நாங்கதான் அமீரின் குடும்பம்...கடைசி நேரத்தில் அமீருக்காக அவருடைய குடும்பம் செய்த செயல்
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் அமீர் வெற்றிபெற வேண்டும் என்பதற்காக அவருடைய புது குடும்பம் செய்த செயல் அனைவரையும் கவர்ந்துள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சி முடிவடைய இன்னும் ஒருசில நாட்களே இருக்கும் நிலையில் இவர்களின் முயற்சி வெற்றி பெற ரசிகர்கள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

யூகித்து கூறமுடியவில்லையாம்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் ரியாலிட்டி ஷோவான பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது ஐந்தாவது சீசன் இன்னும் ஒரு சில நாட்களில் முடிவடைய இருக்கிறது. ஆனால் இந்த நிகழ்ச்சியில் யார் வெற்றி பெறுவார்கள் என்பது யாராலும் யூகிக்க முடியாத வகையில் தான் இருந்து வருகிறது. இதற்கு முந்தைய சீசன்களில் கூட இவர்தான் வெற்றி பெறுவார் என்று ரசிகர்கள் ஆரம்பத்திலிருந்தே கூறி விடுவார்கள். அது பல நேரங்களில் பயனளித்து இருக்கிறது. ஆனால் தற்போதைய சீசனில் ரசிகர்கள் ஒரு சிலர் ராஜுவின் பெயரை கூறி வந்தனர். ஆனால் தற்போது பலருக்கும் குழப்பம் ஏற்படும் விதமாக இந்த நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

முதலாவதாக சேவ் ஆனவர்
ஆரம்பத்தில் இந்த நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்கள் அறிமுகமாகி இருந்தனர். அதற்கு பிறகு இரண்டு போட்டியாளர்கள் வைல்ட் கார்டு என்ட்ரியாக அறிமுகமானார்கள். 20 போட்டியாளர்கள் இருந்த இந்த வீட்டில் தற்போது 5 போட்டியாளர்கள மட்டுமே இருக்கின்றனர். இதில் முதல் போட்டியாளராக சேவ் ஆன அமீர் இந்த நிகழ்ச்சியில் வருவதற்கு முன்பு நடன ஆசிரியராக மட்டும் தான் பலருக்கும் தெரியும். இவர் டான்ஸ் மாஸ்டராக பலருக்கும் டான்ஸ் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தாலும் ஒரு சில நிகழ்ச்சிகளில் இவரும் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டுள்ளார்.

கலங்க வைத்த கதை
விஜய் டிவியில் பல சீரியல்களில் சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு இவர்தான் டான்ஸ் மாஸ்டராக இருந்துள்ளார். அதுதவிர கலர்ஸ் டிவியில் ஒளிபரப்பான டான்ஸ் நிகழ்ச்சிகளிலும் இவர் கலந்து கொண்டுள்ளார். இந்த நிலையில் இவருடைய மகிழ்ச்சியான பக்கங்களை பார்த்து வந்த ரசிகர்கள் இவருடைய கதை சொல்லும் டாஸ்கில் இவருடைய சோக கதையை கேட்டு இவர் மீது தனி அபிப்ராயம் வந்துவிட்டது. பிக்பாஸ் வீட்டிற்குள் அதிகமாக ரசிகர்களின் மனதை கவர்ந்த கதையாக இவருடைய கதைதான் இருந்து வருகிறது. இதற்கு முன்பு நமிதா மாரிமுத்துவின் கதை பலரையும் கண்கலங்க வைத்திருந்தது. அதற்கு பிறகு இவருடைய கதையை கேட்டு பலர் அழுது இருந்தனர்.

அமீர் குடும்பத்தின் வேண்டுகோள்
சிறுவயதிலேயே தாய் தந்தையை இழந்த இவருக்கு சைஷி குடும்பத்தினர்தான் புது குடும்பமாக இருந்து வருகின்றனர். தற்போது ஐந்து போட்டியாளர்கள் மட்டுமே மீதம் இருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் அனைத்து போட்டியாளர்களின் நண்பர்களும் உறவினர்களும் தங்களுக்கு பிடித்த போட்டியாளர்கள் ஜெயிக்க வேண்டும் என்று ரசிகர்களிடம் வாக்கு சேகரித்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது அமீரின் குடும்பம் இன்ஸ்டாகிராமில் ரசிகர்களிடம் வாக்களிக்க கேட்டுள்ளது. எவ்வளவோ சோதனைகளை தாண்டி தான் இந்த நிலைமைக்கு அமீர் வந்துள்ளார். அதனால் எப்படியாவது அவருக்கு வெற்றியை ஏற்படுத்திக் கொடுக்க தயவு செய்து அனைவரும் ஓட்டளிக்க வேண்டும் என்று இவர்கள் உருக்கமாக பதிவிட்டுள்ளனர். இவர்களுக்கு ஆதரவு கொடுக்கும் விதமாக ரசிகர்கள் கமெண்ட்களையும் அனுப்பி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications