அனுதாபத்தை தேடவில்லை..உருக்கமான வார்த்தைகளால் ரசிகர்களை பீல் பண்ண வைத்த சாரா..ஏன் இந்த திடீர் முடிவு
சென்னை: தொகுப்பாளரும் நடிகையுமான அர்ச்சனாவின் மகளான சாரா தற்போது இன்ஸ்டாகிராமில் உருக்கமாக போஸ்ட் வெளியிட்டுள்ளார்.
விரக்தியாக சாரா வெளியிட்ட போஸ்ட் பார்த்ததும் ரசிகர்கள் பலர் அவருக்கு தொடர்ந்து ஆதரவு கொடுத்து வருகின்றனர்.

அம்மாவுக்கு டப் கொடுக்கும் மகள்
தொகுப்பாளர்கள் என்று சொன்னதுமே டக்கென்று நினைவிற்கு வருபவர்களில் அர்ச்சனாவும் ஒருவர். இவரைப் போலவே அவருடைய மகளும் தற்போது தொகுப்பாளராகவும் நடிகையாகவும் காலடி எடுத்து வைத்திருக்கிறார். குழந்தையாக இருக்கும்போது அவருடைய அம்மாவுக்கு டப் கொடுக்கும் வகையில் தன்னுடைய பேச்சு திறமையால் ரசிகர்களை மிரட்டியிருக்கிறார். ஜீ தமிழில் ஒளிபரப்பான மிஸஸ் சின்னத்திரை நிகழ்ச்சி அவருடைய அம்மாவான அர்ச்சனாவும் இருவரும் தொகுத்து வழங்கி இருக்கின்றனர்.

மீண்டும் இணைந்த அம்மா மகள்
சின்னத்திரையில் மட்டுமல்லாமல் வெள்ளித்திரையிலும் தற்போது சாரா கால் பதித்திருக்கிறார். லேட்டஸ்டாக டாக்டர் திரைப்படத்தில் இவருடைய நடிப்பு ரசிகர்களை அதிகமாக கவர்ந்து விட்டது. தற்போது மீண்டும் விஜய் டிவியில் சாரா மற்றும் அர்ச்சனா இருவரும் இணைந்து நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகின்றனர். அதிலும் நான் தாயில்லாமல் நானில்லை எனும் நிகழ்ச்சியில் இவர்கள் இருவருடைய பாசம் மற்றும் கலகலப்பை பார்த்து ரசிகர்கள் பலர் இவர்களுக்கு வாழ்த்துக்களை கூறி இது போலவே தொடர்ந்து அனைவரையும் என்டர்டைன்மென்ட் செய்ய வேண்டும் என்றும் கூறிவந்தனர்.

சமூக வலைத்தளத்தில் விளக்கம்
சாரா சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருந்து வருகிறார். யூடியூப் சேனல்களிலும் இவருடைய வீடியோக்கள் அடிக்கடி வைரலாகி வரும். அதுவும் சில மாதங்களுக்கு முன்பு இவருடைய பாத்ரூம் டூர் வீடியோ அதிக அளவில் நடைபெற்று வைரல் ஆகி விட்டது. நெட்டிசன்கள் கலாய்ப்பிருக்கு உள்ளான சாரா மற்றும் அர்ச்சனா இருவரம் அதற்கான விளக்கங்களும் கொடுத்திருந்தனர். அதுமட்டுமல்லாமல் பல நேரங்களில் இவருடைய போஸ்டு பார்த்து நெட்டிசன்கள் தவறான வார்த்தைகளை பயன்படுத்தி வருகிறார்களாம். அதனால் மன வேதனையில் இருக்கும் இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராமில் உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

சாராவின் உருக்கமான போஸ்ட்
நம் வாழ்வின் ஒரு கட்டத்தில் யாருடைய நிலையும் இல்லை என்பதை நாம் உணர்ந்திருப்போம். மக்கள் நாம் நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு வேகமாக மாற்றங்களை கண்டு பிடிப்பார்கள் என்பதை உணர்ந்திருப்போம். அன்றாடம் ஒரு போராட்டமாக இருக்கலாம் தினமும் சூரிய ஒளி இருக்காது. நமக்கு தகுதி இல்லாத விஷயங்களை கேட்கிறோம் நாம் விரும்பாத வெறுப்பையும் முரட்டுத்தனத்தையும் பெறுகிறோம். நம்மை தொலைத்து விட்டு தனிமையில் இருக்க விரும்புகிறேன் அதே நேரத்தில் நாம் கண்டுபிடிக்கப்பட்ட மனிதர்கள் நம்மிடம் இருக்கிறார்கள். எங்களிடம் போலியான நபர்கள் உள்ளனர். எங்களிடம் அழகான மனிதர்கள் உள்ளனர். நச்சுத்தன்மையுள்ள மனிதர்கள் உள்ளனர் என்று சாரா நெகட்டிவ் கருத்துக்களை கூறுபவர்களுக்கு பதில் கூறியிருக்கிறார்.

ரசிகர்களின் ஆறுதல்
நாங்கள் அனுதாபத்திற்கான விஷயங்களை செய்வதில்லை, கவனத்திற்காக விஷயங்களை செய்வதில்லை, நாங்கள் உணர்கிறோம். நாங்கள் உணர்ச்சிவசப்பட்டும் அழுகிறோம், சிரிக்கிறோம், விழுந்து எழுகிறோம், பிடித்து விடுகிறோம். எதுவாக இருந்தாலும் உன்னிடம் நீயே இருக்கிறாய். கண்ணாடியில் அந்த நபர் இருக்கிறார். அவரும் உங்கள் ஒரே நபர் நான் இவ்வளவு ஆழமாக எதையும் டைப் செய்யவில்லை. ஆனால் இது இப்போது சிரமப்படும் அனைவருக்கும் நமக்கு நாமே இருக்கிறது என்று அவருக்கும் சோகத்தில் இருப்பவர்களுக்கும் ஆறுதல் கூறியிருக்கிறார். இந்த போஸ்ட்க்கு அர்ச்சனாவின் சகோதரியான அனிதா நான் எப்போதும் சொல்வது போல் சுய அன்பு மட்டுமே எங்களின் ஒரே நிலையானது என்று கூறியுள்ளார்.
-
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன? -
திமுக மாணவரணி செயலாளராக முதல்முறையாக பெண் நிர்வாகி நியமனம்.. ராஜீவ் காந்தி திடீர் மாற்றம் -
அமெரிக்கா போட்ட தப்பு கணக்கு... ஈரான் விரித்த 'மொசைக்' வலை.. யார் இந்த முகமது அலி ஜாஃபரி? -
முகத்திற்கு நேராக மம்தா சொன்ன வார்த்தை! ஆளுநர் ரவியின் சிரிப்பு அப்படியே போச்சு! முதல் நாளே சம்பவம் -
160+ சீட்டில் எடப்பாடி பழனிசாமி யூடர்ன்.. சீனியர் லிஸ்ட்டை கிழித்து.. உளவுத்துறை மாஜி சொன்ன சீக்ரெட் -
2010ல் அதிமுக மாவட்ட பொறுப்பில் இருந்தேன்.. எடப்பாடியிடம் ஜனநாயகம் இருக்காம்.. காளியம்மாள் பேட்டி! -
ரஷ்யாவிற்கு சுக்கிர திசை.. அமெரிக்காவே திறந்து விட்ட புதிய வழி.. பல ஆயிரம் கோடி லாபம் கொட்டுகிறது -
தேமுதிகவால் திமுக கூட்டணியில் மற்ற கட்சிகளுக்கு நெருக்கடியா – ஒரே வார்த்தையில் முடித்த பிரேமலதா -
அமைதி வேண்டாம்! எங்களிடம் நீங்க நினைக்காத அஸ்திரம் உள்ளது! அதிர வைத்த புது சுப்ரீம் லீடரின் வார்னிங்












Click it and Unblock the Notifications