சமையலறையில் அண்ணாச்சி நடத்தும் தில்லுமுல்லு...இது சரியா??கலாய்க்கும் ரசிகர்கள்
சென்னை: சமையல் அணியில் சேர்ந்து இருக்கும் அண்ணாச்சி அங்கேயும் ஆரம்பித்து விட்டாரா என ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.
பாவனியுடன் ரகசியம் பேசி ஐக்கியிடம் மாட்டிக்கொண்ட அண்ணாச்சியை பார்த்து நெட்டிசன்கள் தங்கள் பங்குக்கு கொளுத்திப் போட்டு வருகின்றனர்.
வயசுக்கு தகுந்த மாதிரி வேலையா பாக்குறீங்க என்று நெட்டிசன்கள் மீம்ஸ்களில் கலாய்த்து வருகின்றனர்.

வெளியேறிய அபிஷேக்
ஐந்தாவது சீசனில் இதுவரைக்கும் ப்ரமோவில் அதிகமாக இடம் பிடித்துக் கொண்டிருந்த அபிஷேக் ராஜா இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பிறகு, நிகழ்ச்சி சூடுபிடிக்குமா??அல்லது சுவாரஸ்யமாக இருக்குமா?? இல்லை போரடிக்குமா?? என பல்வேறு விதமான கருத்துக்களை ரசிகர்கள் எழுப்பிக் கொண்டிருந்த நிலையில் வழக்கம் போல இன்றைய ப்ரமோகளும் வைரலாகி வருகிறது. நாங்கள் எங்களுடைய வேலையை சரியாகத்தான் பார்த்துக் கொண்டிருக்கிறோம் என்று போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் நிரூபித்து வருகின்றனர்.

சமையல் அணியில் அண்ணாச்சி
இரண்டு வாரங்களாக அண்ணாச்சி சமையல் அணியில் இல்லாததால் சமையலில் அவர் சொன்ன குறை போட்டியாளர்களை ரொம்பவே பாதித்து விட்டது என்று பாவனி குறை கூறிக் கொண்டிருந்த நேரத்தில் இந்த வாரத்தில் அவர் சமையல் அணியில் சேர்ந்து இருக்கிறார். அதுமட்டுமல்லாமல் ஏற்கனவே போன வாரத்தில் கமல் முன்னணியில் அவர் கூறிவிட்டார். நான் அடுத்த வாரத்தில் சமையல் அணியில் தான் இருப்பேன் என்று, ஆனால் வந்த முதல் நாளே பிரச்சனைகள் காபி போடுவதில் தொடங்கி இருக்கிறது.

பாவனையுடன் ரகசிய பேச்சு
காமெடி நடிகராக இருந்தாலும் இமான் அண்ணாச்சிக்கு நார்மலாகவே காமெடி இருந்து கொண்டுதான் இருக்கிறது. அதனாலேயே இவர் ஒரு சில நேரங்களில் இவரையும் மீறி சில இறுக்கமான சூழ்நிலையில் அனைவரையும் சிரிக்க வைத்துவிடுகிறார். இந்த நிலையில் இவர் இன்று சமையற்கட்டில் நின்று கொண்டு பால் பாக்கெட்டை எடுத்துக் கொண்டு இருக்கிறார். அதை பார்த்ததுமே பாவனி எனக்கு காபி வேண்டும் என்று கேட்கவும், ஏற்கனவே இவரிடம் வம்பு இழுத்தால், இவரை எப்படியும் சமாளிக்க வேண்டும் என்று உனக்கு மட்டும் தனியா தண்ணி ஊத்தாம பால் காய்ச்சி எடுத்துட்டு மிச்ச எல்லாத்துக்கும் தண்ணி ஊத்தி தான் கொடுப்பேன் என்று இவர் ரகசியமாக சொல்லிக்கொண்டிருக்கிறார்.

சமாளித்துவிட்ட அண்ணாச்சி
பாவனியிடம் இவர் ரகசியமாக சொல்லி விட்டு திரும்பும்போது பின்னாடி நின்று ஐக்கி கேட்டுக் கொண்டிருக்கிறார். அதனால் ஐக்கியையும் எப்படியும் சமாளிக்க விட்டுவிட வேண்டும் என்று உனக்கும் தண்ணி ஊத்தாம எடுத்து தாரேன் என்று இவர் டீலிங் பேசிக் கொண்டிருக்கிறார். ஏற்கனவே அபிஷேக் இப்படித்தான் இந்தப்பக்கம் ஒரு பேச்சு, அந்தப்பக்கம் ஒரு பேச்சு என பேசிக் கொண்டிருந்தார். இப்போது அண்ணாச்சி தொடங்கிவிட்டார் என்று நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர். இன்றைய அன் சீன் எபிசோடுகள் ஒளிபரப்பாக போகிறது அதை பார்த்த பிறகுதான் தெரியும், நிஜத்தில் அங்கே என்ன நடந்துகொண்டிருக்கிறது என்று என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
-
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு!












Click it and Unblock the Notifications