிறார்கள்.