எவராலும் நிலைத்திருக்க முடியாது.. நல்லா இருங்க ..கோபமாக பதிவிட்ட ரட்சிதா..வருத்தத்தில் ரசிகர்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி சீரியல் மூலமாக பலருக்கும் பிரபலமான ரட்சிதா தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட பதிவு தான் பலரையும் அதிர்ச்சிக்குள் ஆழ்த்தி இருக்கிறதாம்.

ரட்சிதா தற்போது நடித்து வந்த சொல்ல மறந்த கதை சீரியல் திடீரென்று முடிக்கப்பட்டதால் அவருடைய ரசிகர்கள் வருத்தத்தில் இருக்கும் நிலையில் அவர் வெளியிட்ட பதிவு பலருக்கும் குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

சமூக வலைத்தளத்தில் தான் நடித்து வந்த சேனலைக் குறித்து ரட்சிதா வெளியிட்ட பதிவு பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறதாம்.

மனதை பறித்தவர்

மனதை பறித்தவர்

விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி சீரியலின் மூலமாக பட்டித் தொட்டி எல்லாம் பிரபலம் அடைந்து தற்போது வரைக்கும் மீனாட்சி ஆக பலருடைய மனதிலும் வலம் வந்து கொண்டிருக்கும் ரட்சிதா தற்போது ஜீ தமிழ் சீரியலில் நடித்துக் கொண்டிருக்கிறார். பல சீசன்களாக மீனாட்சி ஆக வலம் வந்தரட்சிதா தற்போது சாதனாவாக ரசிகர்களின் மனதில் பதிந்துள்ளார். ரட்சிதா மகாலட்சுமி முதல் முறையாக பிரிவோம் சந்திப்போம் சீரியலில் அறிமுகமாகி இருந்தார். இந்த சீரியலில் கதாநாயகனாக நடித்த தினேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட இவர் தற்போது பிசியாக சீரியல்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

 வருத்தமான வாழ்த்துக்கள்

வருத்தமான வாழ்த்துக்கள்

நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலுக்கு பிறகு நடித்து வந்த சொல்ல மறந்த கதை பிற மொழி சீரியலின் தழுவலாக இருந்தாலும் தமிழில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கும் என்று ஆரம்பத்தில் எதிர்பார்ப்போடு இந்த சீரியலில் ரட்சிதா நடித்து இருந்தார். இந்த சீரியல் தொடங்கும் காலகட்டத்தில் இவர் இந்த சீரியலை குறித்தும் சேனல் குறித்தும் பெருமையாக பேசி இருந்தார் ஆனால் தற்போது அதையெல்லாம் பொய்யாக்கும் விதமாக சேனல் இவரிடம் நடந்து கொண்டதாக வருத்தத்துடன் தன்னுடைய இன்ஸ்டாகிராம் ஸ்டோரில் பதிவுகளை வெளியிட்டுள்ளார் அதில் இது சொல்ல மறந்த கதை தொடரில் சாதனா கதாபாத்திரம் இப்படியாக முடிவடையும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. வாழ்த்துக்கள் கலர்ஸ் தமிழ், நல்ல கருத்துள்ள சீரியலை முடித்ததற்காக வாழ்த்துக்கள்.. என்று மனதின் வலிகளை வெளியே வாழ்த்துக்களோடு கூறி இருக்கிறார்.

இன்ஸ்டாகிராமில் ஸ்டோரி

இன்ஸ்டாகிராமில் ஸ்டோரி

அதுமட்டுமல்லாமல் நாங்கள் உங்களுடைய ஃபேக் ப்ரோமோஷனில் இருந்தாவது இனிமேல் ஃப்ரீயாக இருக்கலாம். உங்களிடமிருந்து இதை நான் எதிர்பார்க்கவில்லை. இந்த ப்ராஜெக்ட் செலக்ட் பண்ணாதீங்கன்னு சொல்லி என்னை பார்த்து சிரித்த எல்லோரையும் திட்டி இதில் கமிட்டானேன். இன்றைக்கு கலர்ஸ் தமிழ் மக்கள் நான் தான் தப்பான முடிவு எடுத்து இருக்கேன்னு நிரூபிச்சிட்டீங்க. இதற்காக வெட்கப்படுகிறேன். சீரியலை ஜஸ்ட் லைக் தட் ஆக முடித்ததற்கு வெட்கப்படுகிறேன். தயவு செய்து உங்களுடைய குறைகளை நடிகர்கள் மீது போடாதீர்கள். நீங்க பண்ண வரைக்குமே போதும். நல்லா இருங்க, இப்ப முடிச்சிருக்கவே அவசியமில்லாத தொடரை நீங்க வெற்றிகரமாக முடிச்சு வச்சுட்டீங்க. அதனால, உங்களுக்கு பாராட்டுக்கள்...!! என்று தன்னுடைய வேதனையையும் வெறுப்பையும் ஸ்டோரியில் தெரியப்படுத்தி இருக்கிறார்.

ரசிகர்களின் ஆறுதல்கள்

ரசிகர்களின் ஆறுதல்கள்

எல்லாத்தையும் தாண்டி சாதனாவை நான் ரொம்ப ரொம்ப மிஸ் பண்றேன். இந்த கார்ப்பரேட் உலகத்தில் யாராலும் நிலைத்திருக்க முடியாது. குட் பை சாதனா என்று தன்னுடைய வருத்தத்தை ஏமாற்றத்தோடு கண்ணீர் கலந்த இமேஜ்களை வைத்து பதிவிட்டுள்ளார். அது மட்டும் இல்லாமல் சூழ்நிலையை ஏற்றுக்கொண்டு முன்னேறுங்கள். எந்த சூழ்நிலையும் இப்படியே அமைந்து விடாது, நகர்வது தான் விருப்பம் நகர்ந்து கொண்டே இருப்போம் என்று அவருக்கு அவரே ஆறுதலை கூறிக் கொண்டு இருக்கிறார். இதை பார்த்த ரசிகர்கள் பலர் ரட்சிதாவுக்கு தொடர்ந்து ஆறுதல்களை கூறி வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+