ஈஸ்வரிக்கு தெரிய வந்த உண்மைகள்.. மயூ கேட்ட கேள்வியால் ஆடிப் போன கோபியின் அப்பா.. எதிர்பாராத திருப்பங்கள்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் ஈஸ்வரியிடம் செழியன் எழில் அமிர்தாவை காதலிக்கும் விஷயத்தை கூறிவிட்டார்.
தன்னுடைய பாட்டி, கோபியின் அப்பாவான ராமமூர்த்தியை பற்றி சொன்னதை எல்லாம் ராமமூர்த்தியிடம் மயூ போட்டுக் கொடுத்து விட்டார். இதை கேட்டு ராமமூர்த்தி மற்றும் இனியா அதிர்ச்சி அடைந்திருக்கின்றனர்.

பாக்கியாவை தடுக்கும் ஈஸ்வரி
பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோட் ஆரம்பத்தில் அசோசியேஷன் மீட்டிங் முடிந்து வீட்டுக்கு வரும் பாக்யா, செல்வியை திட்டிக்கொண்டே வருகிறார். வீட்டிற்கு வந்ததும் அங்கே என்ன நடந்தது என ஜெனி மற்றும் ஈஸ்வரி கேட்க, அங்கே நடந்த பிரச்சனைகளை எல்லாம் பாக்யாவும் செல்வியும் கூறுகின்றனர். செல்வி தன்னை வேண்டாத விதமாக மாட்டிவிட்டார். என்னால் எப்படி சமாளிக்க முடியும் என்று பாக்கியா கேள்வி கேட்க, ஜெனி சூப்பர் ஆன்ட்டி நீங்க எலக்சன்ல நின்னுங்க உங்களுக்கு நான் சப்போர்ட் பண்ணுகிறேன் என கூற, ஈஸ்வரி அதெல்லாம் வேண்டாம் நீ நிக்காத பாக்கியா ,உன்னால் வீட்டையும் பார்த்து, சமையல் ஆர்டர் பார்த்து இந்த வேலை எல்லாம் பார்க்க முடியாது என்று கூறுகின்றனர். நான் நிற்க மாட்டேன் நாளைக்கு போயிட்டு நான் நிக்கலைன்னு உறுதியா சொல்லிடுவேன் என பாக்யா கூறுகிறார்.

தாத்தா நல்லவரா கெட்டவரா
அடுத்து பாக்கியா எழிலுடன் பேங்குக்கு சென்று கேன்டீன் ஆர்டர் எடுப்பதற்காக 7 லட்சம் ரூபாய் லோன் வேண்டும் என கேட்கிறார். பேங்கில் இருக்கும்போது இதற்கு முன்பு கோபியோடு இங்கே வந்த நினைவு வர ஒரு நிமிடம் பாக்கியா கண்கலங்கி பின்பு நார்மலாக மாறுகிறார் .பேங்கில் நாங்கள் செக் பண்ணி பார்த்துவிட்டு உங்களுக்கு போன் செய்கிறோம் என்று அனுப்பி வைக்கின்றனர். அடுத்ததாக ராமமூர்த்தி, இனியா மற்றும் மயூக்கு கதை சொல்லிக் கொண்டிருக்கிறார். அப்போது மயூ நீங்க நல்லவரா? கெட்டவரா? என்று ராமமூர்த்தி இடம் கேள்வி கேட்க, இனியா என் தாத்தா ரொம்பவே நல்லவர் தான். ஏன் உனக்கு என்ன சந்தேகம் என கேட்க, எங்க பாட்டி ஊரில் இருந்து போன் செய்யும்போது அந்த தாத்தா ரொம்ப மோசம். அடிப்பாரு, திட்டுவாரு என்று உங்களை குறித்து சொல்லுவாங்க என சொல்ல ஒரு நிமிடம் ராமமூர்த்தி அதிர்ச்சியாகி, பின்பு குழந்தையிடம் என்னெல்லாம் சொல்லி வைத்திருக்காங்க பாரு என்று தனக்குத்தானே பேசிக்கொண்டு, நான் உன்னை திட்ட மாட்டேன் அடிக்கவும் மாட்டேன் என்று அன்பாக பேசுகிறார்.

ராதிகாவின் புது சமையல்
அப்போது அங்கே ராதிகா வந்து இவர்கள் அனைவரும் பேசிக் கொண்டிருப்பதை பார்த்துக்கொண்டு இவர்களுக்கு காபி கொண்டு கொடுக்கிறார். பின்பு ராதிகா, கோபி, இனியா வீட்டை விட்டு கிளம்பியதற்காக திட்டியதை நினைத்து பார்க்கிறார். அதற்குப் பிறகு இன்றைக்காவது ஸ்பெஷலா சமைக்க வேண்டும் என வீடியோ பார்த்து சமையல் செய்து கொண்டிருக்கிறார். இந்த பக்கம் செழியன் ஜெனிக்கு ஆப்பிள் கட் செய்து கொண்டு கொடுத்துக் கொண்டிருக்க அப்போது எழில் அங்கே வந்து ஆப்பிளை சாப்பிட்டபடி பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது ஈஸ்வரி எதுக்குடா தாடியை இப்படி வச்சுக்கிட்டு இருக்க ,நல்லாவே இல்லை என திட்டிக் கொண்டிருக்க போன் வந்ததும் எழுந்து செல்கிறார்.

போட்டுக் கொடுத்த செழியன்
அப்போது செழியன் காதல் தோல்வி என எழியனை கோர்த்து விட உண்மையாகவா? என ஈஸ்வரி கேட்க ஆமா அவனுக்கு ஒரு பெண் மேல இன்ட்ரஸ்ட் இருக்கு என சொல்ல அமிர்தா என்கிற பெயரை மட்டும் சொல்லிராத என ஈஸ்வரி பதறி போய் சொல்ல, அந்த பொண்ணு மேல தான் என நான் நினைக்கிறேன் என்று உண்மையை உடைக்கிறார். ஜெனி எவ்வளவோ தடுத்தும் கேட்காத செழியன் அனைத்து உண்மைகளையும் கூறியதால் ஈஸ்வரி அதிர்ச்சி அடைகிறார். இதற்கு ஒரு காலமும் நான் சம்மதிக்க மாட்டேன் அவங்க இரண்டு பேரையும் சேர விட மாட்டேன் என ஈஸ்வரி உறுதியாக கூறிக் கொண்டிருக்கிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி












Click it and Unblock the Notifications