இது எல்லாம் தேவை தானா..!! ரவீந்தருக்கு அறிவுரை கூறிய வனிதா..மீண்டும் தொடக்கிடுச்சா..!!
சென்னை: சமீபத்தில் திருமணம் முடிந்த தயாரிப்பாளர் ரவீந்தருக்கு நடிகை வனிதா அறிவுரை கூறியிருக்கிறார்.
வனிதாவை பற்றி ஏற்கனவே ரவீந்தர் தன்னுடைய யூடியூப் மூலமாக எவ்வளவு முடியுமா அந்த அளவிற்கு வனிதாவை திட்டி தீர்த்து இருந்தார். தற்போது அதற்கு வனிதா கூறிய பதில் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
ஒரு சில நாட்களுக்கு முன்பு வனிதா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கர்மா குறித்து பதிவிட்டு இருந்தார் தற்போது அதை குறித்து விளக்கம் கூறியுள்ளார்.

பரபரப்பை ஏற்படுத்திய திருமணம்
சமூக வலைத்தளத்தில் பரபரப்பை ஏற்படுத்திய தயாரிப்பாளர் ரவீந்தர் மற்றும் மகாலட்சுமியின் திருமணத்திற்கு பல்வேறு தரப்பட்டவர்களும் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். மிகவும் எளிமையான முறையில் ரவீந்தர் மற்றும் மகாலட்சுமி இருவரும் திருமணத்தை முடித்து இருந்தாலும் இவர்களுடைய திருமணம். சமூக வலைத்தளத்தில் பலராலும் பேசப்படும் பொருளாக இருந்து வருகிறது. தயாரிப்பாளர் ரவீந்தர் சின்னத்திரை நடிகை மஹாலட்சுமியை திருமணம் செய்து கொண்டதை பொறுத்துக் கொள்ளாத நெட்டிசன்கள் அவர்களால் எந்த அளவிற்கு முடியுமோ அவ்வளவு கலாய்த்து வருகிறார்கள்.

ஜோடி பொருத்தம்
எல்லோரையும் போல சாதாரணமாக திருமணம் செய்து கொண்ட சின்னத்திரை நடிகை மகாலட்சுமி தயாரிப்பாளர் ரவீந்தர் திருமணம் இவ்வளவு வைரலாகும் என்று யாரும் எதிர்பார்த்து இருக்க மாட்டார்கள். அந்த அளவிற்கு நெட்டிசன்கள் இப்போது இவர்களுடைய திருமணத்தை பேசு பொருளாக்கி சமூக வலைத்தளத்தை அலற விட்டு வருகிறார்கள். இவர்களுடைய ஜோடி பொருத்தம் தான் பலருடைய கண்களை உறுத்திக் கொண்டிருக்கிறது என்று இவர்களுடைய ரசிகர்கள் கூறி வருகிறார்கள். இந்த நிலையில் ரவீந்தர் மற்றும் மகாலட்சுமிக்கு ரசிகர்கள் மட்டுமல்லாமல் திரை பிரபலங்களும் வாழ்த்து கூறி வருகிறார்கள்.

வனிதாவின் திருமணம்
தயாரிப்பாளர் ரவீந்தர் ஒரு சில திரைப்படங்களை தயாரித்து இருந்தாலும் அதில் எல்லாம் இவருக்கு பெரிய அளவில் வெற்றி கிடைக்கவில்லை. ஆனால் பிக் பாஸ் நிகழ்ச்சியை குறித்து இவர் வெளியிடும் ரிவ்யூ ரசிகர்கள் மத்தியில் இவரை பிரபலமாக்கி விட்டது. ஒவ்வொரு சீசனிலும் இவர் தன்னுடைய ரிவ்யூவை தொடங்கி விடுகிறார். அந்த நேரத்தில் தான் நடிகை வனிதா பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்திருந்தார். வனிதாவின் திருமணத்தை குறித்து பலரும் கருத்துக்களை தெரிவித்துக் கொண்டிருக்கும் போது, அதிகமாக வனிதாவை கலாய்த்து கருத்துகளை வெளியிட்டவர் ரவீந்திரராக தான் இருக்க முடியும். பீட்டர் பாலின் மனைவி எலீசபத்துக்காக ஆதரவாக ரவீந்தர் வனிதாவோடு சண்டையிட்டு பல வீடியோக்களை வெளியிட்டு இருந்தார்.

கர்மா குறித்த பதில்
கடைசியாக வனிதா மற்றும் ரவீந்தர் இருவரும் சமாதானம் ஆகிவிட்டதாக ரவீந்தர் கூறியிருக்கின்றார். ஆனால் ரவீந்திரருடைய திருமணத்திற்கு வனிதா எந்த வாழ்த்தும் கூறவில்லையே என்று சமூக வலைத்தளத்தில் பலரும் கேள்வியை எழுப்பி வருகிறார்கள். இந்த நிலையில் வனிதா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கர்மா குறித்து பதிவிட்டு இருந்தார். அது ரவீந்தர்க்காகத்தான் பதிலடியாக இருக்கும் என்று ரசிகர்கள் கருத்துக்களை தெரிவித்து வந்தார்கள். தற்போது அதை குறித்து வனிதா பேசிய வீடியோ பலரால் பகிரப்பட்டு வருகிறது. அதில் நான் ரவீந்தருக்காக மட்டும் இந்த வீடியோ அந்த பதிவை வெளியிடவில்லை. அந்த நேரத்தில் ஒரு சில நிகழ்வுகள் நடந்தது அதை வைத்து தான் அப்படி ஒரு பதிவை வெளியிட்டேன் என்று கூறி இருக்கிறார்.

வனிதாவின் அறிவுரை
ரவீந்தர் மற்றும் மகாலட்சுமி திருமணம் முடிந்திருப்பது எனக்கு மகிழ்ச்சி தான். அவர்கள் நன்றாக இருக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய விருப்பமும் ஆனால் ரவீந்தர் தன்னை பற்றி நெகட்டிவ் ஆக கருத்துக்களை வெளியிடுபவர்களுக்கு எதற்காக பதிலளித்துக் கொண்டிருக்கிறார். அதைப்பற்றி கண்டு கொள்ளாமல் போய்க்கொண்டே இருக்க வேண்டும். பல யூடியூப் சேனல்களில் அவர் பேட்டி கொடுத்து கொண்டிருப்பது மேலும் நெகட்டிவ் கருத்துக்களை வளர்ப்பதற்கு சமமாகும். இவர்கள் இருவருக்கும் உள்ள தனிப்பட்ட விஷயத்தில் மூன்றாவது நபரை நுழைய விடுவது நல்லதல்ல .அதனால் அதை ஆப் செய்து விட்டு அவருடைய மகிழ்ச்சியான வாழ்க்கையை தொடங்க வேண்டும் என்று ரவீந்தருக்கு அறிவுரை கூறியிருக்கிறார். இதை பார்த்த வனிதாவின் ரசிகர்கள் அக்கா எப்போதும் வேற லெவல் தான் என்று வனிதாவின் பெருந்தன்மையை குறித்து கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
-
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே!












Click it and Unblock the Notifications