Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ராதிகாவை அவமானப்படுத்திய மூர்த்தி..கோபி எடுத்த திடீர் முடிவு..இப்படி மாறிவிட்டாரே! மகா சங்கமம் அப்டேட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் பாக்கியலட்சுமி சீரியல் மற்றும் பாண்டியன் ஸ்டோர் சீரியல் மகா சங்கமம் நடந்து வருகிறது.

ராதிகா மற்றும் கோபியின் இரண்டாவது திருமணத்தை பற்றி தெரியாத கண்ணன் செய்த ரகளை நிகழ்ச்சிக்கு விறுவிறுப்பு ஏற்படுத்தி இருக்கிறது.

பாண்டியன் ஸ்டோர் குடும்பத்திடம் வசமாக சிக்கி இருக்கும் ராதிகா கோபியை மூர்த்தி வார்த்தைகளால் வசைப்பாடி இருக்கிறார்.

தப்பித்துக் கொண்ட கோபி

தப்பித்துக் கொண்ட கோபி

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி மற்றும் பாண்டியன் ஸ்டோர் சீரியல் மகா சங்கமம் ஒளிபரப்பாகிவிடுகிறது. இந்த சீரியலில் இரண்டு குடும்பமும் கொடைக்கானலுக்கு சென்றுள்ளது. ஒரு மணி நேரமாக ஒளிபரப்பாகும் இந்த சீரியலில் இன்றைய எபிசொட்டில், எல்லோரும் வெளியே செல்ல வேண்டும் என்று முடிவு எடுக்கிறார்கள். அப்போது இனியா எனக்கு மேக்கப் போட வேண்டும் என்று ஐஸ்வர்யாவை கூட்டிக்கொண்டு செல்கிறார். பெண்கள் எல்லோரும் அறைக்கு சென்ற நேரத்தில் கண்ணன், எழில், மூர்த்தி, குருமூர்த்தி என அனைவரும் வெளியே அப்படியே நடந்து விட்டு வரலாம் என்று கிளம்பி இருக்கிறார்கள். அப்போது கோபி மற்றும் ராதிகா இருவரும் செல்பி எடுத்துக் கொண்டு ஜாலியாக சுற்றி வருகிறார்கள்.

குடும்ப கதை

குடும்ப கதை

கண்ணனுக்கு தலை வலிக்கிறது அதனால் நான் ரூமிலே படுத்து தூங்க போகிறேன் எனக் கூறுகிறார். அதனால் மற்றவர்கள் எல்லாம் ஜாலியாக வெளியே புல்வெளியில் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது பாக்கியா முல்லை கர்ப்பமாக இருக்கிறாரா? என்று கேட்கிறார். அதற்கு தனம் இல்லை சும்மா தான் இருக்கா என சொல்லி தற்போது கதிர் முல்லை தங்களுடன் இல்லை என்ற விஷயத்தையும் கூறுகிறார். அதே நேரத்தில் மீனா குழந்தைக்கு சாப்பாடு ஊட்டி விட்டு சினிமாவுக்கு போகலாம் என ஜீவாவிடம் கேட்கிறார். அதற்கு ஜீவா கடையில் ஆள் இல்லை நாளைக்கு போகலாம் என கூறுகிறார்.

கண்ணன் செய்த சேட்டை

கண்ணன் செய்த சேட்டை

குடும்பத்தினர் அனைவரும் பேசிக் கொண்டிருக்கும்போது மூர்த்தி கோபிக்கு போன் போடலாம் என போனை எடுத்து போன் செய்கிறார். அப்போது கோபி போனை எடுக்கவில்லை என்ன நடக்குமோ என்று அதிர்ச்சியோடு காத்திருந்த குடும்பத்தினருக்கு ஃபோன் எடுக்காததால் நிம்மதி அடைந்தனர். அதே நேரத்தில் கண்ணன் தூக்கத்திலிருந்து எழுந்து அறையை விட்டு வெளியே வருகிறார். அப்போது கோபி போன் பேசிக்கொண்டு இருப்பதை பார்த்து என்ன மாம்ஸ் நீங்க என்ன இங்க ?சர்ப்ரைஸ் கொடுக்க வந்தீங்களா? என கேட்டு கோபியை கட்டிப்பிடித்து இந்த ரூமில் தான் இருக்கீங்களா என்று ஓடி அறைக்குள் இருக்கும் பெட்டில் படுத்து சேட்டை செய்து கொண்டிருக்கிறார். அப்போது சத்தம் கேட்டு ராதிகா வருகிறார்.

கரடியாக நுழைந்த கண்ணன்

கரடியாக நுழைந்த கண்ணன்

கண்ணனைப் பார்த்து ராதிகா யார் இவர்? என்று கேட்டு எங்க அக்காவுக்கு துரோகம் பண்றீங்களா? உங்களை சும்மா விடமாட்டேன் என சத்தம் போட்டு விட்டு ஓடியே சென்று பாக்கியாவை கட்டிப்பிடித்து உங்களுக்கு இப்படி நடந்துருச்சு என அழுகிறார். பிறகு கோபி மாம்ஸ் அக்காவுக்கு துரோகம் பண்ணுகிறார் வாங்க என்று மூர்த்தியின் கையைப் பிடித்துக் கொண்டு ஓடி வருகிறார். எழில் எவ்வளவோ தடுத்தும் நிற்காமல் இவர்கள் இருவரும் ஓடி வருகின்றனர். அதே நேரத்தில் கோபி ராதிகாவை சமாதானம் செய்து கொண்டிருக்கிறார். அப்போது கண்ணன் வந்து கதவை வேகமாக தட்டுகிறார். கோபி கதவை திறந்ததும் மூர்த்தி என்ன மச்சான் நீங்க இங்க இருக்கீங்க ? என கேட்க கோபி எல்லாம் உன் வேலை தானா? என எழிலை திட்டுகிறார்.

கோபி கூறிய உண்மை

கோபி கூறிய உண்மை

கண்ணன் உள்ளே வந்து பாருங்க யார் இருக்காங்கன்னு தெரியும் என உள்ளே மூர்த்தியை கூட்டிக் கொண்டு வருகிறார். அங்கே ராதிகாவை பார்த்ததும் மூர்த்தி அதிர்ச்சி அடைகிறார். நான் எவ்வளவு சொல்லியும் நீங்க திருந்தல இரண்டு பேர் கிட்டயும் பேசிட்டு தானே வந்தேன். இப்படி கட்டின பொண்டாட்டியை விட்டுட்டு இன்னொரு கூட்டிட்டு வந்து லாட்ஜில் ரூம் போட்டு தங்க உங்களுக்கு அசிங்கமா இல்லையா? என கடும் கோபத்தில் மூர்த்தி கோபியையும் ராதிகாவையும் திட்டுகிறார். அப்போது கோபி கோபமாகி யாரு அடுத்தவங்க இவ என்னோட பொண்டாட்டி! நான் தொட்டு தாலி கட்டுன பொண்டாட்டி ...என சொல்லி ராதிகாவின் கழுத்தில் இருந்த தாலியை எடுத்துக்காட்டுகிறார். உண்மை தெரியாமல் இருந்த மூர்த்தி மற்றும் கண்ணன் இருவரும் அதிர்ச்சி அடைந்து இருக்கிறார்கள். ராதிகாவும் கடும் கோபத்தில் தான் இருத்து வருகிறார். இதோடு இன்றைய எபிசோடு முடிந்து இருக்கிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+