பாக்யாவை பழிவாங்க கோபி எடுக்கும் முடிவு.. கோபிக்கு ஆதரவாக மாறிய ஈஸ்வரி.. எழிலின் எதிர்பாராத செயல்
சென்னை: பாக்கியலட்சுமி சீரியலில் பாக்கியாவின் பெயரை சுவற்றில் மாட்டியதால் கோபி கடும் கோபத்தில் வீட்டிற்கு வந்து பாக்கியாவை திட்டுகிறார்.
எழில் செய்த செயலால் பாக்யாவின் மீது கோபத்தில் கோபி வீட்டை விற்க முடிவு செய்து இருக்கிறார்.
கோபிக்கு ஆதரவாக பாக்கியாவை ஈஸ்வரி திட்டுகிறார்.

பாக்கியாவை அசிங்கப்படுத்தும் கோபி
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் இன்று எபிசோட் ஆரம்பத்தல்
வீட்டுக்கு வந்த கோபி பாக்கியாவை கண்டபடி பேசுகிறார். வீடு இன்னமும் என் பெயரில் தான் இருக்கிறது. டாக்குமெண்ட் இன்னமும் என்னுடைய பெயரில் தான் இருக்கிறது. அப்படி இருக்கும் போது எப்படி உன்னுடைய பெயரை மாட்டலாம். உன்னுடைய பெயருக்கு மாற்றி வீட்டை ஏமாற்றி எடுத்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்து வைத்திருக்கிறாயா? ரெண்டு மாசம் 40 ஆயிரம் பணம் கொடுத்துட்டா வீடு உன் பேருக்கு வந்துடுமா? அடுத்தவன் சொத்துக்கு ஆசைப்படுறியே உனக்கு வெட்கமா இல்லையா? என பாக்யாவை அசிங்கப்படுத்தி பேசி விட்டு செல்கிறார்.

திட்டும் ஈஸ்வரி
அடுத்து கோபி சென்றதும் ஈஸ்வரி கோபிக்கு ஆதரவாக பாக்கியாவை திட்டுகிறார். எழிலிடம் நீ எதற்கு இந்த தேவையில்லாத வேலை செய்தாய் வீடு அவன் கஷ்டப்பட்டு கட்டியது தானே என்று ஈஸ்வரி பேச ஜெனியும் தாத்தாவும் ஈஸ்வரியை குறை கூறுகின்றனர்.பாக்கியா மட்டும் டைவர்ஸ் கொடுக்கும் போது எனக்கு பணம் வேண்டும் என்று கேட்டிருந்தால் கோபி பணம் கொடுத்து இருக்கணும், இந்த வீட்டை கூட எழுதிக் கொடுத்து இருக்கணும். ஆனால் இப்போ வந்து இப்படி எல்லாம் பேசுகிறார் என்று ஜெனி பேசியதும் ஈஸ்வரி என்னமோ சொல்லுங்க போங்க என கோபத்தோடு பேசுகிறார். அப்போது பாக்கியா என் மீது தான் தப்பு நான் அவருக்கு இந்த மாசம் பணம் அனுப்ப மறந்தது இதை இப்போது நான் அனுப்பி விடுகிறேன் என்று பாக்யா கூறுகிறார்.

எழில் கொடுத்த பதில்
எழிலிடம் ஈஸ்வரி திட்ட இது அம்மாவோட வீடு தானே என எழில் சொல்ல, உங்க அம்மாவோட வீடா? அவ இந்த வீட்டுக்கு பணம் போட்டாளா? என சொல்ல அம்மா சொத்துல பங்கு கேட்டிருந்தா இந்த வீடு அவங்களுக்கு தான் வந்து இருக்கும். அவர்தான் இந்த வீட்டில இல்லையே அவருடைய பெயர் மட்டும் எதுக்கு என சொல்ல ஏதோ பண்ணுங்க என்று கோபத்தோடு ஈஸ்வரி கிளம்பி செல்கிறார் .அது மட்டும் அல்லாமல் பாக்கியா கோபிக்கு பணத்தை அனுப்புகிறார். கோபத்தோடு வீட்டுக்கு சென்ற கோபி பாக்கியா பணம் அனுப்பினதை பார்த்ததும், ராதிகாவிடம் பார்த்தியா நான் போயிட்டு சண்டை போட்டதுனால எனக்கு பணம் அனுப்பி இருக்கிறார். இப்படி அனுப்பிக்கிட்டு இருந்தா? இதுக்கு ஒரு முடிவு கட்டனும் என்று கோபி மீண்டும் பாக்யா வீட்டுக்கு வருகிறார்.

கோபியின் புது முடிவு
கோபி கலட்டி வீசிய பாக்கியலட்சுமி நேம் போர்ட் மீண்டும் எழில் சுவற்றில் மாட்டி வைத்திருக்க அதை பார்த்த கோபி சிரித்துக்கொண்டே வீட்டிற்குள் வந்து எல்லோரையும் கூப்பிட்டு வைத்து ஒரு முக்கியமான விஷயம் ஒன்று பேச போகிறேன் என சொல்கிறார். அனைவரும் கோபி என்ன பேசப்போகிறார் என்று காத்திருக்க, அப்போது அங்கே ராமமூர்த்தி மட்டும் இல்லாததால் ராமமூர்த்தியையும் போன் செய்து வர வைத்து, அனைவரின் முன்னிலையிலும் இப்பவும் இந்த வீடு என் பெயரில் தான் இருக்கு, இந்த வீட்டை விற்கலாம்னு நான் முடிவு பண்ணி இருக்கிறேன் என சொல்ல அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர். இத்துடன் இன்று எபிசோடு முடிவடைகிறது.












Click it and Unblock the Notifications