மகளின் பிறந்த நாளில் சினேகா செய்த நெகிழ்ச்சியான செயல்.. குதூகலிக்கும் குழந்தைக்கு குவியும் வாழ்த்து
ஆதரவற்ற குழந்தைகளோடு பிரசன்னா மற்றும் சினேகா தன்னுடைய குழந்தையின் இரண்டாவது பிறந்த நாளை கொண்டாடி இருக்கின்றனர்.
சென்னை: ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் டான்ஸ் நிகழ்ச்சிகளில் நடுவராக இருந்து வரும் நடிகை சினேகா தற்போது தன்னுடைய மகளின் பிறந்த நாளை பிரம்மாண்டமாக கொண்டாடி இருக்கிறார்.
தன்னுடைய குழந்தையின் இரண்டாவது பிறந்த நாளுக்கு ஆதரவற்ற இல்லத்தில் குழந்தைகளோடு கொண்டாடி அந்த வீடியோவை வெளியிட்டு இருக்கிறார்.
ஆதரவற்ற குழந்தைகளுக்கு இனி நானும் அம்மா தான் என்று இவர் செய்த உதவிகளை ரசிகர்கள் பலரும் பாராட்டி குழந்தைக்கு ஆசீர்வாதங்களை வழங்கி வருகின்றனர்.

சிரிப்பழகி
வெள்ளித்திரையில் சிரிப்பழகி என்று சொன்னால் அனைவருக்கும் தெரிந்து விடும். அது சினேகா தான் என்று அந்த அளவிற்கு தன்னுடைய சிரிப்பால் 90ஸ் கிட்ஸ்கள் முதல் 2k கிட்ஸ்கள் வரை ரசிகர்களாக வைத்திருக்கும் நடிகை சினேகா தற்போது வெள்ளி திரையில் மட்டுமல்லாமல் சின்ன திரையிலும் ஜொலித்து வருகிறார். மலையாளத் திரைப்படத்தில் அறிமுகமாகி தமிழில் ஆனந்தம் திரைப்படத்தில் மூலமாக அறிமுகமாகி முதல் திரைப்படத்திலேயே இவருடைய பல்லாங்குழியின் எனும் பாடல் இப்ப வரைக்கும் பலருடைய ஃபேவரைட் பாடல் ஆகவும், அதில் அவருடைய கியூட்டான எக்ஸ்பிரஷன் மறக்க முடியாததாகவும் இருந்து வருகிறது.

காதல் திருமண வாழ்க்கை
திரைத்துறையில் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள் அதிகமாக இருந்தாலும், ஒரு சிலர் மட்டும்தான் பிரியாமல் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றனர். அந்த வரிசையில் நடிகை சினேகாவும் அவருடைய கணவர் பிரசன்னாவும் இருந்து வருகிறார். இவர்களுடைய காதல் திருமண வாழ்க்கையில் பிரிவு ஏற்பட்டு விட்டதாகவும் இவர்கள் இருவருக்கும் கருத்து வேறுபாடு இருப்பதாகவும் சில வாரங்களுக்கு முன்பு தான் பல வதந்திகள் பரவி வந்தது. ஆனால் அதை எல்லாம் எப்போதும் போல அசட்டை செய்யாமல் தட்டி சென்ற சினேகா தற்போது தன்னுடைய குழந்தையின் பிறந்த நாளை வெகு விமர்சனமாகவும் பலரும் பாராட்டும் விதத்திலும் கொண்டாடி இருக்கிறார்.

குட்டி சினேகா
2009 ஆம் ஆண்டு சினேகாவும் நடிகர் பிரசன்னாவும் அச்சமுண்டு அச்சம் உண்டு என்ற திரைப்படத்தில் இணைந்து நடித்து பின்பு இவர்களுக்குள் காதல் ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து 2012 ஆம் ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு விகான் என்று அழகான ஆண் குழந்தை இருக்கிறார். பிறகு 2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் சினேகாவிற்கு பெண் குழந்தை இரண்டாவதாக பிறந்தது. இந்த செய்தியை வித்தியாசமாக புகைப்படத்தை வெளியிட்டு பிரசன்னா தைமகள் பிறந்தாள் என்று கூறியிருந்தார். இதை பார்த்த ரசிகர்கள் பலரும் குட்டி சினேகா பிறந்து விட்டார் என்று வாழ்த்துக்களை கூறி வந்தனர்.

பெயருக்கான விளக்கம்
இந்த நிலையில் மகளுக்கு ஆத்யந்தா என்ற பெயரை வைத்திருப்பதாக நடிகர் பிரசன்னா கூறியிருந்தார். அதுமட்டுமல்லாமல் தங்களுக்கு பிறக்கப் போகும் முதல் குழந்தை பெண் குழந்தையாக இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டோம். அதனால் நாங்கள் ஆத்யந்யா என்ற பெயரை வைக்கலாம் என யோசித்து இருந்தோம். ஆனால் முதல் குழந்தை ஆண் குழந்தையாக போய்விட்டது அதனால் எனது மகளுக்கு அந்தப் பெயரை தாண்டி வேறு எந்த பெயரையும் யோசிக்க தோன்றவில்லை என்று கூறி இருக்கிறார். அது மட்டும் இல்லாமல் இந்த பெயருக்கான அர்த்தம் ஆதியும் அந்தமும் அற்றவர் என்று அவர் கூறியிருந்தார்.

அம்மாவின் அன்பு
இந்த நிலையில் சமீபத்தில் தான் தன்னுடைய குழந்தைக்கு காதுகுத்து நடத்தி அந்த புகைப்படத்தையும் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு இருந்தனர். எப்போதும் சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் இந்த ஜோடி அடிக்கடி தங்களுடைய குடும்ப புகைப்படத்தை வெளியிட்டு வருவது வழக்கம்தான். அந்த வகையில் தற்போது தன்னுடைய குழந்தையின் இரண்டாவது பிறந்த நாளை ஆதரவற்ற குழந்தைகள் இல்லத்தில் கொண்டாடி மகிழ்ந்து இருக்கின்றனர். தன்னுடைய குழந்தைகள் கையாலே அந்த குழந்தைகளுக்கு புது துணிகள், தேவையான பொருட்களை வாங்கி கொடுத்திருக்கின்றனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.












Click it and Unblock the Notifications