கமல் இப்படித்தான்... யாராலயும் அவர் போல முடியாது... சவால்விடும் அமீர்
சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு கமலுடன் பழக வாய்ப்பு கிடைத்தது பற்றி தன்னுடைய ரசிகர்களிடம் அமீர் கூறியுள்ளார்.
கமல் போல யாராலும் இனியும் வர முடியாது என்று கமல் மீது தனக்கு இருக்கும் அன்பை அமீர் வெளிக்காட்டியுள்ளார்.

உலகநாயகன் கமல்ஹாசன்
வெள்ளித்திரையில் உலக நாயகனாக வலம் வந்து கொண்டிருக்கும் கமலஹாசனை பற்றி தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அவரோடு பணியாற்றிய அமீர் கூறி இருக்கும் தகவல்கள் ரசிகர்களுக்கு வியப்பாக இருக்கிறது.என்ன தான் ஒரு நிகழ்ச்சியில் இவர்கள் இருவரும் சந்தித்துக் கொள்ளும் நிலை வந்தாலும், இவர்கள் இருவருக்கும் இப்படி ஒரு அன்பா என்று தற்போது ரசிகர்கள் பலரும் கேள்விகளை எழுப்பி வருகிறார்கள்.

திரைத்துறையில் அனுபவம்
கமலஹாசன் தற்போது சின்னத்திரையில் அடியெடுத்து வைத்திருப்பது அவருடைய ரசிகர்களுக்கு ஆரம்பத்தில் அதிர்ச்சியாக இருந்தாலும், இந்த நிகழ்ச்சியும் இதில் இவருடைய பர்பாமன்ஸ் இவருடைய திறமைக்கு மேலும் வலு சேர்க்கும் விதமாக தான் இருந்து வருகிறது என்று தற்போது அவருடைய ரசிகர்கள் அவருக்கு தொடர்ந்து ஆதரவு கொடுத்து வருகின்றனர். குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான கமலஹாசன் தற்போது அவருடைய வயதும், சினிமா அனுபவமும் ஒன்றாக இருக்கும் அளவிற்கு இவர் சினிமா துறையில் தனித் திறமையால் ஜொலித்து வருகிறார்.

வைல்ட் கார்ட் என்ட்ரி ஆக அறிமுகம்
பிக் பாஸ் 5 வது சீசனில் வைல்ட் கார்ட் என்ட்ரியாக அறிமுகமாகி 50 நாட்களுக்கு மேலே பிக்பாஸ் நிகழ்ச்சியில் காலடி எடுத்து வைத்திருந்தாலும், ஒரு டான்ஸ் மாஸ்டராக இந்த நிகழ்ச்சியில் அதிகமான ரசிகர்களை கவர்ந்து விட்டார். அமீர் பிக்பாஸ் ஐந்தாவது சீஸனில் நான்காவது இடத்தில் வெற்றி பெற்றிருந்தாலும், இவருடைய திறமைக்கு இது குறைவு என்றுதான் இவருடைய ரசிகர்கள் கூறிவருகின்றனர். ஆரம்பத்திலிருந்து இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்தால் இவற்றில் ஜெயிப்பதற்கு வாய்ப்பு அதிகமாக இருந்திருக்கும் என்றும் கூறிவருகின்றனர். இந்த நிலையில் இவர் இந்த நிகழ்ச்சியை விட்டு வெளியேறிய பிறகு இவரிடம் ரசிகர்கள் தொடர்ந்து கேள்விகளை கேட்டு வருகின்றனர்.

கமலை புகழ்ந்த அமீர்
அமீரிடம் ரசிகர் ஒருவர் கமல் பற்றி கூறும் படி கேட்டுள்ளார். அதற்கு அவர் கமல்ஹாசன் எந்த நடிகரை போன்றும் ஒப்பிட்டுக் கூற முடியாது. அவர் தமிழ் சினிமா மட்டுமல்லாமல் உலக சினிமாவிலும் தனித்துவமானவர். அவருடைய திறமைக்கு முன்பு இதற்கு முன்பு வந்த நடிகர்களும், இனியும் யாராலும் ஈடு செய்ய முடியாது என்று கூறியுள்ளார். எவ்வளவு தனித்திறமைகள் மட்டுமல்லாமல் தனித்துவங்களையும் தனக்குள்ளே வைத்துக்கொண்டு எளிமையாக இருக்கும் ஒரு நபர் தான் கமல் என்று கமல் பற்றி புகழ்ந்து தள்ளியுள்ளார்.
-
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
ஏசியை 18 டிகிரியில் வைத்தால் கரண்ட் பில்லில் இவ்வளவு மாற்றமா?.. தமிழக மின்சார வாரியம் கணக்கு இதோ -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன் -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்!












Click it and Unblock the Notifications