ராஜூ கூடவே இருந்தாலும் அண்ணாச்சி ராஜூவை பற்றி பேசியது சரிதானா?? கலாய்க்கும் ரசிகர்கள்
சென்னை: எதற்கும் விட்டுக் கொடுக்காத ராஜுவை பற்றி அண்ணாச்சி பேசியது ரசிகர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
தப்பை யார் செய்தாலும் அது தப்பு தான் என்று அண்ணாச்சி அடாவடியாக கூறியிருக்கிறார்.
ராஜுவை பற்றி நிரூப் குறை கூறியதற்கு அண்ணாச்சி அதை நேரம் வரும்போது கேட்டுக்கொள்கிறேன் என்று கூறியிருக்கிறார்.

வழக்கமாக நடப்பது தான்
பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு போட்டியாளர்கள் ஆரம்பத்தில் ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுத்து கொண்டு பாசமாக இருந்தாலும் நாட்கள் செல்ல செல்ல தங்களுடைய விளையாட்டில் தான் அனைவருடைய கவனமும் இருந்து வருகிறது. அதில் ஒரு சில போட்டியாளர்கள் அன்பாக இருக்கிறேன் என்று ஒருவருக்கு ஒருவர் விட்டுக்கொடுத்து விளையாடிக் கொண்டிருந்தால் போட்டியாளர்களை ரசிகர்கள் சீக்கிரத்தில் வீட்டிற்கு அனுப்பி வைத்துவிடுகின்றனர்.

அண்ணாச்சியின் கணிப்பு
இது பல சீசன்களில் நடந்து கொண்டிருந்தாலும் தற்போதைய சீசனில் விரைவில் நடக்கும் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர். இந்த சீசன் வழக்கத்துக்கு மாறாக முதல் இரண்டு வாரங்கள் ஒற்றுமையாக போட்டியாளர்கள் ஒருவருக்கொருவர் அனுசரணையாக நடந்து கொண்டதை பார்த்ததும் ரசிகர்கள் அப்போ இந்த சீசன் வேற லெவல் இருக்கப்போகிறது என்று எதிர்பார்ப்பில் இருந்தனர். ஆனால் நாட்கள் செல்ல செல்ல போட்டியாளர்கள் தங்களுடைய சுயரூபத்தைக் காட்டத் தொடங்கிவிட்டனர். ஆனால் ஆரம்பத்தில் இருந்தே இதை கணித்து அண்ணாச்சி அவ்வப்போது கூறிக் கொண்டுதான் இருந்தார்.

அண்ணாச்சி ராஜுவின் ஒற்றுமை
இன்னும் இரண்டு வாரங்களில் அனைவருடைய கேரக்டரும் வெளியே வந்துவிடும் என்று அவர் கூறியது போலவே தற்போது நடந்து கொண்டிருக்கிறது. ஆனால் விளையாட்டு என்றாலும் தங்களுக்கு மனதுக்கு பிடித்தவர்களுடன் நெருக்கமாக இருக்கும் போட்டியாளர்கள், ஒரு சிலர் இருந்து கொண்டுதான் இருக்கின்றனர். அதில் ராஜு, அண்ணாச்சி உள்ளிட்ட ஒரு சிலர் இந்த சீசனில் இடம் பிடித்திருக்கின்றனர். ராஜூவுக்கு ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து இருக்கும் நேரத்தில் அவர் அண்ணாச்சியிடம் கருத்து ஒன்றாக இருக்கிறது என்று நெருக்கமாக இருந்து வருகிறார்.

அண்ணாச்சியின் கருத்து
அண்ணாச்சியை பற்றி சக போட்டியாளர்கள் யார் குறை கூறினாலும் அந்த இடத்தில் ராஜு நின்று தன்னுடைய கருத்து தெரிவிக்காமல் அப்படியே நழுவி விடுவது வழக்கமாக இருந்து வருகிறது. ஆனால் நேற்றைய எபிசோடில் நிரூப், ராஜு..அக்ஷராவுக்கு அதிகமாக கரிசனம் காட்டுகிறார். அதே வேலையைத்தான் அக்ஷராவும் செய்து கொண்டிருக்கிறார் என்று குறை கூறிக் கொண்டு இருந்தார். இதைக் கேட்டுக் கொண்டிருந்த அண்ணாச்சி நானும் இதை கவனித்திருக்கிறேன். விரைவில் பேச வேண்டிய இடத்தில் இதை பேசுவேன் என்று கூறியிருக்கிறார். தப்பு என்று தெரிந்தால் பேச வேண்டியது நமது கடமை என்று அவர் கூறியது ரசிகர்களின் மத்தியில் இருவேறு தரமான கருத்துக்களை எழுப்பி வருகிறது.
-
தவெக வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் LIVE: 234 தொகுதிகளில் 23 பெண்களுக்கு மட்டுமே வாய்ப்பு அளித்த விஜய் -
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன் -
விஜய்க்கு எதிராக பெரம்பூர், திருச்சியில் கிழக்கில்.. களமிறங்கும் திமுக, அதிமுக வேட்பாளர்கள் யார்? -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
அரசியலன்னா இதுதான்.. எப்போ என்ன நடக்கும்னே தெரியாது.. ஸ்டாலின் டிக் அடித்த பெயர்.. பலர் ஷாக் -
இதுவரை திமுக ஜெயிக்காத.. கோவை தெற்கு தொகுதியைத் கேட்டு வாங்கிய செந்தில் பாலாஜி.. என்ன காரணம்? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
ஜெயலலிதா ஸ்டைலை பின்பற்றும் விஜய்! ‘டபுள் தொகுதி’ ஃபார்முலாவை கையில் எடுத்தது ஏன்? இதுவரை யார் யார்? -
திமுக தேர்தல் அறிக்கை LIVE: மகளிர் உரிமை தொகை, புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் தொகை உயர்வு! -
மத்தி, சென்னையை கிளீன் ஸ்வீப் செய்யும் திமுக! தெற்கு, வடக்கில் ட்விஸ்ட்! அப்போ அரியணை? வெளியான சர்வே -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்!












Click it and Unblock the Notifications