அப்பா இல்லாத எனக்கும் "அந்த பிரச்சனை” நடந்திருக்கிறது..மனம் திறந்த அயலி பட அம்மா.. குவியும் கருத்து
சமீபத்தில் வெளியான அயலி திரைப்படத்தில் அம்மா கேரக்டரில் நடித்த நடிகை அனுமோல் தன்னுடைய சொந்த வாழ்க்கையில் நடந்த நிகழ்வுகளை பகிர்ந்திருக்கிறார்.
சென்னை: தற்போது ஜீ5 பிரேமில் வெளியான அயலி வெப் சீரிஸ் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது.
இந்த வெப் சீரிஸில் பெண் கல்வி மற்றும் பல மூட நம்பிக்கைக்கு எதிராக ஒரு பெண் குரல் கொடுப்பது சமூகத்தில் ஒலித்து இருக்கிறது.
இந்த நிலையில் இந்த வெப் சீரிஸில் வரும் கதையைப் போன்று தன்னுடைய வாழ்க்கையிலும் நடந்து இருக்கிறது என்று வெப் சீரிஸில் நடித்த நடிகை அனுமோல் கூறி இருக்கிறார்.
தான் ஏழாம் வகுப்பு படிக்கும் போதே தன்னைப் பெண் பார்க்க மாப்பிள்ளை வீட்டார்கள் வரத் தொடங்கி விட்டார்கள் என்றும் இப்போது வரைக்கும் நான் திருமணத்தை தள்ளிப்போட்டு கொண்டிருக்கிறேன் என்று கூறியிருக்கிறார்.

மலையாள நடிகை
ஜீ 5 பிரேமில் ஒளிபரப்பான அயலி வெப் சீரிஸ் தற்போது அதிகமான ரசிகர்களை கவர்ந்திருக்கிறது. இந்த வெப் சீரிஸ் 8 எபிசோடுகளை கொண்டிருக்கிறது. இதில் கதாநாயகி தமிழ்ச்செல்வியாக அபி நட்சத்திரா நடித்திருக்கிறார். அவருடைய அம்மா கேரக்டரில் அனுமோல் நடித்திருக்கிறார். அனுமோல் மலையாள மற்றும் தமிழ் திரைப்படங்களில் நடித்து வருகிறார். இவர் தமிழில் கண்ணுக்குள்ளே, ராமர் மற்றும் சூரன் ஆகிய திரைப்படங்களில் நடித்திருக்கிறார். திரைப்படங்களில் பல்வேறுபட்ட கேரக்டரில் இவருடைய நடிப்பை காட்டி இருக்கிறார். பல புரட்சிகரமான திரைப்படங்களில் இவர் நடித்து பலருக்கும் பரிட்சயம் ஆகி இருக்கிறார்.

புரட்சிகரமான நடிப்பு
குறிப்பாக கேரளாவில் வட மலபார் பகுதியில் உள்ள காசர்கோடு மாவட்டத்தில் பின்னணியில் ஒரு நூற்றாண்டுக்கு முன்பு கேரளாவில் நிலவிய சாதி பாகுபாடு மற்றும் தடைகள் பற்றிய திரைப்படமான "நிலா வரியாதே" படத்தில் அனுமோல் ஒரு வழக்கறிஞராகவும், இன்னொரு திரைப்படத்தில் அவர் ராயல் என்ஃபீல்டு பைக்கை 130 கிலோ மீட்டர் வேகத்தில் ஓட்டும் பெண்ணாகவும் நடித்திருக்கிறார். இவர் பலதரப்பட்ட கேரக்டரில் நடித்திருந்தாலும் இவருடைய தைரியமான கேரக்டர்கள் தனித்துவமா வாய்ந்ததாக இருக்கிறது. அதுமட்டுமில்லாமல் இவருக்கு கதகளி மற்றும் பரதநாட்டியமும் கற்று இருக்கிறார்.

படிப்புக்கு ஏற்பட்ட தடை
இத்தனை திறமைகளை வைத்திருக்கும் இவர் அதிகமான விருதுகளையும் வாங்கி குவித்து இருக்கிறார். இந்த நிலையில் தற்போது இந்த அயலி திரைப்படத்தில் இவர் அம்மா கேரக்டரில் நடித்திருக்கிறார். திரைப்படத்தில் இவருடைய வாழ்க்கையில் நடந்த பல நிகழ்வுகள் இந்த திரைப்படத்தோடு கனெக்டாகி இருக்கிறது என்று அவர் கூறியிருக்கிறார். அதில் இவருடைய அப்பா இவருக்கு ஏழு வயதாக இருக்கும்போது இறந்து விட்டாராம். அதற்குப் பிறகு இவரை படிக்க வைக்க இவருடைய அம்மா கஷ்டப்பட்ட போது கூட உறவினர்கள் பலர் எதற்காக பெண் பிள்ளையை படிக்க வைக்க வேண்டும் என்று பல்வேறு கேள்விகளை எழுப்பி இருக்கிறார்கள். தொடர்ந்து பலர் பெண் படித்து என்ன செய்யப் போகிறார் என்று கேள்வியை தான் எழுப்பியிருந்தார்களாம்.

படிப்பு முக்கியம்
படிப்பதற்கே அப்படி என்றால் நடிப்பதற்கு சொல்லவா வேண்டும். இவர் அப்பா இல்லாத பிள்ளை எதற்காக படிக்கிறாள்? எதற்காக நடிக்கிறாள்? என்றெல்லாம் கேள்விகள் இவரை துரத்திக் கொண்டே இருக்க, இவர் திரைப்படங்களின் நடிகையாக மட்டுமல்லாமல் சில திரைப்படங்களை ஒளிப்பதிவாளராகவும் இருந்திருக்கிறார். இந்த நிலையில் இவர் ஏழாம் வகுப்பு படிக்கும் போது இவருக்கு மாப்பிள்ளை வீட்டார் வரத் தொடங்கி விட்டார்களாம். இவரை பெண் பார்ப்பதற்காக அப்போதிருந்தே மாப்பிள்ளைகள் வீட்டார் வர தொடங்கி இருக்கின்றனர். அவர் இப்போது வரைக்கும் திருமணம் செய்து கொள்ளாமல் வரும் மாப்பிள்ளை வீட்டாரை ரிஜெக்ட் செய்து கொண்டு தான் இருக்கிறேன் என்று கூறியிருக்கிறார். இந்த திரைப்படத்தில் பெண் கல்வி மறுக்கப்பட்டது எனக்கு ஏற்கனவே நடந்தது தான் என்று அவர் கூறியிருக்கிறார். அதுமட்டுமல்லாமல் ஆணாக இருந்தாலும் சரி பெண்ணாக இருந்தாலும் சரி கல்வி என்பது மிக மிக முக்கியம். அதில் பாகுபாடு காட்டாமல் அனைவரும் படிக்க வேண்டும் என்று விழிப்புணர்வையும் ஏற்படுத்தி இருக்கிறார்.
-
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..!












Click it and Unblock the Notifications