பாக்கியாவை பழிவாங்க கோபியின் சூழ்ச்சி..எழிலுக்கு செக் வைக்கும் ஈஸ்வரி..ராமமூர்த்தி எடுக்கும் முடிவு?

பாக்கியலட்சுமி சீரியலில் கோபியின் அப்பா வீட்டை விற்க இருந்த நிலையில் கோபி அதை தடுத்து நிறுத்தி இருக்கிறார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: பாக்கியலட்சுமி சீரியலில் வீட்டை விற்க விடாமல் கோபி புது சூழ்ச்சி செய்கிறார்.

இனியாவின் மூலமாக கோபியின் அப்பா என்ன செய்ய முடிவு எடுக்கிறார் என்பதை தெரிந்து கொண்ட கோபி ராமமூர்த்தியின் முயற்சியை தடுத்து நிறுத்துகிறார்.

கோபி வீட்டை தன்னுடைய கையெழுத்து இல்லாமல் இருக்க முடியாது என்று வீட்டை வாங்க இருந்தவருக்கு போன் செய்து மிரட்டி இருக்கிறார்.

கண்கலங்கும் ராமமூர்த்தி

கண்கலங்கும் ராமமூர்த்தி

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் பாக்யா ராமமூர்த்தி இடம் நீங்க உங்க மகனுக்கு என்னை திருமணம் செய்து வச்சிருக்கவே கூடாது. அவருக்கு என்ன சுத்தமா பிடிக்கலை. இந்த வீட்டிற்கு என் பெயர வச்சதனால தான் இவ்வளவு பிரச்சனை. இதுவே உங்க பெயர் அல்லது அத்தை பெயர் வைத்திருந்தால் இவ்வளவு கோபப்பட்டு இருக்க மாட்டாரு. நீங்க அவருக்கு என்னை கல்யாணம் பண்ணி வச்சிருக்காமல் இருந்தால் அவரும் சந்தோஷமாக இருந்திருப்பார். நான் உங்களை கஷ்டப்படுத்தணும்னு சொல்லல,25 வருஷமா அவரும் சந்தோஷமாக வாழலை, நானும் நிம்மதியாக வாழவில்லை. நான் ஏன் அவருக்கு விவாகரத்து கொடுத்தேன் தெரியுமா, அந்த ஒரு நிமிஷம் மட்டும் தான் நான் எனக்காக யோசித்தேன். இனி யாரும் என்னை பிடிக்கலைன்னு சொல்ல மாட்டாங்க. அப்படின்னு தோணுச்சு அது அவருக்கு மட்டும் விடுதலை இல்லை எனக்கும்தான் விடுதலை என பாக்யா சொல்ல ராமமூர்த்தி கண்கலங்கி அழுகிறார்

கோபியின் சூழ்ச்சி

கோபியின் சூழ்ச்சி

அடுத்ததாக எழில் வீட்டிற்கு வந்து பாட்டி இடம் பேச முயற்சி செய்கிறார். அதற்கு ஈஸ்வரி கோபப்படுகிறார். பிறகு ஜெனி எழிலுக்கு டீ போட்டுக் கொடுத்து பாட்டி செய்கிறது எதுவும் சரியில்லை என சொல்ல, நீங்க இங்க நடக்கிற இந்த விஷயத்தை அம்மாகிட்ட எதுவும் சொல்லாதீங்க. அவங்களுக்கு தெரிஞ்சா ரொம்ப கஷ்டப்படுவாங்க என எழில் கூறுகிறார். அடுத்து கோபி ஊரில் இருப்பவருக்கு போன் செய்து நிலம் வாங்குவதாக இருந்தவரிடம் அந்த சொத்தில் எனக்கும் பங்கு இருக்கிறது நான் கையெழுத்து போடாமல் அந்த இடத்தை விற்க முடியாது என்று கூறுகிறார்

கோபப்படும் தாத்தா

கோபப்படும் தாத்தா

எங்க அப்பா சொத்தை வித்தா நான் கோர்ட்டுக்கு போய் கேஸ் போடுவேன் என சொல்ல, அவர்கள் எங்களுக்கு இந்த சொத்து வேண்டாம் என்று ராமமூர்த்தி இடம் சொல்கின்றனர். அதற்கு ராமமூர்த்தி அதிர்ச்சியாகி இந்த இடம் நான் கஷ்டப்பட்டு உழைத்து வாங்குனது, அதில் எப்படி அவன் கையெழுத்து போட்டுத்தான் விற்க முடியும் என்று சொல்ல முடியும் என்று கோபத்தோடு பேசுகிறார். ஆனால் நிலத்தை வாங்க வந்தவர்கள் எங்களுக்கு இனி இந்த இடம் வேண்டாம் பிரச்சனை இருக்கிறது என்று கூறி சென்று விடுகின்றனர். இதனால் ராமமூர்த்தி அதிர்ச்சியாகி ஈஸ்வரிக்கு போன் பண்ணுகிறார்.

ஈஸ்வரி வைக்கும் செக்

ஈஸ்வரி வைக்கும் செக்

உன்னுடைய மகன் என்ன நினைச்சுகிட்டு இருக்கான் என்று நடந்த விஷயத்தை சொல்லி கோபப்படுகிறார். அவன் பிறந்த போது நான் அவ்வளவு சந்தோஷம் அடைந்தேன். ஆனா இப்ப சொல்லுறேன் அவன் நல்லாவே இருக்க மாட்டான். மண்ணோட மண்ணாகி போயிடுவார் என சாபம் விடுகிறார் .ஊருக்கு வந்து அவனுக்கு இருக்கு என போனை வைக்க, அப்போது எழில் மேலே இருந்து கீழே இறங்கி வர ஈஸ்வரி உனக்கு இப்போ சந்தோஷமா? உனக்கு உன் சந்தோஷம் மட்டும்தான் முக்கியம் இந்த குடும்பம் எப்படி போனாலும் உனக்கு கவலை இல்லை என திட்டி விட்டு உள்ளே செல்கிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+