திருமணமான சில மாதங்களில் ரித்திகாவின் மகிழ்ச்சி கொண்டாட்டம்..கிடைத்த பரிசு பெருசு..குவியும் வாழ்த்து
சென்னை: விஜய் டிவி பாக்கியலட்சுமி சீரியலில் நடித்து வரும் ரித்திகா தற்போது தன்னுடைய கணவரோடு ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டத்தை கொண்டாடி இருக்கிறார்.
கடந்த வருடம் தனக்கு கிடைத்த மகிழ்ச்சிகளை எல்லாம் மொத்தமாக ரசிகர்களோடு பகிர்ந்து இருக்கிறார்.
எத்தனை சோகங்கள் வந்தாலும் தனக்கு கிடைத்த மகிழ்ச்சியை மட்டும் ரசிகர்களிடம் பகிர்ந்ததை தொடர்ந்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

திடீர் திருமணம்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் அமிர்தாவாக நடிக்கும் ரித்திகா சமீபத்தில் தான் திருமணம் முடிந்திருந்தார். திருமணத்திற்கு பிறகு தன்னுடைய முதல் மாத திருமண கொண்டாட்டத்தையும் கொண்டாடி இதற்குள் ஒரு மாதம் முடிந்துவிட்டது இப்போதுதான் திருமணம் ஆன மாதிரி இருந்து, ஆனால் நாட்கள் வேகமாக ஓடிக்கொண்டிருக்கிறது. என்னாலையே நம்ப முடியவில்லை என்று நெகிழ்ச்சியும் மகிழ்ச்சியும் ஆக தன்னுடைய முதல் மாத திருமண நாளை கொண்டாடி இருந்தார். ரித்திகா விஜய் டிவியில் பிரபலமான நபராக இருக்கும் நிலையில் அதே டிவியில் வேலை செய்யும் வினு என்பவரை காதலித்து திருமணம் செய்திருக்கிறார்.

ரசிகர்களின் சந்தேகம்
ஒரே துறையில் அதுவும் ஒரே சேனலில் வேலை பார்க்கும் இவர்கள் காதல் இது திருமணம் செய்து கொண்டதால் ரித்திகா மீண்டும் சீரியலுக்கு நடிக்க வருவாரா? இல்லையா? என்று ரசிகர்கள் ஆர்வத்தோடு எதிர்பார்த்து இருந்தனர். காரணம் இவரை பாக்கியலட்சுமி சீரியலில் திருமணத்திற்கு முதல் வாரத்தில் காணாமல் போன நிலையில் அதற்குப் பிறகு ஒரு மாதம் ஆகவே வராமல் இருந்தார். இதனாலே இவர் தொடர்ந்து நடிக்க வாய்ப்பு இருக்கிறதா? இல்லையா? என்று பலரும் கேள்வி எழுப்ப கொண்டிருந்தனர். திருமணத்துக்கு பிறகு தன்னுடைய பிறந்தநாளை ஹனிமூன் கொண்டாட்டத்தோடு சேர்த்து கொண்டாடிய ரித்திகா கணவர் கொடுத்த பரிசுகளை ரசிகர்களோடு பகிர்ந்து மகிழ்ச்சியோடு மாலத்தீவில் வலம் வந்து கொண்டிருந்தார்.

அதிகரிக்கும் கேள்விகள்
இந்த நிலையில் ஹனிமூன் முடிந்து ஊருக்கு வந்ததும் மீண்டும் பாக்கியலட்சுமி சீரியலில் இவர் நடிக்க தொடங்கி இருக்கிறார். இந்த செய்தி அவருடைய ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்தது. அமிர்தா இந்த சீரியலில் மீண்டும் வந்த நேரத்தில் சீரியல் கதையும் சூடு பிடிக்க தொடங்கியது. தற்போது எழிலுக்கு அடுத்தடுத்த பல பிரச்சனைகள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கும் நிலையில், இனி எழில் மற்றும் அமிர்தா திருமணம் நடக்குமா? எழிலுடைய பாட்டி இதற்கு சம்மதிப்பாரா? குடும்பத்தினர் ஏற்றுக்கொண்டு இவர்களோடு திருமணம் நடக்குமா? அல்லது குடும்பத்தை எதிர்த்து எழில் இவரை திருமணம் செய்வாரா? என்று பல்வேறு கேள்விகள் ரசிகர்கள் மத்தியில் எழுந்து வருகிறது.

ஸ்பெஷலான கொண்டாட்டம்
இந்த நிலையில் சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் ரித்திகா ஆங்கில புத்தாண்டில் தனது கணவரோடு கோவிலுக்கு சென்று அங்கே எடுத்த போட்டோக்களை சமூக வலைதளத்தில் பதிவிட ரசிகர்கள் பலர் இவருக்கு வாழ்த்துக்கள் கூறி வருகின்றனர். அதில் 2022 ஆம் ஆண்டு தனக்கு கிடைத்த iphone தொடங்கி பல மகிழ்ச்சியான புகைப்படங்களை அதுவும் குறிப்பாக சிவகார்த்திகேயன் உடன் எடுத்த புகைப்படம் ரித்திகாவின் திருமணம் என பல புகைப்படங்கள் அதில் அடங்கியிருக்கிறது. இதுவும் ரசிகர்கள் மத்தியில் அதிகமாக லைக் பெற்று வருகிறது.












Click it and Unblock the Notifications