ப்ரீயா இருந்தா வாங்க.. என் பொண்டாட்டி நல்லா டீ போடுவா.. வீட்டிற்கு அழைத்த "கிச்சா".. அஸ்வின் கலாய்
சென்னை: விலங்கு வெப்தொடரை பார்த்து தன்னை பாராட்டிய கிரிக்கெட் வீரர் அஸ்வினை விலங்கு புகழ் கிச்சா டீ சாப்பிட வீட்டிற்கு அழைத்தார். அதற்கு அஸ்வின் காமெடியாக கலாய்த்து ஒரு பதிலை கொடுத்துள்ளார்.
களவாணி, கலகலப்பு, பசங்க படங்கள் மூலம் பிரபலமானவர் நடிகர் விமல். இவர் வெப் சீரிஸிலும் நடித்து வருகிறார். அண்மையில் இவர் நடித்த படங்கள் ஏதும் கைக் கொடுக்காமல் போனாலும் இவர் நடித்த விலங்கு என்ற வெப் சீரிஸ் மிகவும் கைக் கொடுத்தது.
இதற்கு மக்களிடம் நல்ல வரவேற்பு இருக்கிறது. இதை பிரசாத் பாண்டிராஜ் இயக்கியிருந்தார். இந்த தொடரில் இனியா, முனிஷ்காந்த், பால சரவணன், மனோகர் உள்ளிட்டோர் நடித்திருந்தார்கள், இந்த தொடர் பிப்ரவரி 18ஆம் தேதி ஓடிடி தளத்தில் வெளியானது.

அனைவர் நடிப்பு
இந்த தொடரில் அனைவரின் நடிப்பும் பாராட்டப்பட்டது. ஆயினும் கிச்சா எனும் கதாபாத்திரம் தான் ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலமானது. அந்த தொடரில் கிச்சாவாக நடித்தவர் ரவி. இவர் இந்த தொடரில் பேசிய வசனம் கிச்சான்னாலே இளிச்ச வாயன் தான என்ற வசனம் பிரபலமானது.

மீம் கிரியேட்டர்ஸ்
இதை வைத்து பலர் மீம் கிரியேட் செய்து வருகிறார்கள். மேலும் இந்த கிச்சா கதாபாத்திரம் என் பொண்டாட்டி சூப்பரா டீ போடுவா, வீட்டுக்கு வாங்களேன் என்று அழைத்து செல்வார். அவரை நம்பி வீட்டிற்கு வருவோரை கிச்சா மனைவி மயக்கி தனது வலையில் விழ வைத்து பணம் பறிப்பார். இந்த தொடரை கிரிக்கெட் வீரர் அஸ்வின் பார்த்துவிட்டு பாராட்டியிருந்தார்.

நடிகர் ரவிக்கு பாராட்டு
அஸ்வின் பாராட்டிய போது நடிகர் ரவியை வெகுவாக பாராட்டியிருந்தார். இதற்கு ரவி நன்றி தெரிவித்தார். அஸ்வின் சார் நீங்க விலங்கு சீரியல் பார்த்தேன் என நீங்கள் கூறியது எனக்கு பெருமையாக இருக்கிறது. ஒரு எனர்ஜியாக இருந்தது என கூறிய ரவி, நீங்கள் ப்ரீயா இருந்தா வாங்களேன். ஒரு டீ சாப்பிடலாம், என் பொண்டாட்டி நல்லா டீ போடுவா என விலங்கு தொடர் வசனத்தை கூறினார்.
|
அஸ்வினின் குறும்பு பதில்
இதற்கு அஸ்வினும் விலங்கு தொடரில் வரும் வசனமான கிச்சான்னாலே இளிச்ச வாயன் தான என்பதை மீம் போல் போட்டுள்ளார். ரவிக்கு அஸ்வின் காமெடியாக பதில் அளித்துள்ளது பலரையும் கவர்ந்துள்ளது. இந்த வெப் சீரிஸை வைத்து டெல்லியை சென்னை அணி 92 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது குறித்து மீம்களும் வைரலாகி வருகின்றன.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications