• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In

அமீரின் குணமே வேறு... இதற்கெல்லாம் ஆசைப்படுபவர் கிடையாது..கண்கலங்கிய அமீரின் உறவினர்

Google Oneindia Tamil News

சென்னை: பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்கும் அமீர் பற்றிய உண்மைகளை அவருடைய உறவினர் தெரிவித்துள்ளார்.

படப்பை குணாவிற்கு உதவியதாக 3 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம்.. டிஜிபி அதிரடி உத்தரவு! படப்பை குணாவிற்கு உதவியதாக 3 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம்.. டிஜிபி அதிரடி உத்தரவு!

பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்கும் அமீர் அவருடைய ரசிகர்கள் பலர் சப்போர்ட் செய்து கொண்டிருப்பது போல அவருடைய சிறிய குடும்பமும் அவருக்கு அதிகமாக சப்போர்ட் கொடுத்து அவரைப் பற்றிய உண்மைகளை வெளியிட்டுள்ளனர்.

தெரியாத மற்றொரு முகம்

தெரியாத மற்றொரு முகம்

தற்போது விஜய் டிவியில் பிக்பாஸ் ஐந்தாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சி முடிவடைய இன்னும் நான்கு நாட்களே இருக்கும் நிலையில், அந்த நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக அதுவும் வைல்ட் கார்ட் போட்டியாளராக 50 நாட்களுக்கு மேலாக நிகழ்ச்சிக்குள் களமிறங்கி விளையாட்டில் வெற்றி வாகை சூடி கொண்டு இருக்கும் அமீர், ஒரு நடன ஆசிரியராக பலருக்கும் தெரிந்திருந்தாலும் அவருடைய தெரியாத இன்னொரு முகத்தை பற்றி பலரும் இந்த பிக் பாஸ் வீட்டிற்குள தான் தெரிந்து கொண்டனர்.

மனதைப் பாதித்த சோகக்கதை

மனதைப் பாதித்த சோகக்கதை

சிறு வயதில் தாய் தந்தையை இழந்து தன்னுடைய பெரியம்மாவின் ஆதரவில் பள்ளிப்படிப்பை முடித்து இருந்தாலும், அதற்கு பிறகு பெரிய அளவில் யாருடைய சப்போர்ட்டும் இல்லாமல் தவித்துக் கொண்டிருந்த நேரத்தில்தான் அவருக்கு அஸ்ரப் குடும்பத்தினர் உதவிகளை செய்து இப்ப வரைக்கும் பாதுகாப்பாக இருந்து வருகின்றனர். இந்த கதையை பிக்பாஸ் வீட்டில் தன்னுடைய கடந்துவந்த, மனதை பாதித்த கதையாக அமீர் சொன்னதும் ரசிகர்கள் பலரும் ஃபீல் ஆகிவிட்டனர். ஆரம்பத்தில் இவர் இந்த நிகழ்ச்சியில் வந்த நாளிலிருந்து பாவனியின் பின்னாடியே சுற்றிக் கொண்டிருக்கிறார் என்று பலர் குறை கூறிக் கொண்டிருந்தாலும், இவருடைய கதையை கேட்டு பலரும் மனம் வருந்தி இருந்தனர்.

கதைக்காக அதிகநேரம்

கதைக்காக அதிகநேரம்

அமீர் உடைய சொந்த கதை ஆழமாக இருந்ததால் தான் பிக்பாஸ் வீட்டில் அதிக நேரம் இவருக்கு கதை சொல்ல டைம் கொடுத்திருந்தது. இதற்கு முன்பு நமீதா மாரிமுத்துவின் கதைக்காக அதிக நேரம் கொடுக்கப்பட்டிருந்தது. அதைத்தொடர்ந்து இவருக்குத்தான் அதிக அளவில் நேரம் கொடுக்கப்பட்டது. அமீரின் மொத்த கதையும் ரசிகர்களுக்கு சொல்லி இருந்தாலும், அவர் இப்படி ரியாலிட்டி ஷோவில் சொல்லி இருக்கக் கூடாது என்று அஸ்ரப் குடும்பத்தினர் கூறிவந்தனர். இந்த நிலையில் அவருக்கு ஆதரவு கொடுத்த பெரியம்மா அவரைப் பற்றி பல செய்திகளை கூறியுள்ளார்.

  Bigg Boss Tamil Season 5 | 12th January 2022 - Promo 3 | Director Raju, Hero Ciby ஒரு கதை சொல்லட்டுமா Sir
  இதுதான் உண்மை முகம்

  இதுதான் உண்மை முகம்

  இறுதிப்போட்டிக்குள் நுழையும் முதல் போட்டியாளராக இவர் சேவ் ஆன பிறகு வந்த பணப்பெட்டி டாஸ்க்கில் இவர் பண தேவை அதிகமாக இருப்பதால் பண பெட்டியை எடுத்து விட்டு வந்து விடுவார் என்று அதிகமான ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர். ஆனால் அமீர் எப்போதுமே பணத்திற்காக ஆசைப்படுபவர் கிடையாது என்று அவருடைய உறவினர்கள் கூறியுள்ளனர். அதுமட்டுமல்லாமல் அடுத்தவர்களிடம் பாசம் காட்டுவதிலும் இவரை யாரும் அடிச்சுக்க முடியாது, குழந்தைகளிடமும் அதிகமாக பாசமாக இருப்பாராம் என்று கூறியுள்ளார். அதுமட்டுமல்லாமல் இவர் பெரிய அளவில் சாதனை புரிவார் என்று அவர்களுடைய குடும்பத்தினர் ஆரம்பத்திலிருந்தே கூறிக் கொண்டுதான் இருந்தார்களாம். எந்த ஒரு சூழ்நிலையிலும் முன்வைத்த காலை பின் வைக்காமல் போராடி வெற்றி பெறுவதுதான் அவருடைய குணமாக இருந்ததாம்.

  English summary
  His cousin tells the truth about Amir who is inside the Bigg Boss house.Amir, who is in the Bigg Boss house, has been supported by many of his fans and his small family has given him a lot of support and revealed the facts about him.
   
   
   
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X